11 ஏப்., 2010

யோக சித்தி-19 : வழிபாடு-5

தம்மைக் கொடுத்தோர்க்குத் தன்னையே தந்தருளும்
அம்மையப்பன் ஆணை வழியாற்று.

எனது, யானற்று எல்லாம் அவனே என்னும் உணர்வால் தேக சுதந்திரம், போக சுதந்திரம், யோக சுதந்திரம் எல்லாம் அடைக்கலமாகக் கொடுத்தவருக்கு, இறைவன் சர்வ சக்திமானான தன்னையே தந்து அருள் செய்வான். அத்தகைய கருணைக் கடவுளே உலகின் தாயும் தகப்பனும் ஆவன். அவன் ஆணையாகிய அருளின் வழிபற்றி, சுத்த சன்மார்க்க தர்ம சாதனமாகவே உனது கடமைகளைச் செய்.

கருத்துகள் இல்லை: