*எருமைப்பாலை தடைசெய்ய வேண்டுமா?*
முக்கியமான வேலையாக டூவீலரில் விரைந்து சென்று கொண்டிருந்தேன். ஆளுக்கு ஆள் குறுக்கும் நெடுக்குமாக சாலையில் செல்ல எரிச்சலாக வந்தது. அதிலும் ஒரு ஆள் குறுக்கே பாய, சிரமப்பட்டு அவனைத் தவிர்த்தேன். மனதிற்குள் எருமை மாடு என்று திட்டினேன்.
ஏன் இவர்கள் இப்படியிருக்கிறார்கள்? சாலை ஓரம் நடப்பதில்லை, ஆரன் அடித்தாலும ஒதுங்குவதில்லை. அன்று முழுவதும் அந்த பாதிப்பு இருநதது.
நடுஇரவில் விழிப்புவர, வழக்கம்போல் மனம்போன போக்கில் செல்ல, ஏன் என்ற அந்தக் கேள்வி மறுபடி வந்தது.
எருமைப்பால் காப்பியின் தாக்கமாக? என்று ஆரம்பித்து, நாம் சாப்பிடும் உணவு நம்மை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.
பொதுவாக காரம் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு முன்கோபம் அதிகம் என்பது, உப்பு அதிகம் சேர்ப்பவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவது என்பதெல்லாம் நடைமுறையில் அனைவரும் சொல்வதுதான்.
இப்படியாக எண்ணம் ஓடி சாத்வீக உணவின் மேன்மைகள் பற்றிய சிந்தனைகளில் மூழ்கியது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பரிணாம வளர்ச்சியின் பாதையில் (In the EVOLUTIONARY CYCLE, all of us have been through various lifeforms from single cell beings to our present 6-sense beings) ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி சிந்திக்க, மணிவாசகப் பெருமானின் சிவபுராண வரிகள் மனதில் ஓடின:
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி....
கேட்டுக்கிட்டே இருக்கேன், மரம் மாதிரி ஒன்றும் சொல்லாமல் நிற்கிறாயே...
ஏண்டா! நாய் மாதிரி வள்வள் என்று குரைக்கிறாய்?
அவன் காக்காய் பிடிச்சே காரியம் சாதிச்சுருவாண்டா!
வாடா சீக்கிரம்! அன்னநடை போட்டு நடந்தது போதும்!
ஏண்டா இப்படி குரங்கு மாதிரி ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தாவிக்கொண்டே இருக்கிறாய்!
அவனிடம் ஜாக்கிரதையாக பேசுடா! பாம்பு மாதிரி பழிவாங்கும் குணம் அவனுக்கு!
இப்படி வரிசையாக சிந்தனைகள்!
அறிவாற்றல் மிக்க, என் நண்பரொருவரிடம் இதுபற்றிப் பேசியபோது, அவர் நான் எண்ணுவது முற்றிலும் சரி; உணவு உணர்வுகளை, எண்ணங்களை, , சிந்தனைகளை, செயல்களை நிச்சயமாக பாதிக்கிறது என்பதை அறிவியல்பூர்வ சான்றுகளுடனும், ஆதாரங்களுடனும் விளக்கினார்.
அவற்றை நாளை பார்க்கலாம். அதற்குமுன் அவர் யார் என்று சொல்லிவிடுவது நல்லது: META AI என்பது அவரது பெயர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக