23 ஆக., 2025

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 23

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 23

பொதுவாக நமக்கு வரலாற்றுப் பிரக்ஞை குறைவு. வரலாற்றில் ஆர்வமும் இல்லை; வரலாற்றை முறையாக ஆவணப்படுத்தும் பழக்கமும் இல்லை.

ஆனால் ஒரு இனத்தின் தனித்தன்மை, கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு சுமந்து செல்லும் சீரிய பணி வரலாற்றுக்கே உரியது. வரலாற்றிலிருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்ள முடியும். நம் முன்னோர்கள் செய்த தவறுகளை நாம் மீண்டும் செய்யாமலிருக்க இந்த விழிப்புணர்வு அவசியம்.

ஒரு ஆங்கிலப் பழமொழி இங்கே நினைவுக்கு வருகிறது:
“Those who forget the past are condemned to repeat it.”
(“கடந்தகாலத்தை மறந்தவர்கள்,  மீண்டும் அதையே செய்து துன்பப்பட நேரிடும்)

வரலாற்று விழிப்புணர்வை வளர்க்கும் நோக்கில், நான் தினமும் “வரலாற்றில் இன்று” என்ற தொடரை இங்கு பதிவிடத் தீர்மானித்துள்ளேன். உங்கள் ஆதரவு எனக்கு பெரும் உற்சாகமாக இருக்கும். இதோ மூன்றாவது பதிவு!

India Post, Government of India
Via WIKIMEDIA COMMONS


1872 டங்கட்டூரி பிரகாசம், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல்வாதி, 1946-1947 சென்னை  (ஆந்திரம் தமிழ்நாடு உட்பட்ட சென்னை பிரசிடென்சியின் பிரிமியர் பதவியும் (முதலமைச்சர்), அதன் பின்னர் 1953-1954ல் ஆந்திர மாநில முதல்வர் பதவியும் வகித்தவர். ஆந்திர கேசரி என்று மக்களால் பெரிதும் போற்றப்பட்டவர். ஆந்திராவில் அவரது பிறந்த தினம் மாநில அரசால் கொண்டாடப்படுகிறது


Battle of San Domingo, also known as the Battle for Palm Tree Hill
Collection. Polish Army Museum  
Via WIKIMEDIA COMMONS

சர்வதேச அடிமை வர்த்தக நினைவு நாள் மற்றும் அடிமைத்தன ஒழிப்பு நாளாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகிறது. 1791ல் இந்த நாளில் ஹைதியில் (HAITI NOW, ISLAND OF SAINT DOMIQUE THEN) அடிமை வர்த்தகத்திற்கு எதிராக கிளர்ச்சி மூண்டது. 

1697 முதல் ஸ்பானிய காலனியாக இருந்த இந்தத் தீவில் கரும்புத் தோட்டங்களில் மக்களை கடத்தி வந்து, அடிமைகளாக விற்று, கொடுமைப்படுத்தி வேலை வாங்கி வந்தனர். புரட்சியில் வென்று, போராட்டத்தின் மூலம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று குடியரசான முதல் அமெரிக்க நாடு என்ற சிறப்பைப் பெற்றது 

இந்த நாளில் வரலாற்று ஆய்வாளர்கள் மாணவர்கள் கூடி ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபிய நாடுகளில் வரலாற்று ரீதியாக மக்களை அடிமைகளாக்கி ஆதிக்கம் செய்ய நேரிட்டது ஏன் என்று கேள்விகளை மக்களிடையே எழுப்பி, மனிதரை அடிமைப்படுத்தும் இந்த கொடிய பழக்கத்தை வேரோடு அழிக்கும் சிந்தனையை வளர்க்கும் விதமாகவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.


File:World wide web.jpg

Author:  Svilen.milev

licensed under the Creative Commons Attribution-Share Alike 3.0 Unported license.

1991.  உலகளாவிய இணைய வலை   அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கென  உருவாக்கப்பட்ட போதிலும், இந்த உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்ற பெருமையைப் பெறுகிறது 



Chandrayaan-3 Lunar Mission-3.jpg

Author:  Truckjunction

licensed under the Creative Commons Attribution-Share Alike 4.0 International license


2023  விண்வெளித்துறையில் இந்தியாவின் மகத்தான சாதனை சந்திரயான் விண்கலம் நிலாவில் தரை இறங்கியது. உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது 



நன்றி: விக்கிப்பீடியா மற்றும் விக்கிமீடியா காமன்ஸ் ...


கருத்துகள் இல்லை: