7 மார்., 2025

ஆன்மீக சிந்தனை


🙏🔥🙇🏽‍♂️ #கர்மாவை_நாம்_கடந்துவிட முடியாது...

🙇🏽‍♂️🙏#கர்மாவிலிருந்து தப்ப வழி உள்ளதா? எனக் கேட்டான் நண்பன் ஒருவன். 

🙇🏽‍♂️👍#நிச்சயமாக இல்லை என்றேன் நான். எப்படி நீ இவ்வளவு உறுதியாகக் கூறுகிறாய்? என்றான். அதற்கு அவனுக்கு நடந்த நிகழ்வு ஒன்றைச் சொன்னேன்.

🔥🕉️ #திருவண்ணாமலையில்_நீண்ட காலம் வாழ்ந்த மகான்
🔥🙏 #யோகி_ராம்_சுரத்குமார். இவரை "விசிறி சுவாமிகள்" என்றும் பக்தர்கள் அன்போடு அழைப்பார்கள். சிலர் இவரை "சிரட்டைச் சாமியார்" என்றும் அழைப்பார்கள்...🙏🏽

👨🏽‍⚕️#சென்னையில் மருத்துவராகப் பணியாற்றியவர், என் குடும்ப நண்பரின் மகன். அவருடைய தந்தையோடு திருவாண்ணாமலை சென்று அந்த மகானைப் பார்த்து வர வேண்டும் என நினைத்து புறப்பட்டார். 

👨🏽‍⚕️🙏🏽#மருத்துவர் அவரை தரிசித்த போது அந்த மகான் கையில் இருந்தது ஒரு புண். அதில் கொசுவும் ஈக்களும் மொய்த்துக் கொண்டு இருந்துள்ளன. அதைப் பார்த்த மருத்துவர்
யோகியிடம், " I'm a Doctor by profession. If you permit me shall I clean this wound,apply some medicine and dress it up ? " என்று மிகவும் பணிவுடன் கேட்டிருக்கிறார்...🙏

🔥#அதற்கு_அந்த_மகான் பெரிதாகச் சிரித்து விட்டு.." you mean this? Just see" என்று சொல்லி விட்டு தன் பக்கத்தில் வைத்திருந்த ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சிரட்டையிலிருந்து (கொட்டாங்கச்சி) சிறிது நீரைக் கையில் எடுத்து கண்ணை மூடி ஓரிரு நிமிடங்கள் ஏதோ ஜபம் செய்து விட்டு அந்தப் புண்ணின் மேல் தெளிக்க, அந்தப் புண் காணாமல் போய் விட்டதாம்.அதனை மருத்துவரால் நம்ப முடியவில்லை.

👨🏽‍⚕️🙏🏽#பிறகு_மீண்டும் அதே போல் இன்னொரு முறை அந்த மகான் செய்ய, அந்தப் புண் திரும்பவும் அவர் கையில் தோன்றி விட்டதாம்.
" This is my Karma.. I have to bear it.. live and suffer with it.. " என்று மருத்துவரிடம் சிரித்துக் கொண்டே சொன்னாராம் அந்த மகான். அன்று முதல் அவரது சீடரானார் மருத்துவர்.🙏

🔥🙏🏽 #பல_சித்துகள்_தெரிந்த இவரைப் போன்ற மகான்களால் தங்கள் நோய் எதுவானாலும் அதைக் குணப் படுத்திக் கொள்ள முடியும். ஏன் அவர்கள் முயற்சிக்கவில்லை? அவருக்கு மிக நன்றாகத் தெரியும்." இது நமது கர்மா! இது நமது கர்ம வினைப் பயன்! அதை நாம் அனுபவித்தே கழிக்க வேண்டும் " என்பதால் அதை சிரித்த முகத்தோடு அனுபவித்தார்கள் யோகிகள்..🙏🏽🙏🏽🙏🏽

ஓம் நமசிவாய நம ஓம் 🔥

கருத்துகள் இல்லை: