14 அக்., 2008

என்ன நடக்கிறது?-1: "மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடுகள் ஏன் பயன்படுத்தப்படவில்லை?"

அரக்கோணத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் பேசியதிலிருந்து:
"மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கு திட்டங்கள் சென்றடையும் என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார். அரக்கோணம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்று எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி குறிப்பிட்டார். ஆனால், மத்திய சுகாதாரத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

* கிராமப்புற சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய சுகாதாரத்துறை 1850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியைக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.
* சென்னை எழும்பூர் மருத்துவமனையை மேம்படுத்த நூறு கோடி ரூபாய் ஒதுக்கி, இரு ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணி நடக்கவில்லை.
* இரத்த அணுக்கள் அமைக்க இருநூற்று ஐம்பது கோடி ரூபாய் ஒதுக்கியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* முதியோர் சுகாதார வசதிக்காக ஐம்பது கோடி ஒதுக்கினோம். இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவில்லை.
* தேசீய சித்த ஆராய்ச்சி மையம் அமைக்க சென்னையில் ஐந்து ஏக்கர் இடம் கேட்டோம். ஆனால் தமிழக அரசு இடத்தை ஒதுக்கவில்லை.

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்".
நன்றி: தினமலர், மதுரை, அக்டோபர் 13, 2008.

கருத்துகள் இல்லை: