19 மார்., 2023

நூல் நயம்

" ஆகாய ஓவியம் ".
கௌதம நீலாம்பரன். லக்சன்யா பதிப்பகம் முதல் பதிப்பு 2003 .விலை ரூபாய் 70. மொத்த பக்கங்கள் 160.

இது ஒரு சிறுகதை தொகுப்பு :

ஆசிரியர் குறிப்பு:

கௌதம நீலாம்பரன்:
தீபம் இலக்கிய மாத இதழில் துவங்கி, இதயம் பேசுகிறது,ஞானபூமி, ஆனந்த விகடன், குங்குமம் என்று இதழியப் பணியில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக இருந்தார். தமிழின் முன்னணி வார, மாத இதழ்கள் அனைத்திலும் சரித்திர ந வீனங்கள், சமூக நவீனங்கள், சிறுகதைகள், கவிதைகள் எழுதியவர். வானொலி. தொலைக்காட்சிகளிலும் இவரின் படைப்புகள் பல இடம் பெற்றிருக்கின்றன.

****

       இந்தப் புத்தகத்தில் மொத்தம் 19 கதைகள் எழுதப்பட்டு இருக்கிறது .ஒவ்வொன்றும் ஒரு ஒவ்வொரு விதமாக கற்பனை கலந்த சில கதைகள் உண்மை நிகழ்ச்சிகளை கொண்டு சில கதைகள் என்று எழுதப்பட்டிருக்கிறது.

1. ஆகாய ஓவியம்
2. நரகாசுரவதம்
3. தெருச் சந்நிதி
4.சுக சொப்பனம்
5. வேஷ உறவுகள்
6. கரிப்பூச்சு
7. ஓய், நீர் பண்றது நியாயமா?
8.விரிசல் விழாத அலைகள்
9. விடலைச் சவால்கள்
10. கலகலப்பாய் ஒரு கயமை

11.வெள்ளை ஆசைகள்
12.அன்பு வேஷம்
13.கனவுகள் - கற்பனைகள் - நிஜங்கள்
14.ஆத்மாவின் மவுனம்
15.வானில் இல்லை வயல்கள்
16. இருவரும் கை கோர்த்து
17. ஆழம்
18.புதைமணல்
19.அக்கினிப் பரீட்சை.

         ஆயிரம் காவியங்கள் சொல்லாத ஒரு செய்தியை, வெகு நேர்த்தியாக எடுத்துரைக்கிறது 'ஆகாய ஓவியம்' என்பேன் நான். புகழ்ச்சியாகி விடுமோ என்னும் தயக்கம் எனக்கில்லை. 'செய்தக்க செய்யாமையானும் கெடும்' என்பதை அறிந்ததால் வந்த துணிவு இது. நல்லோரை இகழ்தல், நல்லவை விலக்கல் என தீப்பண்புகளின் திறன் ஓங்கியதால்தான் நாடு இன்று நசிவு இலக்கியங்கள் - நச்சுக் கலைகள் வளர்த்துத் தடம்புரண்டு, தட்டுத் தடுமாறிக் கிடக்கிறது.

      என்றோ ஒரு விழிப்பு எங்கோ உதிக்குமென்று, 'பரித்ராணாய சாதூனாம்' பாடிக் கொண்டிருத்தல் ஆகாது. ஒரு சுய விழிப்பு ஒவ்வொரு ஆத்மனிலும் தோன்றிப் பிரகாசிக்க வேண்டும்...

தளைகள் அனைத்தும் உடைத்தெறிய நீ அல்லல்பட வேண்டாம். அவை வெறும் மாயை சூரியக்கதிர்ப் பட்டதும் விலகி அழியும் பனிப்படலமே உன்னைப் பூட்டி வைத்தவன் சாவியையும் உன் புத்திக்குள்ளேதான் வைத்திருக்கிறான். தேடு எடு திற

இந்த எண்ணங்கள்தான் இந்தச் சிறுகதைகளால் இத்தொகுதி
முழுக்கப் பரிமளிக்கின்றன.

1)
'ஆகாய 'ஓலியம்': கதை ஆயிரம் பேர் சிந்தையிலாவது ஆல விருட்ச விதைகளைத் தூவும் என்பது என் நம்பிக்கை. 

அண்டா குண்டா ஆகாயம் சாமியார் ஒரு கிராமத்திற்கு வருகிறார் .பல நாட்களாக கவனிக்கப்படாது இருந்த ஒரு இடத்தில் ஒதுக்குப்புறமாக இருந்த அவரை சிலர் அழைத்துச் சென்று குளத்தருகே விடுகிறார்கள். கிராமத் தலைவர் அந்த மடத்தையே அந்தத் துறவி தங்கிக் கொள்ள சம்மதிக்கிறார்.
          துறவியாக இருந்தும் சாமியாராக இருந்தும் அண்டா குண்டா ஆகாயம் என்கிற பெயர் பெற்று விளங்கிய அந்த சாமியார் சிறு பிள்ளைகளோடு குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருப்பார் .
         அவர்களுக்கு விஞ்ஞானம் கணிதம் ஆன்மீகம் குறித்து போதனை செய்வார் .சித்து விளையாட்டுகளும் விளையாடுவார் .ஆனால் ஊர் உலகத்துக்கு தெரியாமல் குழந்தைகளிடம் ரகசியம் காத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்வார் .

       இப்படிப்பட்ட நிலையில் மடத்தை சுத்தம் செய்வதற்காக பழுதுபட்டு சின்னாபின்னமாகக் கிடந்த சுதையால் ஆன சிலைகளை உடைத்து அந்த கம்பிகளை பொறுக்கி எடுத்து பத்திரமாஸ் விளக்கு வைத்து ஒளி ஊட்டுகிறார் மடத்துக்கு .

       இதைக் கண்டு பொறுக்காத சிலர் அந்த சிலைகளை உடைத்து விட்டதாக அவரை நைய புடைக்காமல் வார்த்தையால் விளாசி கிராமத் தலைவரால் ஊரைவிட்டு வெளியேற்றப்படுகிறார் .
         சில மாதங்களுக்கு பிறகு தான் எல்லோருக்கும் புரிகிறது ஒரு நல்ல ஆத்மாவை ஊரை விட்டு விரட்டி விட்டோமே என்று.
       ஆசிரியரின் ஆதங்கமும் அதுதான் .இன்று புற்றிசல் போல ஊர் எங்கும் கிளம்பி வந்து கொண்டிருக்கும் போலிச் சாமியார்கள் இருக்கின்ற நிலையில் இப்படிப்பட்ட நல்ல சாமியார்கள் மக்களால் கண்டு கொள்ளப்படுவதில்லை என்ற ஆதங்கத்தை ஆசிரியர் இந்த கதை மூலம் வெளிப்படுத்துகிறார்.

2"நரகாசுரவதம்' .

        நிச்சயம் ஆன்மிக உலகில் புதுச்சிந்தனை அலை பரப்பும் என்றே எண்ணுகிறேன். 

      தீபாவளி பண்டிகை குறித்தும் நரகாசுரன் கதை குறித்து ஆசிரியரின் பார்வை வித்தியாசமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது . ஒப்புக்கொள்ளத்தக்க அளவிலே கதை சொல்லப்பட்டிருக்கிறது.

"தீபாவளிக்கு ஒவ்வொரு ஸ்டேட்ல ஒவ்வொரு காரணம் சொல்றாங்க. ராமர் வனவாசம் முடிஞ்சு அயோத்தி திரும்பின நாள். மகாவீரர் பரி நிர்வாணமான தினம், மகாபலிச் சக்கரவர்த்தி அரியணை ஏறிய நாள்... இப்படி இன்னும் என்னென்னவோ சொல்றாங்க ஆனா, எல்லா ஊர்லயும் பொதுவா நரகாசுரவதம் தான் மேலோங்கி நிக்குது. நரகனை கிருஷ்ணர் அழிச்சார். சத்யபாமா அதுக்கு உதவினாங்க. சாகறப்ப நரகன். 'என் இறப்பை எல்லோரும் கொண்டாடணும்'னு வேண்டினான். அதனாலதான் தீபாவளி வந்துச்சு... இதுதானே கதை?'

'அப்படின்னா தீபாவளிக்கு நரகாசுர சதுர்த்தசின்னுல்ல பேர் வந்திருக்கணும்....? 'நரகசதுர்த்தசி'ன்னு ஏன் எல்லாரும் எழுதறாங்க. சொல்றாங்க...?"
என்று கேள்வி கேட்டுவிட்டு அதற்கான பதிலும் ஆசிரியர் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
       'நரக சதுர்த்தசி' ஒரு பழைய பண்டிகை அன்னிக்கு பார்த்து நரகாசுரனும் செத்தான். அது அவனோட காரணப்பெயர். உண்மைப் பெயர் பவுமன். அவன் கொடுமை செஞ்சதா சொல்லப்பட்டாலும் சாகறப்ப அவன், கிருஷ்ணா,நீத்தார் நினைவு நாள்னு மக்கள் கொண்டாடற ஒரு தினத்துல என்னை வதம் செஞ்சிருக்கே. நிச்சயமா மக்கள் என் நினைவு நாளைக் கொண்டாடாலாம் விட முடியாது'னு சொல்லியிருக்கான். அது காலப்போக்குல அவனோட நினைவு நாளாவே ஆயிடுச்சு..."

தீபாவளிக்கு இப்படி ஒரு புது
விளக்கம் கண்டுபிடிச்சி ஆசிரியர் சொல்லி இருக்கிறார்.
ஆனாலும், ஏதோ யோசிக்க வைக்கற மாதிரிதான் இருக்கு..."

இதுதான் உண்மை. மூணு தலைமுறைக்கு திதி, திவசம், தர்ப்பணம்னு செய்யறது நடைமுறையில் இருக்கு. அப்படிச் செய்ய முடியாம விட்டவங்க எப்பவாச்சும் ஒருமுறை காசிக்குப் போய் கங்கைக் கரையில் திதி கொடுத்தா போதும்னு நம்பறாங்க. இன்னும் புரட்டாசில மகாலய அமாவாசைன்னு ஒண்ணு கொண்டாடப்படுது. அடுத்து ஐப்பசில வர்ற அமாவாசைய ஒட்டித்தான் நரக சதுர்த்தசியும் வருது. தாத்தாவுக்கு ஒரு அண்ணன், தம்பி இருந்து, பிள்ளைங்க இல்லாம செத்துட்டாங்கனு வச்சுக்குங்க.. அவங்க சொத்தும் சேர்த்து நம்ம அப்பா, தாத்தா அனு பவிச்சிருப்பாங்க. அப்படி முகம் தெரியாத. பெயர் தெரியாத மூதாதையர்களுக்கும் நாம் நன்றி செலுத்தணும். அவங்க ஆன்மா நரகத்துல இருந்தா, விடுதலைக்கு நாம எதாச்சும் செய்யணும்னு உருவான பண்டிகைதான் 'நரக சதுர்த்தசி'. அவங்க நினைவுல மோட்ச தீபம் (கார்கில் தியாகிகளுக்கு அண்மையில் ஏத்தினமே. அது மாதிரி) ஏற்றுகிற பழக்கம்தான் தீபாவளியா ஆச்சு.

இதுல பட்டாசு புதுந்ததெல்லாம் பிற்காலப் பழக்கம். பாபர் - அக்பர் காலத்துலதான் சீன தேசத்துப் பட்டாசுக நம்ம தேசத்துல வந்து குவிய ஆரம்பிச்சுதுன்னு வரலாறு இருக்கு. இப்ப நம்ம வங்க பட்டாசு வெடிக்கறதை ஒரு சாஸ்திரம்னு கெட்டியா பிடிச்சுக்கிட்ட மாதிரி, முன்னோர்கள் நினைவு நாள்ங்கிற 'நரக சதுர்த்தசி'ய மறந்துட்டு, நரகாசுரன் கதைய கெட்டியா பிடிச்சுக்கிட்டாங்க.."
உறுதியாக தனது கருத்தை கதாபாத்திரம் மூலமாக நிலைநாட்டுகிறார் ஆசிரியர்.

        மண்ணைத் தோண்டி வைரம் எடுத்தாப்பல இருக்கு இந்த விளக்கம். 

3.அக்கினிப் பரிட்சை', '
4.வெள்ளை ஆசைகள்'
5., 'ஆழம்' போன்ற பல சுதைகள் நிஜச் செய்திகளின் நாக்கமாகவே எழுதப்பட்டவை.

     ஆசிரியர் கொஞ்சம் சமூகப் பிரக்ஞையுடன் எழுதியிருக்கிற இந்தக் கதைகள் அவரின் சமூக பிரக்ஞை  குறித்த அக்கறையை காட்டுகிறது.

        சேதுபந்தனம், பல்லவன் தந்த அரியணை, ஈழவேந்தன் சங்கிலி, கலிங்கமோகினி போன்ற பல்வேறு சரித்திர நவீனங்களில் கௌதம நீலாம்பரன் அவர்கள் ஒரு காலத்தைய சமூக நிகழ்வினையே விவரித்து இருந்தார்.
 நூற்றுக்கு மேற்பட்ட  சமூகச் சிறுகதைகளிலும் விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய சில குறுநாவல்களிலும் இவர் இன்றைய சமூக நிகழ்வினையே ஒரு சரித்திரப் பதிவாக்கி உள்ளார்.

நன்றி :
திரு கருணா மூர்த்தி 
மற்றும் 
முகநூல்

கருத்துகள் இல்லை: