20 அக்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-30: "புகைவண்டி"

கரியிலிருந்து
டீசலுக்கு மாறி
புகையில்லா வண்டியானது
புகை வண்டி.

அன்று
கோத்ராவில்
மறுபடியும்
புகைவண்டியானது.

பிறிதொரு முறை
பாகிஸ்தான் போகும் வழியில்
வெடித்துச் சிதறியபோது
புகைவண்டியானது.

முன்பு
தேசப் பிரிவினையின்
சிதறிய ரத்தத்தில்
கறை வண்டியானது.

மதங்களுக்கிடையே
புகையாமலிருந்தால்
தொடர்வண்டி எப்பொழுதும்
புகையா வண்டியாய்த் தொடரும்.

கருத்துகள் இல்லை: