6 ஜன., 2026

இன்றைய புத்தகம்

சென்னை புத்தகக்கண்காட்சி 2025-2026 புதிய வெளியீடு

அஸ்தினாபுரம் 

கடலோர மக்களின் வாழ்வைப் பல்வேறு பரிணாமங்களுடனும் காலப்போக்கில் அவர்கள் அடைந்துவரும் மாற்றங்களுடனும் கலாபூர்வமாகப் பதிவுசெய்துவருபவர் ஜோ டி குருஸ். ‘ஆழிசூழ் உலகு’, ‘கொற்கை’ ஆகிய நாவல்களைத் தொடர்ந்து அவர் எழுதிய மூன்றாவது நாவல் ‘அஸ்தினாபுரம்’.

கடலோரத்தில் பிறந்த ஒருவன் கப்பல் சரக்குப் போக்குவரத்துத் துறைக்குச் செல்வதையும் அந்தத் துறையில் பல்வேறு போராட்டங்களுக்கிடையில் உயர்ந்த நிலையை அடைவதையும் சொல்லும் ‘அஸ்தினாபுரம்’ கப்பல் சரக்குப் போக்குவரத்துத் துறை சார்ந்த கதையாகவும் விரிகிறது. கள அனுபவமும் அபாரமான நிர்வாகத் திறனும் கொண்ட நாவலின் மையப்பாத்திரம் வழியே ஜோ டி குருஸ் பல்வேறு விஷயங்களை உணர்த்துகிறார். பல கேள்விகளை எழுப்புகிறார். கப்பல் போக்குவரத்துத் துறை செயல்படும் விதத்தைக் கதைப்போக்கினூடே மிக நுட்பமாகவும் துல்லியமாகவும் சொல்கிறார். கூடவே ஒரு தனிமனிதனின் வாழ்வை யும் அவன் வாழ்வு எவ்வாறு பிற மனிதர்களுடன் பிணைந்தும் அறுந்தும் மீண்டும் இணைந்தும் பயணிக்கிறது என்பதையும் காட்டுகிறார். மானுட இனத்தின் கீழ்மை சமூகத்தின் சகல அடுக்கு களிலும் பரவியிருக்கும் இன்றைய யதார்த்தத்தையும் நாவல் கவனப்படுத்துகிறது.

@followers D.i. Aravindan Kannan Sundaram 

#kalachuvadupublications #சென்னைபுத்தகக்கண்காட்சி #chennaibookfair2026 #newbookrelease #புதியவெளியீடு
#அஸ்தினாபுரம் #asthinapuram#joedcruz #ஜோடிகுருஸ் #tamilnovel #தமிழ்நாவல் #coastallife #maritimelife #shippingindustry #WorkingClassStories #SocialReality
#contemporarytamilliterature #moderntamilwriting 
#bookstagramtamil #tamilreaders #kalachuvadupublications

கருத்துகள் இல்லை: