மே 9, 2025 அன்று பாகிஸ்தானிடமிருந்து பிரிந்துவிட்டதாகவும் சுதந்தர பலூசிஸ்தான் பிறந்துவிட்டதாகவும் மிர் யார் பலோச் எக்ஸ் தளத்தில் அறிவித்தார். பலூசிஸ்தானில் என்னவோ நடக்கிறது என்பதே அப்போதுதான் பெரும்பாலான உலக மக்கள் கவனத்துக்கு வந்தது. உண்மையில், 1948 ஆம் ஆண்டு முகம்மது அலி ஜின்னா செய்த ஒரு மாபெரும் நம்பிக்கை துரோகமும் அதன் தொடர்ச்சியாக இன்று, இக்கணம் வரை பலூசிஸ்தானில் பாகிஸ்தான் அரசும் ராணுவமும் நிகழ்த்தி வரும் ஈவிரக்கமற்ற ரத்த வெறியாட்டங்களும் அம்மக்களை ஆயுதம் ஏந்த வைத்தன. பா. ராகவனின் இந்நூல், பாகிஸ்தானுக்கு எதிரான பலூசிஸ்தான் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் வரலாற்றை அதன் அரசியல்-சமூக-பொருளாதாரப் பின்புலத்தில் மிகவும் விரிவாக ஆராய்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக