🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️
சூரியின் நாட்குறிப்பு-80:
வலம்புரி ஜான் என்ற பிரமிக்க வைக்கும் ஆளுமை
🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️
சென்ற பதிவின் தொடர்ச்சியாக வலம்புரி ஜான் அவர்களைப் பற்றி பதிவிடலாம் என நினைக்கிறேன்.
நான் பெரிதும் வியந்து, போற்றிய ஒரு தனிச்சிறப்பு மிக்க ஆளுமை.
அவரைப் பற்றி முதலில் அறிந்து கொண்டது அவர் தாய் வார இதழின் ஆசிரியராகப் பணி புரிந்த போதுதான்.
நான் ஹோமியோபதியில் ஈடுபாடு கொண்டு பயின்றுவந்த காலம் அது. அவருக்கும் மாற்று மருத்துவ முறைகள் மீது ஆர்வம் இருந்ததைக் கண்டேன்.
தாய் இதழில் சென்னை ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் குருவரப்பிரசாத் அவர்களுக்கு வாரந்தோறும் ஹோமியோபதி பற்றி எழுதும் வாய்ப்பை நல்கினார். அது பலரது கவனத்தையும் கவர்ந்தது.ஹோமியோபதியின் மேன்மைகளை பலரும் அறியச் செய்தது
பிற்காலத்தில் அவர் தொலைக்காட்சியில் *இந்த நாள் இனிய நாள்* என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவாற்றினார். அவரது உரைகளை பெரிதும் விரும்பிக் கேட்பேன். உணவு மருத்துவம், மூலிகை மருத்துவம் பற்றிய அவரது உரைகள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. பலராலும் விரும்பிப் பார்க்கப்பட்ட தொடர் அது.
பின்னர் பாகம் பாகமாக நூல் வடிவிலும் வந்தது.
காரைக்குடி புத்தகத் திருவிழாவிற்கு அவர் வந்தபோதுதான், அவரை நேரில் பார்த்துப் பேசி பழகும் வாய்ப்பு கிட்டியது.
கம்பன் மணிமண்டப வாசலில் நண்பர் இராஜசேகரனுடன் அவரை வரவேற்க காத்து நின்றேன்.
அவர் காரிலிருந்து இறங்கி நடந்து வருகையில் அவரது கால்கள் இரண்டும் வீங்கியிருப்பதைப் பார்த்ததும், (எப்போதும், எங்கும் அவர் வேட்டியே அணிவார்), என்னையுமறியாமல், நண்பர் இராஜசேகரனிடம், "அவரது கிட்னி பழுதுபட்டிருக்கிறது. சரியாகக் கவனித்து சிகிச்சை பெறாவிடில் அதிக நாள் உயிரோடிருக்க மாட்டார் " என்றேன்.
நண்பர் பதைபதைத்து, "சார்! உங்கள் வாயினால் அப்படிச் சொல்லாதீர்கள்" என்றார்.
அதற்குள் அவர் அருகே வர, அவரை வணங்கி வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றோம்.
அன்றைய தினம் இரண்டு மணிக்கும் மேலாக அவர் ஆற்றிய சிறப்புரை மிக அற்புதமாக இருந்தது. *வார்த்தை சித்தர்* என்ற பட்டம் அவருக்கு எவ்வளவு பொறுத்தம்!
எங்களது அலுவலக விடுதியில் தங்கவைத்திருந்தோம். நண்பர்களுடன் சென்று அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அன்பாகப் பேசினார், இனிமையாகப் பழகினார்.
நண்பர் இராஜசேகரன் சிறுநீர் சிகிச்சையை பரப்புவதை தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டவர். சென்னை சென்றபோது வலம்புரி ஜானின் வீட்டைத் தேடிச் சென்று அவரை சிறுநீர் சிகிச்சையின் மேன்மைகளைக்கூறி, பின்பற்ற வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார். நான் ஏற்கனவே முயன்றுபார்த்து விட்டுவிட்டேன் என்று மறுத்து விட்டார். அப்போது சென்னையின் பெரிய மருத்துவமனை ஒன்றில் அவருக்கு நேர்ந்த அவமானத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். அங்கே இரு மருத்துவர்கள் அவரது காதுபட, தொலைக்காட்சியில் பேசும் மருத்துவ மேதை என்று நக்கலாக குறிப்பிட, உடனே அவர் உணர்ச்சி வசப்பட்டு அந்த மருத்துவமனையை விட்டு உடனடியாக வெளியேறியிருக்கிறார்.
அதன் பின்னர் நித்தியானந்தா தமிழகத்தில் அதிரடியாக அறிமுகமானபோது. அவர் தன்னைக் குணப்படுத்திவிடுவார் என்று பெரிதும் நம்பி அவர் பின் சென்றார். தமிழகத்தின் பிரபல வார இதழான குமுதம் அவருக்கு தன் வாசலைத் திறந்து விட்டது. "கதவைத்திற, காற்று வரட்டும்" என்ற தொடர் கட்டுரை வெளிவந்தது. அதை உண்மையில் எழுதிவந்தது ஜான் என்று செல்வார்கள் (Ghost Writer).
ஏற்கனவே தமிழகத்தின் பெரிய அரசியல்வாதிகள் பலருக்கு அவர் ghost writer என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அவர் பெற்ற பட்டங்கள்,பட்டயங்கள், விருதுகள், தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய நூல்கள் என்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
அவர் ஒரு புத்தகப் பைத்தியம். நிறையப் படிப்பார், படித்துக் கொண்டே இருப்பார். விசாலமான அறிவாளி.
சிறந்த சொற்பொழிவாளர், சிறந்த சிறுகதை-நெடுங்கதை-கட்டுரை எழுத்தாளர், கவிஞர், இதழியலாளர், சினிமா வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், தமிழக மேலவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், சட்ட ஆலோசகர், ஆசிரியர் - இப்படிப்பட்ட பன்முகங் கொண்ட ஒரு திறமைசாலி.
அவர் சேராத கட்சியே கிடையாது எனலாம். இப்படி எல்லாவற்றிலும் அவசரப்பட்டு, உணர்ச்சி வசப்பட்டு தன் வாழ்க்கையை வீணாக்கியவர் என்பது வேதனைக்குரிய உண்மை.
சினிமா தயாரிப்பில் ஏற்பட்ட கடனால், உயர்நீதி மன்றத்தில் திவாலானவர் என அவமானப்பட நேர்ந்தது.
ஒரு காலத்தில் கலைஞர், பின் மக்கள் திலகம், அதற்கும் பின் திருமதி ஜெயலலிதா என்று பலரின் அபிமானத்துக்கும் பாத்திரமாகி, இறுதியில் அனைத்தையும் இழந்து, தனது 58வது வயதில் சிறுநீரகக் கோளாறால் உயிர் நீத்தார்.
"*எல்லை தாண்டிய ராஜாளிப் பறவை*" என்ற தலைப்பில் திரு. ராசி.அழகப்பன் இவரைப் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார். எவ்வளவு பொறுத்தமான தலைப்பு!
*அவரைப் பற்றிய சில முக்கிய தகவல்கள் விக்கிப்பீடியாவிருந்து:*(இவையின்றி இப்பதிவு முழுமை பெறாது என்பதால்)
டி.சி.ஜான் (D C JOHN) என்ற இயற்பெயருடைய வலம்புரி ஜான் திருநெல்வேலி மாவட்டம் உவரி என்னும் கிராமத்தில் ஏ.டி.சி. ஃபர்னந்தோ (A.D.C. Fernando) - வியாகுலம் ஆகியோருக்கு மகனாக 1946 அக்டோபர் 14 அன்று பிறந்தார்.
பெற்றோரை இளம்வயதிலேயே இழந்து, அண்ணன்களால் வளர்க்கப்பட்டார்..
*8ஆம் வகுப்பு வரை உவரியில் பயின்றார்*
*உயர்நிலைப்பள்ளிக் கல்வியை பாளையங்கோட்டை தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.*
*பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பயின்றார்.*
*பொது ஆட்சியியலில் (Public Administration) முதுகலைப் பட்டம் பெற்றார்*.
*பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று *சட்ட முதுவர்* பட்டம் பெற்றார்*.
*தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரியின் வரலாற்றுத்துறையில் ஆய்வுசெய்து முனைவர் (D.Litt) பட்டமும், வணிகமேலாண்மையில் முனைவர் (Ph.D) பட்டமும் பெற்றார்*.
*காந்தியச் சிந்தனையிலும் மற்றும் இதழியலிலும் பட்டயம் பெற்றார்.*
*கல்லூரிக்கல்வி முடிந்ததும் பேராசிரியர் வளனரசின் பரிந்துரையால் தினமலர் இதழின் திருச்சி பதிப்பில் உதவியாசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார்*
அடுத்து ஒரு ஆங்கிலப்பள்ளியில் *ஆங்கில ஆசிரியராகப்* பணியாற்றினார்.
*வழக்குரைஞராகச் சென்னையில் சிறிதுகாலம் பணியாற்றினார்.*
*தில்லியில் இந்திய ஆட்சிப்பணி பயிற்சியகம் ஒன்றில் சிறிதுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார்*
மறைந்த முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரனால் தொடங்கப்பட்ட "தாய்" இதழுக்கு ஆசிரியராகப் *பன்னிரண்டரை ஆண்டுகள் பணியாற்றினார்*
*பாப்பாமலர்* என்ற சிறுவர் இதழுக்கும், *மெட்டி* என்ற மாதநெடுங்கதை இதழுக்கும், *மருதாணி* என்ற திரைப்படஞ்சார்ந்த இதழ்களுக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார்*.
*சப்தம், ராஜரிஷி* ஆகிய இதழ்களை நிறுவி அவற்றின் ஆசிரியராக சிறிதுகாலம் இருந்தார்*.
அரசியல் வாழ்க்கையைதிராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடங்கினார்.
பின்னர், ஜனதா கட்சியில் இருந்தார்.
அங்கிருந்து விலகி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார்.
பின்பு இ.தே.காங்கிரசில் இணைந்தார்.
1996இல் ஜி. கே. மூப்பனாரால் நிறுவப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் உடன் தன்னை இணைத்துக்கொண்டார்.
பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சிறிதுகாலம் இருந்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 1974 ஏப்ரல் 3 ஆம் நாள் தொடங்கி 1974 அக்டோபர் 14ஆம் நாள் வரை இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தார். *உரிய வயதினை அடைவதற்கு முன்னரே அப்பதவிக்குத் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதால் அப்பதவியை இழந்தார்*.
மீண்டும் அ.இ.அ.தி.மு.க.சார்பில் 1984 ஏப்ரல் 3ஆம் நாள் முதல் 1990 ஏப்ரல் 2ஆம் நாள் வரை அந்த அவையில் உறுப்பினராகப் பதவிவகித்தார்.
1983 ஆம் ஆண்டில் சட்டமன்ற மேலவையின் உறுப்பினரானார்.
1984ஆம் ஆண்டில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் இப்பதவியிலிருந்து விலகினார்.
தமிழ்நாட்டு அரசின் வேளாண்மைத்தொழில் வாரியச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார்.
*இலக்கியம், அரசியல் மற்றும் சித்த மருத்துவம் உட்பட பல துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார்*
அங்கொன்றும் இங்கொன்றும் (கட்டுரைகள்) 1995
அந்தக இரவில் சந்தன மின்னல், (கவிதைகள்) 1984
அம்மா அழைப்பு (கவிதைகள்) 1974
அவர்கள் (கவிதைகள்), 1998
அஸ்திவாரங்கள் தெரிவதில்லை (நெடுங்கதை)
ஆண்டாள் அருளிய அமுதம் (கவிதைகள்) 1995
இதயம் கவர்ந்த இஸ்லாம் (மதம்) 1999
இதோ சில பிரகடனங்கள் (கட்டுரைகள்) 1972
இந்த நாள் இனிய நாள் - பாகம் 1 (தொலைக்காட்சித் தொடர் உரை) 1998
இந்த நாள் இனிய நாள் - பாகம் 2 (தொலைக்காட்சித் தொடர் உரை) 1998
இந்த நாள் இனிய நாள் - பாகம் 3 (தொலைக்காட்சித் தொடர் உரை) 1998
இந்த நாள் இனிய நாள் - பாகம் 4 (தொலைக்காட்சித் தொடர் உரை) 1998
இந்த நாள் இனிய நாள் - பாகம் 5 (தொலைக்காட்சித் தொடர் உரை) 1998
இவர்கள் அறிந்தே செய்கிறார்கள் (கட்டுரைகள்) 1976
இரண்டாவது அலைவரிசை (கட்டுரைகள்) 1998
இறந்துபோன இந்தியக் கடவுள்கள் (கட்டுரைகள்) 1972
இஸ்லாம் மண்ணுக்கேற்ற மார்க்கம் (மதம்) 1993
உங்களைத்தான் அண்ணா! (கட்டுரைகள்) 1972
உள்ளதைச் சொல்லுகிறேன் - முதலாம் தொகுதி, (கட்டுரைகள்) 1983
உள்ளதைச் சொல்லுகிறேன் - இரண்டாம் தொகுதி, (கட்டுரைகள்) 1983
உள்ளதைச் சொல்லுகிறேன் - மூன்றாம் தொகுதி; (கட்டுரைகள்) 1983
எல்லா இராத்திரிகளும் விடிகின்றன (கட்டுரைகள்) 1987
எழுச்சி நியாயங்கள் (கட்டுரைகள்) 1971
ஒரு ஊரின் கதை (நெடுங்கதை); 1975
ஒரு நதி குளிக்கப்போகிறது (கவிதை) 1980
கல்நொங்கு (சிறுகதைகள்) 1999
கலைஞரின் கவிதைகள் (திறனாய்வு) 1998
காகிதக் கணைகள் (கட்டுரைகள்) 1972
காதல் கடிதங்கள் (கற்பனைக் கடிதங்கள்), 1974
காதலும் காமமும் - பாகம் 1 (கட்டுரைகள்)
காதலும் காமமும் - பாகம் 2 (கட்டுரைகள்)
காந்தியா? அம்பேத்காரா? (கட்டுரைகள்) 1972
காலத்தை வென்ற காதலர்கள் - தொகுதி 1 (சிறுகதைகள்) 199
காலத்தை வென்ற காதலர்கள் - தொகுதி 2 (சிறுகதைகள்) 1998
காற்றின் சுவாசம், (கவிதைகள்) 1972
கேரள நிசப்தம் (வாழ்க்கை வரலாறு) 1986
சாதனை சரித்திரம் சவேரியார் (வாழ்க்கை வரலாறு) 1993
சுயாட்சியா? சுதந்திரமா? (கட்டுரைகள்) 1971
சிந்திக்கத் தெரிந்த சிலருக்காக, (கட்டுரைகள்) 1978
சில உரத்த சிந்தனைகள் (கட்டுரைகள்) 1972
சீனம் சிவப்பானது ஏன்? (கட்டுரைகள்)
சொர்க்கத்தில் ஒருநாள் (பயணக்கட்டுரை) 1983
தாகங்கள் (சிறுகதைகள்) 1972
தெற்கு என்பது திசையல்ல (கட்டுரைகள்) 1977
தொரியன் மணக்கிறது (கட்டுரைகள்) 1986
நாயகம் எங்கள் தாயகம் (கவிதைகள்) 1995
நான் ஏன் தி.மு.க?
நான் கழுதையானபொழுது (கட்டுரைகள்) 1986
நான் விமர்சிக்கிறேன்! (கட்டுரைகள்), 1975
நியாயங்களின் பயணம்
நியாயம் கேட்கிறோம் (கட்டுரைகள்) (அவசரநிலைக் காலத்தில் தடைபடுத்தப்பட்டது) 1975
நிருபர் (நெடுங்கதை) 1998
நீங்கள் கேட்காதவை (சிறுகதைகள்) 1981
நீர்க்காகங்கள் (நெடுங்கதை), 1975
நீலம் என்பது நிறமல்ல! (கவிதைகள்); 1980
பலர் நடக்காத பாதை (கவிதைகள்) 1994
பற்றி எரிகிற பனிநதிகள் (கடிதங்கள்), 1983
பாரதி - ஒரு பார்வை (திறனாய்வு) 1975
பாரதி நேற்று, இன்று, நாளை (கட்டுரைகள்) 1995
பிரார்த்தனைப் பூக்கள்
புதுவைதந்த போதை! (திறனாய்வு) 1976
பூக்கள் பறிப்பதற்கு அல்ல!(நெடுங்கதை)
பூவுக்கு வாசம் வந்தாச்சு (நெடுங்கதை), 1986
பைபிள் கதைகள் (1997ஆம் ஆண்டில் கல்கியில் வெளிவந்த தொடர்)
மண்ணில் விழுந்த மகரந்தங்கள் (சிறுகதைகள்) 1977
மற்றும் பலர் (கவிதைகள்) 1998
மீண்டும் மகாத்மா! (கட்டுரைகள்) 1974
மூங்கில் பூ (நெடுங்கதை) 1998
வணக்கம்
வரலாற்றில் கலைஞர் (கட்டுரைகள்) 1971
வருடம் முழுவதும் வசந்தம் (பயணக்கட்டுரை) 1985
வலைஞர் நெஞ்சில் கலைஞர் (கவிதைகள்) 1974
வாழ்க்கையை மாற்றும் வண்ணக்கற்கள் (கட்டுரைகள்) 2007
விதைகள் விழுதுகள்
விந்தைமனிதர் வேதநாயகர் (வாழ்க்கை வரலாறு) 1974
வெளிச்சத்தின் விலாசம் (சிறுகதைகள்) 1997
ஜெயலலிதா
Rages of Rascal (Poems) 1984
Reconstruction of Islamic thought
Trumpet in Dawn (Essays) 1974
Frontiers of our Foreign Policy (Essays) 1995
Islam: Evidence of an eyewitness (Essays) 1999
*தொகுத்த நூல்கள்*
ஆர்.எம்.வி.ஓர் ஆலயம்
*தொகுத்துப் பதிப்பிக்க வேண்டியவை*
தாய் இதழின் கடைசிப்பகுதியில் எழுதிய "உள்ளதைச் சொல்கிறேன்" பகுதி
அரசியல், இலக்கியச் சொற்பொழிவுகள்
தாய் இதழில் பைரவி என்ற பெயரில் எழுதிய வினா-விடைகள்
பிறர் நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள்
நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையிலும் தமிழ்நாடு சட்ட மேலவையிலும்
ஆற்றிய உரைகள்
சன் டிவியில் ஆற்றிய 'இந்த நாள் இனிய நாள்' உரைகள்
முரசொலி உள்ளிட்ட இதழ்களில் எழுதிய தொடக்க காலக் கட்டுரைகள்
தாய் இதழிலிருந்து வெளியேறிய பின்னர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள்
முனைவர் பட்ட ஆய்வேடு
கருத்தரங்குகளில் வாசித்த ஆங்கிலக் கட்டுரைகள்
கவிதா பானு பதிப்பகம் என்ற நூல்வெளியீட்டு நிறுவனம் ஒன்றை வலம்புரி ஜான் உருவாக்கினார். அதன் வழியாக தனது நூல்களையும், ஜெயலலிதா, பொன்.ஜெயந்தன் ஆகியோரைப் போன்றோர் எழுதிய நூல்களையும் வெளியிட்டார்.
*வலம்புரி ஜான் பாடல்கள்*
வரப்பிரசாதம், 1976
சுதந்திர நாட்டின் அடிமைகள்
பிரியமுடன் பிரபு
பொறுத்தது போதும்
ஞானபறவை
பத்தினி
அன்பு
மேலும் சமயப்பாடல்கள் சிலவற்றையும் இயற்றியுள்ளார். அவற்றுள் சில *'இயேசுவின் அமுதம்'* என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
*கதை வசனம்*:
*குங்கும கோலங்கள்*
*கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு*
1988ஆம் ஆண்டில் பானு ரேவதி கம்பைன்ஸ் என்ற பெயரில் திரைப்பட நிறுவனம் ஒன்றினைத் தொடங்கி *அது அந்தக்காலம்* என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார்.
*விருதுகளும் பட்டங்களும்*
*கலைமாமணி - தமிழ்நாட்டரசு*
*வார்த்தைச்சித்தர் - கிருபாநந்த வாரியார்*
*ஞானபாரதி - குன்றக்குடி அடிகளார்*
*வளரும் தமிழில் வலம்புரி ஜான் - தொகுத்தவர் எதிரொலி விசுவநாதன்*
அர்சூன் தாசு என்பவரிடம் வாங்கிய கடன் ரூ. 12.28 லட்சத்தைத் திரும்பச் செலுத்த முடியாமல், அர்சூன் தாசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க சென்னை உயர்நீதி மன்றம் அவரையும் அவரது துணைவியாரையும் வக்கற்றோர் (திவாலானோர்) என்று அறிவித்தது.
*இவர் 2005 மே 8ஆம் நாள் சிறுநீரக் கோளாறால் தொடர் சிகிச்சைபெற்று மரணமடைந்தார்*
*மேற்கோள்கள்*
வலம்புரி ஜான் வளர்த்த
தமிழ் - பேராசிரியர்
வளன் அரசு
🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக