15 ஏப்., 2025

இன்றைய புத்தகம்


வாசிப்பு மராத்தான் போட்டி 2025
30நாட்கள் வாசிப்பு போட்டி
(25RM266)
புத்தகம்: கடல் பயணங்கள்
ஆசிரியர்: மருதன்
பக்கம்:  142

ஆசிரியர் மருதன் எழுதிய கடல் பயணங்கள் புத்தகம்,  உலக வரலாற்றை மாற்றிய 13 கடல் பயணங்கள் பற்றியது. .

வரலாற்றில் பயணம் முக்கிய பங்கு வகிக்கிறது.  ஓரே பயணம் சிலருக்கு நன்மையும் சிலருக்கு தீமையும் கொடுத்துள்ளதை வரலாற்றின் பக்கங்களில் காணலாம். 

பெரும்பாலான கடற்பயணங்கள் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின்  இயற்கை வளத்தை நோக்கியே இருந்தன. புதிய நிலப்பரப்புகளை ஆக்கிரமிக்கும் நோக்கிலும் இருந்தன.  அந்த வகையில்  வரலாற்றில் பல மாற்றங்களை கடற்பயணங்கள் ஏற்படுத்தியது.  காலனி ஆதிக்கம் தொடங்கியது. 

விதிவிலக்காக சார்லஸ் டார்வின் வித்தியாசமான உயிரினங்களைப் பற்றிஅறிந்து கொள்ளவே கடல் பயணம் மேற்கொண்டார். பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்வுகளின் தொடக்கமாக இருந்தது. 
 
செங் ஹே ,  மெகல்லன்  போன்றோரின் கடல் பயணம் கப்பல் கட்டும் தொழில் நுட்பம், துல்லியமான வரைபடம், காந்த வழிகாட்டி போன்ற கண்டுபிடிப்புகளின் தொடக்கம் என சொல்லலாம்.

உலகம் உருண்டையானது என்ற நம்பிக்கை உண்டாக்கியது வாஸ்கோடகாமா கடல் பயணம்.

அமெரிக்காவை கண்டுபிடிக்காத கொலம்பஸ், அமெரிக்காவை நிஜமாக கண்டுபிடித்த அமெரிகோ வெஸ்புகி, கண்டுபிடிக்காமல் புகழ் பெற்ற ஜேம்ஸ் குக் போன்றோரின் அனுபவம், பின்னர் கடல் பயணம் செய்த அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தது. 

ஆவலின் காரணமாக கடல் பயணம் மேற்கொண்டவர்களில் பலர் வெற்றி பெற்றுள்ளனர். சிலர் தோல்வி அடைந்துள்ளனர்.  பலரைப் பற்றி தகவல்கள் இல்லை. ஆனாலும் கடல் பயணங்கள் தொடர்கின்றன.

அருமையான புத்தக பயண அனுபவத்தைக் கொடுத்தது கடல் பயணம் புத்தகம்.

கருத்துகள் இல்லை: