22 நவ., 2024

அஞ்சலி 🙏🙏🙏🙏

ராஜ்கௌதமனுக்கு அஞ்சலி

எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், பண்பாட்டு ஆய்வாளர், தலித் சிந்தனையாளர் எனப் பன்முகம் கொண்ட பேராசிரியர் ராஜ்கௌதமன் நேற்று (நவம்பர் 13) காலமானார். தமிழ்ப் பண்பாட்டு வரலாறு சார்ந்து முன்னோடியான ஆய்வுகளைச் செய்தவர். பண்டைய இலக்கியங்களையும் நவீன படைப்புகலையும் மறுவாசிப்புச் செய்து மிக ஆழமான, அசலான பார்வைகளை முன்வைத்தவர். ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் எனப் பல துறைகளில் வீரியத்துடன் இயங்கியவர். தலித் திறனாய்வு முறையியலை உருவாக்கியவர்களில் ஒருவர். அவரது மறைவு தமிழ்ப் பண்பாட்டுச் சூழலுக்குப் பேரிழப்பு. காலச்சுவடு அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

@followers @highlight D.i. Aravindan Kannan Sundaram Raj Gauthaman

கருத்துகள் இல்லை: