19 ஜூன், 2025

இன்றைய புத்தகம்


திரு கருணாமூர்த்தி Karuna Murthy எப்போதும் என்னைப் பிரமிக்கவைப்பவர். தொடர்ந்து முகநூலில்  நூல் விமர்சனம்/ அறிமுகம் எழுதுபவர். அனேகமாக தினந்தோறும் ஒரு நூல் குறித்து எழுதுகிறார்.  இதற்காக நூல்களைப்படிக்க அவர் எடுத்துக்கொள்ளும் நேரம் அதை அறிமுகம் செய்யத எழுத எடுத்துக்கொள்ளும்  நேரம்  எல்லாம்என்னை பிரமிக்கவைக்கும் விஷயம். பலவகையான நூல்களை வாசிக்கிறார். அதை நம்முடன்  முகநூலில் பகிர்ந்து கொள்கிறார். நால் அறிமுகம் என்றால்  அது குறித்து  அனைத்தும். அதன் பொருளடக்கம், ஆசிரியர் குறிப்பு, ஒவ்வொரு அத்தியாயம் குறித்தும் விரிவான நீண்ட பதிவுகள் இடுபவர். 
வாசிப்போம், தமிழ்வளர்ப்போம் குழுவிலும் பல நூல்களை விமர்சித்திருக்கிறார். 

அவருடைய முக நூல் பக்கத்தில் என் கடைசிக்கோடு நூல் பற்றிய விரிவான அறிமுகத்தைப் பதிவிட்டிருக்கிறார். 

நூல் பற்றி மட்டுமில்லாமல்  வரைபடங்கள் குறித்த மேலதிகத் தகவல்களையும் தந்திருக்கிறார்.  இந்த விபரங்களும் நான் அந்த நூல் எழுத ஆராய்ந்த போது சேமித்தவைகள் தான். 

ஆனால் நான் கடைசிக்கோடு நூலை அதிக பக்கங்களுடன் ஆய்வு நூலாக எழுதாமல்  எளிதாக விரைவில்  படிக்கக்  குறிப்பாக மாணவர்கள் படிக்க வசதியாக 160 பக்கங்களுக்கு வரும்படி  அமைத்திருந்தேன். 
அவருடைய அறிமுகத்தை சுட்டியில் படிக்கலாம் https://www.facebook.com/karuna.murthy.79

இது வரை கடைசிக்கோடு படிக்காதவர்கள் வாங்கிப்படியுங்கள். மின் நூலாக அமேசானில் கிடைக்கிறது. புஸ்தாகவின்  மின்னூல் நூலகத்திலும் மின் நூலாகப் படிக்கலாம். அச்சுப்பிரதி வேண்டுவோருக்கும் அவர்களே அனுப்புகிறார்கள்

நன்றி: திரு ரமணன் Vsv, திரு கருணா மூர்த்தி அவர்கள் மற்றும் முகநூல் 

கருத்துகள் இல்லை: