" அ 'னா ,ஆ'வன்னா ".
நா. முத்துக்குமார் .பட்டாம்பூச்சி பதிப்பகம் .முதல் பதிப்பு 2013. விலை ரூபாய் 60 .மொத்த பக்கங்கள் 100.
இது ஒரு கவிதை புத்தகம்.
வாழ்வில் எதிர்கொள்கிற ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரமும், சம்பவமும் ஒரு படம்போல நம்மோடு தங்கிவிடுகின்றன. மனித உறவுகள் என்பதே கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுதானோ என்று திகைக்க வைக்கும் அளவுக்கு நா. முத்துக்குமார் இக்கவிதைகளில் அன்றாட வாழ்வின் உயிர்த் துடிப்புள்ள சித்திரங்களை உருவாக்குகிறார். குமுதத்தில் தொடராக வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்ற கவிதைகள் இவை.
இந்த புத்தகத்தில் மொத்தம் 44 கவிதைகள் இடம் பெற்றிருக்கிறது.
ஒவ்வொரு கவிதையிலும் எனக்கு பிடித்த வரிகள் ஏராளமாக கொட்டி கிடக்கிறது. அவைகளையும் முத்து போல ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கி கொடுக்க முடியும் .அது நல்லதல்ல என்பதால் இரண்டே இரண்டு கவிதைகளில் எனக்கு பிடித்தவைகளை அப்படி தந்து இருக்கிறேன்.
நண்பர்களால் ஆனது இந்த உலகம். நண்பர்கள் இல்லாமல் யாரும் வளர்ந்திருக்க முடியாது .
பள்ளி பருவத்தில் கல்லூரி பருவத்தில் அலுவலக நிலத்தங்களில் நண்பர்கள் இல்லாமல் இருந்திருக்க முடியாது .
நண்பர்கள் என்று சொல்லும்போது ஆரம்ப பாடசாலைக்கு உள் நுழைவதற்கு முன் ஏற்படுகின்ற நட்பு அது தொடர்ந்தால் அது சிறப்பே தனி .
நாம் இருவர் நமக்கு இருவர் என்ற நிலை அந்த காலத்தில் இருந்தது .நாம் இருவர் நமக்கு பலர் என்ற நிலையும் இருந்தது .அதனால் இந்த நண்பர்கள் நண்பர்களின் தங்கைகள் என்கிற ஒரு கவிதைக்கு வித்திட்டது அந்த உறவுகள் .
இன்று நாம் இருவர் நமக்கு ஒருவர் என்கிற நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இது குடும்ப கட்டுப்பாட்டு கொள்கை. இந்த நிலையில் நண்பன் கிடைத்தாலும் நண்பனின் தங்கை அவளது பாசம் அவளது அன்பு எந்த நண்பனுக்கும் கிடைப்பதற்கான வாய்ப்பில்லை .
இந்த தங்கை பாசத்தை தான் அன்பைத்தான் இதைத்தான் கவிஞர் நா முத்துக்குமார் அவர்கள் இந்த கவிதையில் சுட்டிக் காட்டி இருக்கிறார் .
.இந்த கவிதை படித்த பிறகு எனது நெஞ்சம் எங்கோ சென்று விட்டது. எனக்கு நண்பர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு இல்லை என்று சொன்னாலும் ஓரிரு நண்பர்கள் கூட தாமரை இலை தண்ணீர் போல தான் நான் இருந்து விட்டேன். அது எனது சுபாவம்.
பள்ளியில் படிக்கின்ற வரையில் ஐந்து நண்பர்கள் ,ஐந்து நண்பர்கள் சகோதரிகளின் நினைவுகள் எனக்கு இப்பொழுது வரத்தான் செய்கிறது .
சிறப்பான கவிதை .இது போலத்தான் எல்லா கவிதைகளும்.
1) நண்பர்களின் தங்கைகள்.....
பின்பொரு நாள் பார்த்துக் கொண்டிருக்கையில் சட்டென்று வளர்ந்து சாப்பாட்டு இலைகள் நோக்கி உடைந்து எண்ணெய் வழியும் அப்பளங்கள் கூடைகளில் பயணிக்கும் ஏதோ ஒரு கல்யாண மண்டபத்தில் தாலி கட்டிக்கொண்டு கண்கலங்கி விடைபெறுகிறார்கள்.
நண்பர்களின் தங்கைகள் இல்லாத நண்பர்களின் வீடு, முற்றத்தில் பறிக்காமல் உதிர்ந்து கிடக்கும் பவழமல்லியுடனும்; பயணிகள் இறங்கிவிட்ட ரயில் பெட்டியின் வெறுமையுடனும்; நூற்றாண்டுகள் கடந்த மலைக்குகையின் மௌனத்துடனும்; நம் முன் நிற்கிறது.
2)..ஆறு வித்தியாசங்கள்.....
ஒன்று
ஜோதிடக் குறிப்புகளில் 'தண்ணீரில் கண்டம்' என்பது 'தண்ணீர் லாரியில் கண்டம்' என்றிருக்க வேண்டும்.
இரண்டு
இடதுபுறமிருக்கும் சேட்டுக் கடையில் 'தமிழ்' நகைகள் ''இந்தி' பேசுகின்றன.
மூன்று
முதல் முறையாக செல்ஃபோனில் பேசும் கிராமத்து ஆசாமி 'வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்' என ஆங்கிலத்தில் அறிவிக்கும் கணிப்பொறி பதிவுக் குரலிடம் 'ஒண்ணுமே புரியலை தாயி தமிழ்ல பேசும்மா' என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறார். அவரது காதுகளில் தொழில்நுட்பம் கம்மல் குத்தியிருக்கிறது.
நான்கு
காவிரி ஆறு நதிக்கரை நாகரிகம் அல்ல நதிக்கரை அநாகரிகம்.
ஐந்து
"டைகர் இங்கே வா!" என்றதும் வீட்டிலிருந்து வெளியே வருகிறது நாய்க்குட்டி
ஆறு
அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில் நிலா இருக்கிறது சோறும் இருக்கிறது ஊட்டுவதற்குத் தாயில்லை.
*நன்றி: திரு கருணா மூர்த்தி அவர்கள் மற்றும் முகநூல்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக