9 ஏப்., 2025

இன்றைய புத்தகம்


இன்றைய வாசிப்பு கி.ராஜநாராயணன் அவர்கள் எழுதிய "சிறுகதைகள்"" .

        மொத்தம் 74 கதைகள் .இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் பாதிக்கும் மேற்பட்டு பல புத்தகங்களில் அங்குமிங்குமாக படித்திருக்கிறேன். இதுதான் ஒரு பிரச்சனை. ஒரே புத்தகத்தை பலமுறை வாங்குவது போல இது இருக்கிறது .
     கி .ராஜநாராயணன் அவர்களை ஒரு சகாப்தம் என்று சொல்லலாம் .அந்த சகாப்தத்தை கலாப்ரியா அவர்களும் கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன் அவர்களும் மாமா என்று அன்போடு அழைப்பார்கள். என்றும் இளமை முறுக்கோடு உள்ள தெளிவோடு தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு "நிகழ்வு"(லெஜன்ட் ) அவர். இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் நிகழ்வு அவர்.
    வேளாண் கல்லூரியில் படிக்கும் பொழுது கல்வி சுற்றுலா பயணமாக கோவில்பட்டி விவசாய பண்ணைக்கு சென்றோம் அப்பொழுது நண்பர் கங்கைகொண்டான் அவர்கள் அழைத்துச் சென்று காணும் பாக்கியம் பெற்றேன் அப்பொழுதெல்லாம் அவரின் பெருமை எனக்கு தெரியாது. கரிசல்காட்டு கதைகள் இவரால் பெயர் பெற்றது .அந்த நாட்டு மொழியில் அந்த மக்களின் மொழியில் மிக அற்புதமாக எழுதி இருக்கிறார் .ஒவ்வொன்றும் முத்துக்கள் .கதவு என்ற கதையும் தொண்டு என்ற கதையும் மனதைவிட்டு அகலாது என்றும்.
     ஹூஸ்டன் நகரில் உள்ள மீனாட்சி கோயில் நூலகத்தில் ஒரு புத்தகம் படித்தேன் .முனைவர் பட்டத்திற்காக டெல்லி பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு தமிழ்ப் பேராசிரியை ராஜநாராயணன் அவர்களின் நாட்டுப்புறக்கதைகள் அதில் காணப்படும் செக் முதலானவை குறித்து சிறப்பு  ஆய்வு செய்து வைத்திருப்பார். அதை படிக்கும் பேறு பெற்றேன் மிகவும் உயர்ந்த தமிழில் இலக்கண தமிழில் ஆய்வுக்கட்டுரை என்பதனால் சுவையாக இருக்கவில்லை; ஆனால் தெளிவாக அவரை குறித்து அறிந்து கொள்ள முடிந்தது.
      கரிசல் காட்டுப் பகுதியில் பிறந்தவர்கள் வெக்கை குடிப்பவர்கள.இவர்களுக்கு எந்த வித சுக வாழ்வு சம்பந்தமும் கிடையாது. விவசாயிகள் தினம்தோறும் வானத்தை பார்த்து மானத்தை காப்பவர்கள். அப்படிப்பட்ட கரிசனை எல்லா பகுதியும் மக்களின் உணர்வுகளை தின பாடுகளை தனது வெற்றியாக மொழியால் புத்தியால் உலகிற்கு காட்டியவர் கி ராஜநாராயணன் அவர்கள்.
    இவரை பின்பற்றியே கரிசல் நில கதைகளை பூமணி ,கோணங்கி, மேலாண்மை பொன்னுசாமி முதலான எழுத்தாளர்கள் கதை எழுதினார்கள். அழகிரிசாமி அவர்களும்,கி. ராஜநாராயணன் அவர்களும் பால்யகால நண்பர்கள் .இருவருமே சாகித்திய அகாடமி விருது பெற்றவர்கள்.
   மண்ணையும் அதில் வாழும் மனிதர்களையும் எழுதுவது அத்தனை எளிதல்ல .ஆப்பிரிக்கா எழுத்தாளர்களுக்கு கிடைத்துள்ள உலக அங்கீகாரம் போல கி. ரா. அவர்களுக்கு கிடைக்கவில்லை .அதில் இந்த தமிழ்ச் சமுதாயம் தவறு செய்கிறது. புதுவை பல்கலைக்கழகம் இவருக்கு அளித்துள்ள visiting புரோபஷிர்  என்ற ஒரு பதவி போற்றத்தக்கது .பள்ளிக்கூடம் என்றாலே தள்ளி போனவர் இவர். பள்ளியில் படித்து கல்லூரியில் படித்து வந்து இவரிடம் பயின்ற மாணவர்களின் தொகையோ எண்ணி முடியாது. வெளிய தீபங்கள் போல துல்லியமாக ஆச்சரியம் உண்டாக்கும்.
   கரிசல் எழுத்துக்கு இவர் பீஷ்மர் .புது எழுத்தாளருக்கு இவர் துரோனாச்சாரியார். படித்து பாடம் பெறலாம்.
  தேயிலை ஊருக்குள்ளே எப்படி வந்து எல்லோரையும் ஆட்கொண்டது என்று இவர் தெளிவாகவும் விளக்கமாகவும் அந்தகால வாழ்க்கையை  எழுதியது பிரமிக்கத்தக்கது. அதேபோல கழுவேற்றுதல் என்கிற ஒரு நிகழ்வை சரித்திரத்தை இவர் கதை மூலமாக படிக்கலாம் ;படித்து தெரிந்து கொள்ளலாம்.
  " கதவு " என்ற கதை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .பலராலும் பாராட்டப் பட்டுள்ளது .ஒரு ஏழை விவசாயி கடன் வாங்கி பட்ட அவலநிலையை அரசின் கெடுபிடி தன்மையை அங்கதம் கலந்து சொல்லியிருக்கும் விந்தை சிறப்பாக இருக்கும்.
  நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்து ,அது தனிவகை இலக்கியம் என்று பல ஆண்டுகால அவரின் முயற்சி தற்பொழுது ஆயிரம் பக்கத்திற்கு மேலான புத்தகமாக வெளிவந்துள்ளது .
      கரிசல் வட்டார சொற்களைத் தொகுத்து அகராதி உருவாக்கியிருக்கிறார் .
     கடித இலக்கியம் என்ற வகையை மேம்படுத்தியது அவரது கடிதங்கள். கு. அழகிரிசாமி க்கும்  நண்பர்களுக்கும் அவர்கள் எழுதிய கடிதங்கள் ஆழமான இலக்கியத் தன்மை கொண்டது . கற்பனையில் டாக்டர் மு. வ.செய்தது ;இவர் நிஜத்தில் செய்தார் . வண்ணதாசன் அவர்களும் கடிதங்களை எழுதியிருக்கிறார். சுந்தரராமசாமி அவர்களும் கடிதங்கள் எழுதியிருக்கிறார். புத்தகங்களாக வெளிவந்துள்ளது.
  எழுத்தாளர் எஸ்ரா அவர்கள் எழுதும்பொழுது கிராவின் வழியே கரிசல் கிராமங்கல் தனது வாழ்க்கையை எழுதிப் பாதுகாத்து வைத்துக் கொண்டு விட்டன என்று எழுதியிருப்பார் .அது உண்மையான முற்றிலும் உண்மையான சத்தியமான வார்த்தை.
.    ஒவ்வொரு கதையாக சொல்லி சொல்லி நீங்கள் சுவைக்க எழுத ஆசைப்படுகிறேன். ஆனால் போதிய பொறுமையை உங்களுக்கு இருக்காது என்பதனால் *தொண்டு * என்கிற கதை குறித்து ஒரு அயல் நாட்டவர் இவரிடம் பேசியதாக தனது முன்னுரையில் எழுதியருப்பார், குறிப்பிட்டிருப்பார் .அது குறித்து மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
    ஒரு ஆங்கில பேராசிரியருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது  எனது நாட்டுப்புறக்கதைகள் அக்கறை கொண்டவர் இங்கே உள்ள நாட்டுப்புறக் கதைகளை ஆங்கிலத்தில் புத்தகமாக கொண்டு வந்திருப்பவர். அவர் சொன்னார் வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு அம்மையார் சொன்னதாக ஒரு ஒரு தகவல் ."
       *இத்தாலிய நாட்டில் ஏதோ ஒரு பகுதியில் அமோகமாக பால்சுரப்பு கொண்ட பெண் மக்கள் இருப்பதாகவும், தங்களுடைய வீடுதேடி வயிற்றுப் பசியோடு வருகிறவர்களுக்கு ,தர உணவு இல்லாத போது மட்டும் தம் பெருத்த மார்பக அமிர்தத்தை உண்டு பசியாறி ட அனுமதிப்பார்களாம்.* *இதைப்பற்றி அங்கே நாட்டுப்புறக்கதைகள் இருக்கிறதாம் .வெளி ஆட்களுக்கு கூச்சமும் இல்லாமல் தனது பருத்த பெருத்த மார்பின் மூலமாக பசி ஆற்றும் தன்மையை மெய்சிலிர்க்க வைக்கும் என்ற ஒரு உண்மை நிகழ்ச்சி .இந்த தகவலை சொல்லிய அந்த ஆய்வாளர் அம்மையார் வயிற்றுப் பசி தீர மனமுவந்து தினம் அமுதம் தந்த பெண்ணை போல உடல் பசிதீர தன்னையே தந்த நடப்பு பற்றிய கதை எங்கேனும் இருக்கிறதா என்று கேட்டாராம் .அதற்கு அவர் சொல்வார் "அதிதி உபசரிப்பு நம்ம நாட்டுல உண்டு.பெற்ற பிள்ளையையே அறுத்துக் கறி சமைத்து படைத்ததாக இருக்கு .அதுக்கு மேல வயிற்றுப்பசி நீங்க சொல்றது கீழ் வயிற்றுப் பசிக்காக தன்னையே தந்து தவம் செய்ததாக நாட்டுப்புறக்கதைகள் உண்டா என்று  கேட்டார் .ஒரு நடப்பு இருப்பதாகவும் அது தன் மனதை பாதிப்பதாக கதையை வடிவமாக அது முயற்சித்து தொண்டு என்கிற கதையாக இவர் படைத்திருப்பார். அதேபோல ஐரோப்பாவில் ஒரு சிறுகதை இருப்பதாகவும் அவர் சொன்னாராம்
    இவரது கதையில் இரண்டு கதையில் வருகின்ற புள்ளிகளை இரக்கத்தினால் தன்னை தானம் செய்பவள்.
 * தொண்டு*கதையில்....
காமமா என்ற பெயருடைய புள்ளிகளை யாருக்கும் சொந்தமில்லை. எல்லோருக்குமே ஊரில் ஒருவகையில் நெருக்கமான அவள்.பசி என்று போனால் வயிறு நிரப்பி அனுப்பி விடுவாள் .அது எந்த பசியாக இருந்தாலும் . ஊர் பலவிதமாக பேசினாலும் அவளிடம் பசியாற செல்லாத மக்கள் இல்லை .ஒரு முறை போலீசார் அந்த கிராமத்திற்கு படையெடுத்தபோது அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களின் பசியாற்றி திசைமாற்றி ஊரை காப்பாற்றினால் என்று கதை இருக்கும். இந்த கதை குறித்து தான் மேற்படி தனது முன்னுரையில் சிறப்பாக அவர்எழுதி வைத்திருப்பார் .இப்படி இவரின் கதைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம் .இப்போது புதிய ஆரம்ப எழுத்தாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் கி ராஜநாராயணன் அவர்களின் எழுத்துக்கள்.

நன்றி: திரு கருணா மூர்த்தி அவர்கள், வாசிப்பை நேசிப்போம், முகநூல் 

கருத்துகள் இல்லை: