Author: Phlsph7
This file is made available under the Creative Commons CC0 1.0 Universal Public Domain
Via WIKIMEDIA COMMONS
*சிந்தனைக் களம்*
▪️▪️▪️▪️▪️▪️▪️
மனித வாழ்வின் நோக்கமே மகிழ்வான வாழ்வைப் பேணுவது தான். நாம் உழைப்பதும், ஓடுவதும், நடப்பதும், பேசுவதும், எழுதுவதும், விளையாடுவதும் இது போன்ற அனைத்து செயல்படுகளும் நாம் மகிழ்வதற்காக மட்டும் தான்...
நான் கவலையாக இருப்பதற்காகத் தான் உழைக்கப் போகின்றேன். நான் அழுவதற்காகத் தான் விளையாடப் போகின்றேன் என்று யாரும் சொல்வது கிடையாது...
எனவே!, சூரிய ஒளியை நோக்கித் தான் செடிகள், கொடிகள், மரங்கள் செல்லும்...
அதுபோலத் தான் மனித வாழ்வு என்பது உன்னதமானது. அது மகிழ்வை நோக்கி மட்டும் தான் செல்லும்.
மகிழ்வை அடையப் பல வழிகள் உள்ளன...
🔘 "தேவையற்றவையின் மீது கவனம் வேண்டாம்...!"
...............................................
மனித சிந்தனையானது சற்று வேற்றுமையானது. தேவையின் மீது கவனத்தை வைப்பதை விட தேவையற்றவைகளின் மீது தான் நாம் அதிக கவனம் வைக்கின்றோம்...
உதாரணமாக!, உங்கள் மனத்தில் யாரைப் பற்றி அதிகமாக சிந்திக்கின்றீர்கள்...? என்ற கேள்விக்கு, எண்பது விழுக்காடு மக்கள் தங்கள் எதிரிகளைப் பற்றித் தான் அதிமாக சிந்திகின்றோம் என்று சொல்கிறார்கள்...
நம் அருகில் இருக்கின்றவர்களை, நம்மை நேசிக்கின்ற, நம் வாழ்வைப் பற்றி சிந்திக்கின்றவர்களை நாம் அதிகமாகக் கண்டு கொள்வதில்லை...
இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் வீட்டில் எது தேவையான பொருள், எது தேவையற்ற பொருள் என்பதைப் பிரித்து வைத்தால் கண்டிப்பாக தேவையற்றப் பொருட்களின் பட்டியல் தான் அதிமாக இருக்கும்...
எனவே!, தேவைற்ற களைகளை அகற்றுவது போல தேவையற்றவையின் மீது உள்ள கவனத்தை அகற்ற முயற்சிப்பது நல்லதே...!
🔘 "ஒற்றை இலக்கம் வேண்டாம்...!!"
..................................................
ஒற்றைச் சிந்தனை, ஒற்றை வாழ்வு முறை, ஒற்றைத் தத்துவம், இது போன்று ஒன்றை மட்டும் நம்பிக் கொண்டிருந்தால், மகிழ்வான வாழ்வு என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகத் தான் இருக்கும்...
நட்புகளிடத்தில் தான் மகிழ்ச்சி இருக்கின்றது என்று நம்பி உறவுகளில் உள்ள மகிழ்வை இழந்து விடுகின்றோம்...
எனவே!, மகிழ்வு என்பது பல நபர்களிடத்தில் இருக்கின்றது. அதனைத் தேடிக் கண்டு பிடித்து மகிழ்வோம்...
🔘 "கவலை வேண்டாம்...!!"
.......................................................
கவலை தான் அனைத்து நோய்களுக்கும் காரணம். இறந்த காலத்தை நினைத்து எதிர்கால வாழ்வைப் பற்றிய திட்டமில்லாமல் வாழ்கின்றோம்...
எதிர்காலக் கவலையை நினைத்து நிகழ்கால மகிழ்வை இழந்து விடுகின்றோம்...
*ஆம் நண்பர்களே...!*
🟡 விடையில்லாத வினாக்களும், தீர்வுகளில்லா சிக்கல்களும், தொடர்ச்சியான துன்பங்களும், மீள முடியாத சறுக்கல்களும், கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை விட, கண்ணுக்குத் தெரியாத எதிரிகளும் நம் வாழ்வில் வந்து விட்டுத் தான் செல்வார்கள்...!
🔴 இன்றைய நிகழ்காலத்தில் மகிழ்ச்சி தராத ஒன்றை உங்கள் எதிர்காலத்திற்கு மனபாரத்தோடு கடத்திச் செல்ல எத்தனிக்காமல் அதைப் புறக்கணித்து விட்டு கடந்து செல்லுங்கள்...!!
⚫ உங்கள் வாழ்க்கை இலகுவானதாகவும் அமைதியானதாகவும் இருக்கும். இதைப் புரிந்து கொள்ளும் மனதில் எந்த வருத்தமும் நிலைக்காது. மகிழ்ச்சி திளைக்கும்...!!!
👤 *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*☕