14 ஏப்., 2025

இன்றைய புத்தகம்


#Reading_Marathon_2025

#30நாள்_வாசிப்புப்போட்டி_புத்தகம்_4

#25RM070

#BkNo_24

நூல் : அரூபத்தின் நடனம்

ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்

வகை : கலைசார் படைப்பு

பக்கங்கள் : 312

வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம்

வாசிப்பனுபவம்:
===============

எஸ்.ரா. அவர்களின் 'அரூபத்தின் நடனம்' என்கிற இந்நூல்,பல்வேறு நாடுகளிலிருந்து வெளியான திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களைப் பற்றி அவர் எழுதிய விமர்சனங்கள் அடங்கிய தொகுப்பு.மொத்தம் 60 திரைப்படங்கள்.

பொதுவாக திரைப்படங்களைப் பற்றிய விமர்சனம்,அந்தப்படத்தை பார்த்த திருப்தியைத் தருவதை விட,அதை பார்க்க வேண்டிய ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.அப்படியான புத்தகம் தான் இது.

குறிப்பிட்ட படங்கள் சம்பந்தமாகவும்,அந்த படத்திற்கு தொடர்பான மற்ற படங்களைப் பற்றியும்,சில படங்களை உருவாக்க காரணமாக புத்தகங்கள் பற்றியும்,படம் தொடர்பான தன் கருத்துகளையும் கூறியிருக்கிறார் எஸ்.ரா.

இந்தியாவைப் பற்றி எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்கள் சிலவற்றைப் பற்றி கூறியிருக்கிறார்.அவற்றில் இந்தியாவைக் குறித்த ஹாலிவுட் இயக்குநர்களின் கருத்தாக இருப்பவை பெரும்பாலும் பொய் என்பதையும்,சிலர் அவர்கள் இந்தியாவை மீட்க வந்த தேவதூதர்கள் போல வெள்ளைக்காரர்களை தங்கள் படங்களில் சொல்லியிருப்பதாகக் கூறுகிறார்.

மேலும்,பிற நாடுகளின் வரலாறு தொடர்பான சின்ன செய்திகள் கூட ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில்,இந்தியாவில் முக்கிய நிகழ்வுகள் கூட ஆவணப்படுத்தப்படவில்லை என தன் ஆதங்கத்தையும் கூறியிருக்கிறார்.

இதில் இருக்கிற படங்களைப் பார்ப்பதன் மூலம் சில நாடுகளின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம்.இதில் சொல்லப்பட்டிருக்கிற ஆவணப்படங்கள் நமக்கு தெரியாத ஒன்றினைப் பற்றிய திறப்பை ஏற்படுத்துவன.படங்களை பார்த்துவிட வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் எல்லாப் படங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் எஸ்.ரா.

புத்தகங்களில் இருந்து உருவாக்கப்பட்ட படங்களும்,சில ஆவணப்படங்களும் மிகுதியான ஆர்வத்தை ஏற்படுத்தின.

இந்நூலில் இருந்த ஒரே பிரச்சனை அநேக இடங்களில் வாக்கிய அமைப்பில் பிழை இருந்தது.அது நம் வாசிப்பை ஓட்டத்தை தடை செய்கிறது. அடுத்த பதிப்பில் சரிசெய்வார்கள் என நம்புவோம்.

===============

கருத்துகள் இல்லை: