விக்கிபீடியாவில் மேகத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் ? ' முகில் ' என்ற தலைப்பில் சுருக்கமாக உள்ளத்தைக் காண : http://ta.wikipedia.org/wiki/ முகில் . ஆங்கிலத்தில் விலாவாரியாகக் காண : http://en.wikipedia.org/wiki/ Cloud . ( சிறந்த படங்களுடன் ). மேல்நிலை, நடுநிலை, கீழ்நிலை என்று எத்தனை பிரிவுகள் ! குமுலஸ் , நிம்பஸ் , சிர்ரஸ் , ஸ்ரேடஸ் என்று எத்தனை வகைகள்!! எத்தனை அறிவியல் விளக்கங்கள் ! கண்டு , படித்து மகிழுங்கள் . நன்றி : W ikipedia , the free encyclopedia .
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு . அன்புதான் மனித சமுதாயத்தின் அடிப்படை . அன்புதான் ஒருவரையொருவர் விரும்புகின்ற ஆசையை உண்டாக்குவது . அந்த ஆசையினால் தான் நட்பு என்கின்றன உறவு தானாக உண்டாகின்றது . அதனால்தான் சமுதாயம் அமைகிறது . ( நாமக்கல் கவிஞரின் தெளிவுரையிலிருந்து ).
அன்புரசம் நிறைந்த அமுதக்கலசம் காட்டி ஆனந்தம் இந்தாவென்று அழைப்பாழ் - கையை வானவில்லைப்போல வளைப்பாள் - அந்தக் கத்தும்கடல் கொடுத்த முத்துச்சரம் தொடுத்த காட்சிஎன்னும் அந்தப் பற்களும் - தமிழ் சாட்சி சொல்லச் சிந்தும் சொற்களும் - தன் துள்ளும் எழிற் கெண்டையான விழி இரண்டை சொல்லுக் கணையாக விடுவாள் - அன்பு உள்ளத்திலே வந்து தொடுவாள் ! ' கத்தும் கடல் கொடுத்த ' என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடலிலிருந்து ஒரு பகுதி .
நடந்தேன் , நடக்கின்றேன் நடந்து நடந்தேகுகிறேன் நடந்தேன் , நடக்கின்றேன் நடந்து நடந்தேகுகிறேன் செல்லும் வழி இருட்டு செல்லும் மனம் இருட்டு , சிந்தை அறிவினிலும் தனி இருட்டு . நடையால் வழிவளரும் நடப்பதனால் நடை தொடரும் ; அடியெடுத்து வைப்பதற்கு ஆதிவழி ஏதுமில்லை . சுமையகற்றிச் சுமையேற்றும் , சுமைதாங்கியாய் விளங்கும் சுமைக்குள்ளே தானியங்கிச் சுமையேற்றும் சும்மாடே ! ' எங்கு , எதற்கு ஏனென்று ' கேட்டக்கால் ' எங்கு எதற்கு ஏனென்றே கேள்வி வரும் ? என்னை அனைத்தேகும் இருட்டுக்குரல் தானோ ? என்னை அணைக்கவரும் மருட்டுக் குரல் தானோ ? நடந்தேன் , நடக்கின்றேன் , நடந்து நடந்தேகுகிறேன் . நடந்தேன் , நடக்கின்றேன் நடந்து நடந்தேகுகிறேன் .
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் , itna.com & YouTube ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
அங்கிங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளோடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாம் தங்கும்படிக்கு இச்சை வைத்து உயிர்க்குயிராய் த் தழைத்ததெது மனவாக்கினில் தட்டாமல் நின்றதெது சமய கோடிகளெல்லாம் தம் தெய்வம் எம் தெய்வமென்று எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றதெது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளதெது மேல் கங்குல்பகல் அற நின்ற எல்லையுளதெது அது கருத்திற்கு இசைந்ததுவே கண்டன எல்லாம் மோனவுரு வெளியதாகவும் கருதி அஞ்சலி செய்குவாம் .
சாப்பிட அமர்ந்ததும் பிரார்த்தனை செய்த பிறகே சாப்பிட வேண்டும் . எனவேதான் சாப்பிடுவதற்கு முன் மந்திரம் ஜபிக்கப்படுகிறது . உணவின் முன் அமர்ந்திருக்கும்போது நமக்கு எவ்வளவு பொறுமை இருக்கிறது என்பதைச் சோதித்தறியலாம் - மாதா அமிர்தானந்தமயி
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி .