29 ஏப்., 2022

கவிதை நேரம்

ஆட்டோ

அவசர யுகத்தின்
அழகிய வாகனம்
சாலையில் பறக்கும்
மஞ்சள் பறவை!

நெடுஞ்சாலை எங்கும்
ஆட்டோவின் கூவல்
மாநகர அரக்கன்
வளர்க்கும்சேவல்!

சந்திலேபாயும்
சடக்கெனத் திரும்பும்
குண்டும்குழியும்
பொருட்படுத்தாது
குறிக்கோள் நோக்கியே
சென்று கொண்டிருக்கும்!
குழந்தை கூட
ஆட்டோ என்றால்
வயசு பாராமல்
வந்து நிற்கும்

மறந்து வைத்த பணமும் நகையும்
மறுபடி உங்களைச்
சேர்வதால் சொல்கிறேன்
 
ஆட்டோவுக்கும்
ஆன்மா உண்டு!

சிக்கல்கள் மிகுந்த
நகரத்து வாழ்க்கையில்  ஆட்டோ என்பது
சிறு தெய்வம்
வழிபடுஇல்லையேல்
வழிவிடு!

நன்றி :
தஞ்சாவூர்க்கவிராயர் 

கருத்துகள் இல்லை: