12 மார்., 2022

குட்டிக்கதை

இன்று ஒரு கதை. எங்க வீட்டுத் தோட்டத்தில் ஒரு மாமரத்தில் ஒரு காக்கை கூடு கட்டி முட்டைகளிட்டிருந்தது.காகம் இரை தேடி போனபோது ஒரு கழுகு கூட்டில் நுழைந்து காக்கா முட்டைகளை கொத்திக் குடித்து விட்டு  வெளியேறி  யது. அந்த தருணத்தில் வந்த தாய் காகம் இழப்பை உணர் ந்து கழுகின் பிடறி யில் தொத்திக் கொத்தியது.கழுகு கண்டு கொள்ளாது உயரப்பறந்தது. காகமும் கழுகின் மீதமர்ந்து  கொத் திக் கொண்டே கழுகோடு பறந் தது. கழுகு தாங் கிக் கொண்டே உயரஉயர பறந்தது. காகத் தின் பறப்பு எல்லையைக் கடந்ததும்  கழுகு பிடறியை சிலிர் த்து உதறியது. காகம் மேலிருந்து அதிர்ந்து கீழே குற்றுயிராய் விழுந்தது.பிற காகங்கள் கூடி கரைந்தன.நீ  ஒத்தையாக பறக்கும் போதே நாங்களும் சேர்ந்து கழுகை தாக்கி இருந்தால் அந்தக் கழுகை வீழ்த்தி இருக்கலாம்.உனக்கும் ஆபத்து நேர்ந்திருக்காது. கழுகுகளுக்கும் படமாக இருந்திருக்கும் என்று புலம்பின. புலம்புகின்றன என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.

நன்றி :
கவிஞர் ஜனநேசன் 

கருத்துகள் இல்லை: