22 ஜூன், 2025

இன்றைய புத்தகம்

இன்றைய என் வாசிப்பு வண்ணநிலவனின் கடல்புரத்தில். வண்ணநிலவன் வண்ணதாசன் என்ற பெயரிலேயே ஒரு எனக்கு ஒரு கிரேஸ் எப்போதும் உண்டு. முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே படித்திருந்தாலும் இப்பொழுது மீண்டும் புதிதாக படிக்கின்ற அனுபவம் சுவையானது இன்பமானது. ஒருமுறை சுஜாதா அவர்கள் சுந்தர ராமசாமியைப் பற்றி குறிப்பிடும் போது இவர் எங்கேயோ போய் இருக்க வேண்டும் எழுதியிருக்கின்ற வண்ணங்களை பார்க்கும்போது சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்ட வேண்டும் என்று கூறினார் .அதேதான் நானும் இவருக்கு கூறுகின்றேன் .சாகித்ய அகாடமி விருது பெறும் தகுதி நிறைந்த எழுத்துக்கள் இவருடையது.
அந்த கடல்புரத்தில் எந்தக் குழந்தை பிறந்தாலும் எவ்வளவு பெரிய வீட்டில் பிறந்திருந்தாலும் அது முதலில் முலையை சுவைப்பதுகிடையாது. கருப்பான கடல் தண்ணீரை தான் .
அந்தத் தண்ணீரானது ஆண்பிள்ளை ஆனால் அவனுக்கு வ லிய காற்றோடும் கடலோடும்  போராட உரம் அளிக்கிறது, பெண்பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் எதிர்ப்படும் ஏமாற்றங்களையும் துரோகங்களையும் தாங்குவதற்கான மன தைரியத்தைக் கொடுக்கிறது . அவர்களுடைய வாழ்க்கை அநாதி காலந்தொட்டு பின்னிப் பிணைந்து கிடக்கிறது . கடல் வஞ்சித்து விடவில்லை மனுஷங்களை போல .வள்ளத்துக்காரர்களுக்கும் மீன் செய்கின்றன .ஆனால் உன்னைப் போல் இல்லை .குறைந்துவிட்டது .லாஞ்சில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணை போல  நிறைந்து போய் கிடக்கின்றன. சில குடும்பங்களில்  ஊரைவிட்டே போய்விட்டன அந்த இயந்திரம் அவர்களை வாழ்விக்க கடலைச் சுற்றி வருகிறதா, இல்லை நசிக்க செய்ய உரிமை கொண்டு வருகிறதா என்று யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. கடலில் மீன் இப்படி மீன் பிடிக்கும் விவசாயி அவன் ,இங்கே நிலத்தை உழுது அலை பாய்ந்து கொண்டிருக்கின்ற விவசாயிகள் இடிதாங்கி இங்கே. எனது நோக்கில் எனது தந்தையும் ஆறு ஏக்கர் நிலங்களை உழுது சாகுபடி செய்து கொண்டிருந்தார்.labour problem காரணமாக தென்னை மரங்களை நட்டு வைத்தார் ,இப்பொழுது அதைக்கூட பராமரிக்க அவர்களுக்கு உரிய வாரிசுகள் என்று விவசாயிகள் ஊரைவிட்டே சென்றுகொண்டிருக்கிறான் .அங்கே கடல்,! இங்கே நிலம் !!
30 ஆண்டுகளுக்கு முன்னதாகவே துல்லியமாக கடப்பாடுகளை சொல்லிவிட்டார்.

ஒரு எளிய மீனவ குடும்பத்தை பற்றியதாக தொடங்குகிறது ,முடியும் தருவாயில் குடும்பம் வசிக்கும் கிராமத்தை அது அமைந்திருக்கும் கடலைப் பற்றி  மாயம் இயல்பாக நிகழ்கிறது .இது கடல் புறத்தை குறித்த கதை மாத்திரமல்ல, கடலை பின்புலமாகக் கொண்டு இயற்கைக்கும் மனிதனுக்கும,் பழமைக்கும் புதுமைக்கும் தந்தைக்கும் மகனுக்கும் ,ஆணுக்கும் பெண்ணுக்கும் ,அன்பிற்கும் பகைக்கும் உடலுக்கும் உள்ளத்திற்கும், காதலுக்கும் காமத்திற்கும் இடையிலான சிக்கலான பிணைப்புகளை அவற்றில் விழுந்துவிட முடிச்சுகளை அவிழ்க்க முயன்று தோற்று குறைபாடுகளையும் குறித்து பேசுகிறது,

படித்து முடித்த பின்பு நான் இன்னும் அந்த பிலோமியுடன் அவளின் கருத்த கொழுத்த வாய் இதழ்களை பார்த்த வண்ணம்பேசிக்கொண்டே இருக்கிறேன். அது  வண்ணநிலவனின் கைத்திறம்.

நன்றி: திரு கருணா மூர்த்தி அவர்கள் மற்றும் முகநூல்

கருத்துகள் இல்லை: