17 செப்., 2012

இன்று ஒரு தகவல்-36: ரத்தக் குழாய்கள்

நமது உடலில் 60,000 மைல் (96,500 கி.மீ) நீள ரத்தக் குழாய்கள் இருக்கின்றன. இவை உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் சென்று, கழிவுகளை வெளியேற்றுகின்றன.

நன்றி: தினமலர், மதுரை, செப்டம்பர் 2, 2012

இன்றைய சிந்தனைக்கு-160:

ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு அதையே வாழ்வின் ஆதாரமாக்கிக் கொள்ளுங்கள். அக்கருத்தை ஒட்டியே வாழ்க்கை நடத்துங்கள். வெற்றியை அடைய இதுவே எளிய வழி – சுவாமி விவேகானந்தர்

கம்பன் கவிதை-9:

மானம்  நேர்ந்து  அறம்  நோக்கி  மனுநெறி
போன  தண்  குடை  வேந்தன்  புகழ்  என
ஞானம்  முன்னிய  நான் மறையாளர்  கைத்
தானம்  என்ன தழைத்தது  நீத்தமே.

யோகசித்தி-75: கற்ற பயன்-2:

புலனை வென்றோனே விரிநூல் அளந்தாலும்
உள்ளத் துணர்வே உயர்வு.

வெள்ளம் வெள்ளமாக நூற்பெருக்கை மூளையால் அளந்தாலும், தனது உள்ளத்தில் எழும் கடவுள் உணர்வே உயர்ந்த அறிவாகும்.

தாயுமானவரின் பராபரக்கண்ணி-61:

எண்ணம் அறிந்தே இளைப்பறிந்தே ஏழைஉய்யும்
வண்ணம் திருக்கருணை வையாய் பராபரமே

வரலாற்றில் சில மைல் கற்கள்-4: செப்டம்பர் பதினாறாம் நாள்

வரலாற்றில் சில மைல் கற்கள்-4: செப்டம்பர் பதினாறாம் நாள்

இன்று செப்டம்பர் 16ம் நாள். இந்த வருடத்தினுடைய 259ம் நாள். இந்த ஆண்டில் இன்னும் 106 நாட்கள் பாக்கி இருக்கின்றன.

1620ம் ஆண்டு இந்த நாளில்தான் அமெரிக்க வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ள மே ஃப்ளவர் (Mayflower) என்ற கப்பல் வட அமெரிக்காவிற்காக பயணம் துவங்கியது. ஆங்கிலேயரும் மற்ற ஐரோப்பியரும் அமெரிக்காவில் குடிபுகுந்து, பின்னர் அமெரிக்க நாடு உருவானதின் முதல் படி இது. மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Mayflower


1812ல் இந்த நாளில் நள்ளிரவுக்குப் பிறகு துவங்கிய தீ, மாஸ்கோ நகரின் நான்கில் மூன்று பங்கை அழித்தல்.
மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Fire_of_Moscow_(1812)


1908ல் இந்த நாளில் தற்போதைய மல்டிநேஷனல் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் நிறுவப்பட்டது. மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/General_Motors_Corporation

1920ல் இந்த நாளில் புகழ்பெற்ற வால் ஸ்டிரீட்டில் ஒரு குதிரை வண்டியில் வைக்கப்பட்ட வெடிகுண்டு ஜெ.பி.மார்கன் கட்டிடத்திற்கு முன் வெடித்து, அதில் 38 பேர் கொல்லப்பட்டனர், 400 பேர் காயமடைந்தனர். மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Wall_Street_bombing

1943ம் ஆண்டில் இந்த நாளில் நேசப் படைகள், இரண்டாம் உலகப்போரின் ஒரு பகுதியாக, இத்தாலியப் படையெடுப்பை வெற்றிகரமாக முடித்தல்.
http://en.wikipedia.org/wiki/Allied_invasion_of_Italy

1945ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக, இந்த நாளில் ஜப்பானியப் படைகள் ஹாங்காங்கில் சரணடைதல்.


1947ம் ஆண்டில் இந்த நாளில் கத்லீன் புயல் சைத்தாமா, டோக்கியோ மற்றும் டோன் ஆறு பகுதிகளைத் தாக்கி, அதன் விளைவாக 1930 பேர் கொல்லப்படுதல்

1955ம் ஆண்டு இந்த நாளில் அர்ஜெண்டினாவின் ஆட்சியாளர் ஜுவான் பெரான் ஆட்சியிலிருந்து நீக்கப்படுதல்.  ஜுவான் பெரான் பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Juan_Per%C3%B3n

1955ம் ஆண்டு இந்த நாளில் சோவியத் ரஷியாவின் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து முதன்முறையாக நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது.

1959ல் இந்த நாளில் நியூயார்க் நகரில் டெலிவிஷனில் முதன்முறையாக ஒரு போட்டோகாபியர் செயல்படுத்திக் காட்டப்பட்டது. இந்த மாடல் இயந்திரம் ஜெராக்ஸ் 914 என்ற வகையைச் சேர்ந்தது.  இந்த உலகின் முதல் செராக்ஸ் இயந்திரம் பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Xerox_914

1963ம் ஆண்டில் இந்த நாளில் மலேஷியா என்ற புதிய நாடு உருவாதல். மலேயா, சிங்கப்பூர், பிரிட்டிஷ் வடக்கு போர்னியோ (சபா) மற்றும் சரவாக் தீவுகளின் கூட்டமைப்பிலிருந்து இந்த புதிய நாடு உருவாக்கப்படல். ஆனால் இதிலிருந்து சிங்க்கப்பூர் விரைவில் வெளியேறி, தனி நாடானது.  மலேஷியா பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Malaysia

1975ல் இந்த நாளில் பப்புவா நியூகினி ஆஸ்திரேலியாவிலிருந்து விடுதலை பெறல்.

1978ல் இந்த நாளில் ரிஸ்டர் ஸ்கேலில் 7.5 முதல் 7.9 அளவு கொண்ட ஒரு கடுமையான நில நடுக்கம் ஈரானின் தபாஸ் பகுதியில் 25000 பேர் இறக்கக் காரணமாகிறது.

1987ல் இந்த நாளில் ஒசோன் படுகையைக் காப்பதற்கான மான்ட்ரீல் ஒப்பந்தம் கையெழுத்தானது.  இந்த மான்ட்ரீல் ஒப்பந்தம் பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Montreal_Protocol

1386ல் இந்த நாளில் இங்கிலாந்தின் அரசர் ஐந்தாம் ஹென்றி பிறந்தார். அவரைப் பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Henry_V_of_England

1507ல் இந்த நாளில் சீனப் பேரரசர் ஜியாஜிங் பிறந்தார். அவரைப் பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Jiajing

1916ல் இந்த நாளில் புகழ்பெற்ற இந்தியப் பாடகர் திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பிறந்தார். அவரைப் பற்றி தமிழில்:
http://ta.wikipedia.org/wiki/ம._ச._சுப்புலட்சுமி



1923ல் இந்த நாளில் சிங்கப்பூரின் முதல் பிரதமரான புகழ்பெற்ற லீ க்வான் யூ பிறந்தார். அவரைப் பற்றி மேலும் அறிய - தமிழில்:



1087ல் இந்த நாளில் போப்பாண்டவர் ஐந்தாம் விக்டர் மறைந்த நாள். மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Pope_Victor_III

1380ல் இந்த நாளில் பிரஞ்சுப் பேரரசர் ஐந்தாம் சார்லஸ் மறைந்தார். மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Charles_V_of_France

1824ல் இந்த நாளில் பிரஞ்சுப் பேரரசர் பதினெட்டாம் லூயி மறைந்தார். மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Louis_XVIII_of_France

இந்த நாள் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் தீவுகளில் மாமனிதர்கள் தினமாகக் கொண்டாடப் படுகிறது.  அந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக பலவகையிலும் சிறப்பாகப் பணி புரிந்தவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் ஸ்பெயினிடமிருந்து மெக்ஸிகோ விடுதலை பெற்ற நாள். மெக்ஸிகோவின் சுதந்திர தினம்.

இந்த நாள் பப்புவா நியூகினியின் சுதந்திர தினம். அந்நாடு ஆஸ்திரேலியாவிடமிருந்து விடுதலை பெற்ற நாள்.

இந்த நாள் உலகெங்கிலும் சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த நாள் மலேசியாவில் “மலேஷியா தினமாகக்” கொண்டாடப்படுகிறது. மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Malaysia_Day

நன்றி: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவிற்கு

15 செப்., 2012

வரலாற்றில் சில மைல் கற்கள்-3: செப்டம்பர் பதினைந்தாம் நாள்

வரலாற்றில் சில மைல் கற்கள்-3: செப்டம்பர் பதினைந்தாம் நாள்

இன்று செப்டம்பர் பதினைந்தாம் நாள். இந்த வருடத்தின் 258வது நாள் இது. (லீப் வருடமாயின் 259வது நாள்). இன்னும் 107 நாட்கள் இந்த ஆண்டில் மிச்சமுள்ளன.

 668ம் ஆண்டு இந்த நாளில் ரோமானியப் பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்ஸ் இத்தாலியில் சிராக்யூஸில் கொலை செய்யப்பட்டார். பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்ஸ் பற்றி அறிய: 
http://en.wikipedia.org/wiki/Constans_II_(Byzantine_Empire)

 921ம் ஆண்டு இந்த நாளில் டெட்டின் நகரில் புனித லுட்மிலா அவரது மருமகளின் ஆணைப்படி கொலை செய்யப்பட்டார். புனித லுட்மிலா பற்றி அறிய: 
http://en.wikipedia.org/wiki/Saint_Ludmila

 1789ம் வருடம் இந்த நாளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வெளியுறவுத் துறை நிறுவப்பட்டது.

 1812ம் ஆண்டு நெப்போலியன் பிரஞ்சுப் படையுடன் மாஸ்கோவின் கிரெம்லினுக்குள் நுழைதல்.

 1821ம் ஆண்டு இந்த நாளில் குவத்தமாலா, எல் சல்வடோர், ஹோண்டுராஸ் மற்றும் கோஸ்டொ ரிகா ஆகிய நாடுகள் இணைந்து ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தல்.

 1830ல் இந்த நாளில் லிவ்ர்பூலில் இருந்து மான்செஸ்டர் வரைக்குமான இரயில் பாதை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 1835ம் ஆண்டு இந்த நாளில் எச் எம் எஸ் பீகிள் கப்பல் காலபாகோஸ் தீவுகளை அடைதல். கப்பலில் சார்லஸ் டார்வின் தமது உலகையே மாற்றிய கண்டுபிடிப்பை நிகழ்த்துவதன் முதல் படி இது.

 1916ல் இந்த நாளில் முதலாம் உலகப் போரில் சோம்மே போரில் முதன்முறையாக டாங்கிகள் பயன்படுத்தப்படுதல். சோம்மே போர் பற்றி மேலும் அறிய: 
 http://en.wikipedia.org/wiki/Battle_of_the_Somme_(1916)

 1935ல் இந்த நாளில் இந்தியாவின் புகழ்பெற்ற டூன் பள்ளி நிறுவப்படுதல். டூன் பள்ளி பற்றி அறிய:



 1935ல் இந்த நாளில் நாஜி ஜெர்மனி ஸ்வஸ்திகாவுடன் கூடிய புதிய தேசியக் கொடியை அறிமுகம் செய்தல்.

 1944ல் இந்த நாளில் அமெரிக்க அதிபர் ப்ராங்ளின் டி.ரூஸ்வெல்ட்டும் இங்கிலாந்துப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆக்டகன் மாநாட்டின் ஒரு பகுதியாக க்யூபெக் நகரில் சந்தித்தல். ப்ராங்ளின் டி.ரூஸ்வெல்ட் மற்றி, பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Franklin_D._Roosevelt
http://en.wikipedia.org/wiki/Winston_Churchill

 1945ல் இந்த நாளில் ஒரு புயல் தென் ப்ளோரிடாவையும், பஹாமாஸ் தீவுகளையும் தாக்கி 366 ஆகாயவிமானங்கள் அழிந்துபோதல்.

 1947ம் ஆண்டு இந்த நாளில் கத்லீன் புயல் ஜப்பானின் கண்டோ பகுதியைத் தாக்கி அதில் 1077 பேர் மரணம்.

 1948ல் இந்த நாளில் எஃப்-86 சேபர் விமானங்கள் மணிக்கு 671 மைல்கல் (1080 கிமீ) வேகத்தில் பறந்து சாதனை படைத்தல்.

 1950ம் ஆண்டில் இந்த நாளில் கொரியப் போரில், அமெரிக்கப் படைகள் கொரியாவின் இஞ்சான் நகரில் நுழைதல்..

 1952ம் ஆண்டில் இந்த நாளில் ஐக்கிய நாடுகள் சபை எரித்திரியாவை எத்தியோப்பியாவிற்கு அளித்தல்.

 1959ல் இந்த நாளில் அமெரிக்க விஜயம் செய்த முதல் சோவியத் தலைவராகிரார்.

 1961ல் இந்த நாளில் கார்லா புயல் டெக்ஸாஸ் மாநிலத்தை மணிக்கு 175 மைல் வேகத்தில் தாக்குதல்.

 1981ல் இந்த நாளில் அமெரிக்க செனட் நீதித் துறைக் கமிட்டி சாந்த்ரா டே ஓகானரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதை ஏற்றுக்கொள்ளல்.

 1983ல் இந்த நாளில் இஸ்ரேலிய பிரதமர் மெனாசம் பெகின் பதவி விலகல்.

 1254ம் ஆண்டு இந்த நாளில் மார்க்கோ போலோ பிறந்தார்.
http://en.wikipedia.org/wiki/Marco_Polo

 1789ல் இந்த நாளில் பிரபல அமெரிக்க நாவலாசிரியர் ஜேம்ஸ் பெனிமோர் கூப்பர் பிறந்தார்.
http://en.wikipedia.org/wiki/James_Fenimore_Cooper

 1857ல் இந்த நாளில் அமெரிக்காவின் 27வது ஜனாதிபதியான வில்லியம் ஹொவர்ட் டாஃப்ட் பிறந்தார்.
http://en.wikipedia.org/wiki/William_Howard_Taft

 1860ல் இந்த நாளில் இந்தியப் பொறியியல் மேதை விஸ்வேஸ்வரய்யா பிறந்தார்.
http://en.wikipedia.org/wiki/Sir_Mokshagundam_Visvesvaraya

 1876ல் இந்த நாளில் புகழ்பெற்ற இந்திய நாவலாசிரியர் சரத் சந்திர சட்டோபாத்யாய் பிறந்தார்.
http://en.wikipedia.org/wiki/Sharat_Chandra_Chattopadhyay

 1890ல் இந்த நாளில் பிரபல ஆங்கில எழுத்தாளர் அகதா கிறிஸ்டி பிறந்தார்.



 1909ல் இந்த நாளில் தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்தார்.



நன்றி: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா

13 செப்., 2012

வரலாற்றில் சில மைல் கற்கள்-2: செப்டம்பர் பதின்மூன்றாம் நாள்

 
வரலாற்றில் சில மைல் கற்கள்-2: செப்டம்பர் பதின்மூன்றாம் நாள்

செப்டம்பர் பதின்மூன்றாம் நாள் வருடத்தின் 256வது நாள் (லீப் வருடமாயின் 257வது நாள்). இந்த ஆண்டில் இன்னும் 109 நாட்கள் மீதி உள்ளன.

§                    1213 – மூரட் யுத்தம் முடிவுக்கு வந்த நாள் – இது பற்றி மேலும் அறிய:
                    http://en.wikipedia.org/wiki/Battle_of_Muret
                     
§                    1923 இந்த நாளில் ஸ்பெயினில் இராணுவப் புரட்சி மூலம் மிகுயல் ப்ரைமோ டி’ரிவேரா ஆட்சியைக் கைப்பற்றுதல்
                    சர்வாதிகாரி டி’ரிவேரா பற்றி மேலும் அறிய:

§                    1953ல் இந்த நாளில் குருஷ்சேவ் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப் படுதல்.  குருஷ்சேவ் பற்றி மேலும் அறிய:
                    http://en.wikipedia.org/wiki/Nikita_Khrushchev

§                    1956ல் இந்த நாளில் அமெரிக்க மல்டி நேஷனல் கணினி நிறுவனமான முதல் கம்ப்யூட்டர் தகவல் சேமிப்புத் தட்டை அறிமுகப்படுத்தியது (RAMAC 305).
                    ஐபிஎம் நிறுவனம் பற்றி மேலும் அறிய:
                    http://en.wikipedia.org/wiki/IBM

§                    1968ல் இந்த நாளில் அல்பேனியா வார்சா உடன்படிக்கை நாடுகளின் குழுவில் இருந்து வெளியேறல்.  வார்சா உடன்படிக்கை பற்றி அறிய:
                   http://en.wikipedia.org/wiki/Warsaw_Pact

§                    1971ல் இந்த நாளில் சீன மக்கள் குடியரசின் இரண்டாவது தலைவரும், மாவோவிற்குப் பிறகு அவருடைய இடத்திற்கு வாரிசாகக் கருதப்பட்ட லின் பியாவ் மாவோவிற்கு எதிரான திடீர்ப் புரட்சியில் தோல்வியுற்று, தப்பிச் செல்ல முயல்கையில், அவரது விமானம் விபத்திற்குள்ளாகி அவரும், அவருடன் சென்ற மற்றவர்களும் மரணம். லின் பியாவ் பற்றி மேலும் அறிய:
                    http://en.wikipedia.org/wiki/Lin_Biao

§                    2001ல் இந்த நாளில் செப்டம்பர் பதினோராம் நாள் பயங்க்கரவாத தாக்குதலுக்குப்பின் நிறுத்திவைக்கப் பட்டிருந்த, சிவில் விமானப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பமாதல்.

§                    2008ல் இந்த நாளில் டில்லியில் தொடர் குண்டுவெடிப்பால் முப்பது பேர் மரணம். நூற்று முப்பது பேர் காயம்.
                    டில்லி தொடர்குண்டுவெடிப்பு பற்றி மேலும் அறிய:

§                    1876ல் இந்த நாளில் அமெரிக்க எழுத்தாளர் ஷெர்வுட் அன்டர்சன் பிறந்தார்.
                    ஷெர்வுட் அன்டர்சன் பற்றி மேலும் அறிய:
                    http://en.wikipedia.org/wiki/Sherwood_Anderson
               அவரது புகழ் பெற்ற வைன்ஸ்பெர்க், ஒஹயோ நாவலை முழுமையாகப் படிக்க:
                    
§            1894ல் இந்த நாளில் பிரபல ஆங்கில நாவலாசிரியரும், நாடக ஆசிரியருமான ஜே.பி.பிரீஸ்ட்லி பிறந்தநாள். அவரைப் பற்றி மேலும் அறிய:
                    http://en.wikipedia.org/wiki/J._B._Priestley
                   
§            1916ல் ஆங்கில எழுத்தாளர் ரோல்ட் டால் பிறந்த நாள். (இவருடைய சிறுகதைகள் மிகச் சிறப்பாக இருக்கும்.  அவற்றில் ஒரிரு கதைகளை நான் படித்திருக்கிறேன்.)  அவரைப் பற்றி மேலும் அறிய:
                
§            1969ல் இந்த நாளில் புகழ் பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் சுருள் பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் பிறந்த நாள்.

§             1971ல் இந்த நாளில் குரொசியா நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் ஆட்டக்காரர் கோரன் இவானிசெவிச் பிறந்த நாள்.

§                    1976ல் இந்த நாளில் பிரபல நியூஸிலாந்து கிரிக்கெட் ஆட்டக்காரர் கிரெய்க் மாக்மில்லன் பிறந்த நாள்.

§                    1987ல் இந்த நாளில் மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் பிறந்த நாள்.

§                    0081ல் ரோமானியச் சக்கரவர்த்தி டைட்டஸ் மறைவு.  அவரைப் பற்றி மேலும் அறிய:
§                    http://en.wikipedia.org/wiki/Titus

§                    1592ல் உலகப் புகழ் பெற்ற பிரஞ்சு கட்டுரையாளர் மீஷல் டி மொன்டைன் மறைவு.
§                    http://en.wikipedia.org/wiki/Michel_de_Montaigne
§                    மொன்டைனின் கட்டுரைகளை முழுமையாகப் படிக்க:
§                    http://www.gutenberg.org/files/3600/3600-h/3600-h.htm

§                    1598ல் இந்த நாளில் ஸ்பெயின் நாட்டு மன்னர் இரண்டாம் பிலிப் மறைவு.       அவரைப் பற்றி அறிய:   http://en.wikipedia.org/wiki/Philip_II_of_Spain

§ இந்த நாள் சர்வதேச சாக்லேட் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

நன்றி:  ப்ராஜெக்ட் கூட்டன்பர்க் மற்றும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா

இன்று ஒரு பழமொழி-1:

அலைந்து   கெட்டது   மனது;
அலையாமல்  கெட்டது   ஆரோக்கியம். 

நலக்குறிப்புகள்-76: புதினாக்கீரையின் பயன்கள்

உயிர்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து புதினாக் கீரையில் ஏராளமாக உள்ளது.  இரத்தத்தை  சுத்தி செய்யும் ஆற்றல் படைத்தது புதினா.  ருசியின்மையை நீக்கி, பசியை ஏற்படுத்தும்.  வாந்திபேதியை நிறுத்தும் ஆற்றல் கொண்டது.  வயிற்றுக்கும், குடலுக்கும் வலிமை தரும்.