5 ஏப்., 2010

யோக சித்தி-18: வழிபாடு-3

பற்றற்றுப் பற்றி பணிந்துணர்வால் அர்ச்சித்துத்
தொட்டுநில் தே துதி.

நான் எனது என்னும் அகந்தைப் பற்றின்றி, எல்லாம் அவனே, யானும் அவனுடைமையே என்று உள்ளந்தோறும் நடனமாடும் இறைவன் திருவடி பற்றி, அதையே சரண் புகுந்து வணங்கி, அன்புணர்வால் அர்ச்சித்து, அத்திருவடியையே தியானத்தால் தொட்டு, உறவு கலந்து நின்றால் அதுவே சிறந்த தோத்திர வழிபாடாகும்.

கருத்துகள் இல்லை: