21 ஆக., 2025

ஆன்மீக சிந்தனை

*இனிய தமிழில் இறை சிந்தனை*

ஏரகம் என்ற ஊர் வாணிப செட்டியார்கள் அதிகம் வாழ்ந்த ஊர். அவர்கள் பல சரக்கு வியாபாரம் தான் தெரிந்த தொழில். எப்பவுமே அந்த பலசரக்கை பற்றியே நினைப்பிலேயேதான் இருப்பார்களாம்.

அதில் ஒரு செட்டியார் அந்த ஊர் பெருமாளை வணங்க சென்றாராம். அங்கு போய் அவர் தன் மனக்குறையை சொல்லி புலம்பினாராம் எப்படி

"வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை மங்காத சீரகத்தை தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்டியாரே"

என்று 

எவ்வளவு சரக்குடன் ஒரு அருமையான பாடலில் பலசரக்கை வைத்து வாழ்க்கை தத்துவத்தை  சொல்லிவிட்டார் 

வெங்காயம்-----வெண்மையான உடல்

சுக்கானால் ----- சுக்காக சுருங்கி போனால்
(இஞ்சி காயந்தால் சுக்கு)

வெந்தயம் ------ நெருப்பிலே வேக்க்கூடிய உடல்

மங்காத சீரகம்---- குறையில்லாத வைகுந்தம்

தேடேன் பெருங்காயம்--- இன்னொருஉடலை 
இந்த ஆத்மா தேடாதே

என்ன ஒரு தமிழ் இதை போல் மற்ற மொழிகளில் முடியுமா?

அன்பர்களே எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் மனம் ஆண்டவனையே சரணடைவதாக இருக்கட்டும்
🙏

கருத்துகள் இல்லை: