13 ஆக., 2025

நலக்குறிப்புகள் : பிரண்டை


பிரண்டை வேலியோரங்களில் படர்ந்து வளரும் ஒரு கொடி வகையாகும். தண்ணீரே இல்லாமல் வெப்பத்தை நன்கு தாங்கி வளரும் தாவரமாகும். நம் முன்னோர்கள் காலத்தில் பிரண்டை மிக முக்கியமான உணவாகவும் மருந்தாகவும் இருந்திருக்கிறது. 

​பிரண்டை கொடி

பிரண்டை குச்சி குச்சியாக கொடி போல படரும் தாவரம். Cissus quadrangularis என்னும் தாவரவியல் பெயர் கொண்ட பிரண்டை உருட்டுப் பிரண்டை, இனிப்பு பிரண்டை, புளிப்பு பிரண்டை, ஓலை பிரண்டை, முப்பிரண்டை என பல வகைகள் இருக்கின்றன.

பிரண்டையில் வைரத்துக்கு இணையான பண்புகள் இருக்கின்றன. நம்முடைய எலும்புகளை இரும்பு போல வைத்திருக்கும் என்பதால் இதை வஜிரவல்லி, சஞ்சீவினி என பல பெயர்களில் அழைக்கிறார்கள்.

எல்லா நோய்க்கும் தீர்வாகும் சஞ்சீவி மூலிகை பிரண்டை.

​பிரண்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
​பிரண்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் 
வைட்டமின் ஏ,
வைட்டமின் சி (100 கிராமில் 300 மி.கி),
வைட்டமின் ஈ (100 கிராமி்ல் 600 மி.கி),
கால்சியம்,
பாஸ்பரஸ்,
நார்ச்சத்துக்கள்,
ஃபிளவனாய்டு, பீனால், டேனின், கரோட்டீன் உள்ளிட்ட ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன.
சைட்டோ ஸ்டீராய்டு கெமிக்கல்கள்,
வலி நிவாரணப் பண்புகள்,
ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள்,
அதிக அளவில் இருக்கின்றன.

​பிரண்டையின் மருத்துவ குணங்கள் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்
​பிரண்டையின் மருத்துவ குணங்கள் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்
எலும்பு முறிவு, எலும்பு மூட்டு நகர்வு, எலும்புத் தேய்மானம், எலும்பு புரை ஆகியவற்றைச் சரிசெய்யவும் உலும்புகளை வலிமையாக்கவும் பிரண்டையை மருந்து போல பயன்படுத்தலாம்.

எலும்பு சார்ந்த பிரச்சினைகளைச் சரிசெய்யவும் ஆஸ்ட்ரியோபொராசிஸ், ஆர்த்தரைடிஸ் பிரச்சினை உள்ளவர்கள் பிரண்டையை தொடர்ந்து உணவில் சேர்த்து வர, வலி குறையும் எலும்புகள் வலுவாகும்.

எலும்பு முறிவு பிரச்சினைக்கு மருந்தாக மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளில் இந்த பிரண்டையில் உள்ள என்ஸ்ட்ராக்ட்டில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மூலக்கூறு இருக்கிறது. எலும்புகள் உடைந்தால் வேகமாகக் கூடும்.

வயிற்றில் பாக்டீரியா மற்றும் பிற கிருமித் தொற்றுக்களின் பாதிப்பினால் ஏற்படும் அல்சர், பெப்டிக் அல்சர், வாய்ப்புண், அமிலத்தன்மை குடலில் அதிகரிப்பதால் ஏற்படும் குடல் புண்கள் ஆகியவற்றை ஆற்றும் தன்மை பிரண்டைக்கு உண்டு.

பிரண்டையில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் ஜீரணத்தை தூண்டி, ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்டிராலை குறைக்கும்.

இடுப்புப் பகுதியில் சேரும் ஊளைச்சதையைக் குறைத்து உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டு வர பிரண்டை உதவி செய்கிறது.
மூல நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக பிரண்டை செயல்படுகிறது.

மூல நோயால் ஏற்படும் ரத்தக் கசிவு ஏற்படுவதைத் தடுத்து நிறுத்தவும் இது உதவி செய்யும்.

ரத்தத்தில் உள்ள எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்டிராவின் அளவைக் கட்டுப்படுத்துவதால் ரத்த அழுத்தததை சீராக வைத்திருக்க உதவி செய்யும்.

ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் போது மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட கார்டியோ வாஸ்குலர் நோய்களின் ஆபத்துகளைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்க முடியும்.பிரண்டையி்ல் கால்சியம் மிக அதிக அளவில் இருக்கிறது. இதனா்ல் இது கால்சியம் பற்றாக்குறையைத் தீர்க்கிறது.

பெண்களுக்கு 40 வயதைத் தாண்டும் போது எலும்புத் தேய்மானம், எலும்பின் அடர்த்தி குறைதல் மற்றும் கால்சியம் பற்றாக்குறை அதிக அளவில் ஏற்படுகிறது. இதை சரிசெய்யவும் பிரண்டை உதவுகிறது. 100 கிராம் அளவு பிரண்டையில் கிட்டதட்ட 300 மில்லிகிராம் அளவு கால்சியம் இருக்கிறது.

#குழந்தைகள்  பெரும்பாலும் சாப்பிட அடம்பிடிப்பார்கள். பசியே இல்லாமல் இருப்பார்கள். அதுபோன்ற இருக்கும் குழந்தைகளுக்கு பிரண்டையை பொடியாகவோ துவையலாகவோ செய்து உணவில் சேர்த்து கொடுத்து வர நன்கு பசியெடுக்கும்.

பிரண்டையில் உள்ள நார்ச்சத்துக்கள் மலமிளக்கியாக செயல்படும். மலச்சிக்கவைத் தீர்க்கும்.

அதோடு குடலில் இருக்கும் புழுக்கள் ஆகியவையும் மலத்தின் வழியே வெளியேறும். நாள்பட்ட அஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

சுவாசக் கோளாறுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் பிரண்டை சரிசெய்யும்.

குறிப்பாக ஆஸ்துமா, மூச்சத்திணறல் பிரச்சினைகள் இருப்பவர்கள் இந்த பிரண்டையை எடுத்து வர ஆஸ்துமா கட்டுக்குள் வரும்.


பிரண்டையை முடிந்த வரை உணவில் சேர்த்து கொள்வதும் முக்கியமாக வளர்ப்பதும் அவசியம்.

கருத்துகள் இல்லை: