4 மே, 2025

இன்றைய புத்தகம்


சில பேரிலக்கியங்கள் பற்றி நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. மேற்குச்சாளரம்தான், ஆனால் அதனூடாக வழக்கமாகத் தெரியும் படைப்பாளிகள் இதில் இல்லை. அரிதாகவே வாசகர்கள் அறிந்த படைப்பாளிகளே மிகுதி. நவீனத்துவம் என்னும் வடிவ இறுக்கத்திற்கு எதிராக என் கருத்துகளை முன்வைக்கும் பொருட்டு செவ்வியல் நாவல்களை நான் விரித்துப்பேசினேன். அவ்வகை படைப்புகளே இதிலுள்ளன. விதிவிலக்கு கோபோ ஆப் எழுதிய மணல்மேடுகளின் பெண் போன்ற நாவல்கள். இவை வாசகர்களுக்கு உலக இலக்கியத்தின் அறியப்படாத சில பக்கங்களைக் காட்டும் என நினைக்கிறேன்.

ஜெயமோகன் 

கருத்துகள் இல்லை: