,"சென்னையின் கதை " கிளின் பார்லோ 1921இல் எழுதிய கதை .தமிழில் பிரியா ராஜ் அவர்கள் மூலம் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
பிரியா ராஜ் என்கிற ராஜாமணி அவர்கள் இதுவரை நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார் .நல்ல நாடக நடிகர் ,சினிமா நடிகர் ,பன்முகத்தன்மை கொண்டவர் நாடக எழுத்தாளர் ,நாடக இயக்குனர் Italiya என்கிற விமானநிலைய நிர்வாகியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மதராஸ் ஒரு புராதனமான நகரம் அல்ல; அதன் பின்னணியில் சரித்திர நாயகர்களான பண்டைய அரசர் அரசர்களோ அல்லது புராண சம்பவங்கள் சம்பந்தப்படவில்லை. புராதன சரித்திர நிகழ்வுகளைப் பற்றி தெரிவிக்கும் பாழடைந்த மாளிகைகளும் இங்கு இல்லை. மதராசியின் புகழ் நம்பமுடியாத கதைகளால் வளர்க்கப்பட்ட சுவையான உண்மைத் சம்பவங்களால் அடையப்பெற்றது. மதராசின் கதை மனதை லயிக்க வைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளது என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
.
கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்கு கீழ் உள்ள இந்தப் பகுதி அவரின் ஒரு தளபதியாக செயல்பட்டு வந்த சந்திரகிரி கோட்டையில் இருந்து கொண்டு ஒரு அரசர் எழுதிக்கொடுத்த துண்டு நிலம் தான் இந்த மதராஸ்; சுவையான விபரம்.
நூல் சுவைபட பல விபரங்களை தெரிவிக்கிறது .நாம் அறியாத பல விபரங்கள் இதிலே கொட்டிக் கிடக்கின்றன. இது போன்ற புத்தகங்களை நாம் வாசிக்கும் பொழுது தான் நமது மூதாதையர்கள் எவ்வளவு எல்லாம் , எப்படி எல்லாம் வாழ்ந்து களித்து இருக்கிறார்கள் என்கிற விபரம் புரியும் .
ஒவ்வொரு தெருவின் பெயருக்கும் ஒவ்வொரு பேட்டைக்கும் ஒவ்வொரு
சந்துக்கும் உள்ள பெயர் குறிப்பு தெளிவாக அழகாக விபரம் தரப்பட்டுள்ளது.
அருமையான மொழியாக்கம். கடினமான தமிழ்மொழியில் அல்லாமல் இலகுவான சென்னை பாஷையை படிப்பது போலவே இந்த தரமான புத்தகத்தில் பிரியா ராஜா அவர்கள் மொழி பெயர்த்து எழுதி உள்ளார்கள் .உண்மையிலேயே இவரின் சேவை பாராட்டத்தக்கது .புத்தக கண்காட்சியில் இரண்டு மூன்று முறை இரண்டு மூன்று ஆண்டுகள் புத்தகத் திருவிழாவின்போது சந்தியா பதிப்பகத்தில் இந்த புத்தகத்தை கண்டும் காணாமல் வந்துவிட்ட என் நிலைமைக்கு இன்று வருந்துகிறேன் .இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே இதனை நான் படித்து இருக்க வேண்டும். அவ்வளவு சுவையாக உள்ளது .பிரியா ராஜ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இது போல நீங்கள் நிறைய எழுத வேண்டும். சுவையாக உள்ளது.
நன்றி: திரு கருணா மூர்த்தி மற்றும் முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக