7 செப்., 2018

அதிர்ச்சித் தகவல்கள்-3: மதுரை நிலத்தடி நீர் இல்லாத ஊர்

M.boopathiraj பதிவு...
மதுரை நிலத்தடி நீர் இல்லாத ஊர்!
No water in Bore. Why?😳

மதுரையில் நிலத்தடி நீர் ஏன் இல்லை?காரணம்,மதுரையில் மட்டும்,கடந்த நாற்பது வருடங்களில், நீர் நிலைகள் எப்படி அழிக்கப்பட்டு இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள,கீழே படியுங்கள்.
*
1.வலைவீசித் தெப்பம் - பெரியார் பேருந்து நிலையமாக மாறியிருக்கிறது.
2. அனுப்பானடி சின்ன கண்மாய்.
3. சிந்தாமணி கண்மாய்.
4. தூளிபத்திக் கண்மாய்.
5. ஐவத்தான் கண்மாய்.
6. அயன் பாப்பாக்குடி கண்மாய்
7. அவனியாபுரம் கண்மாய் ( திடக் கழிவு கிடங்காக உள்ளது.)
(மீதி ஐந்துமே 2 -- 7 கழிவு நீர் தேக்கமாக உள்ளன.)
.
8. சிலையனேரி கண்மாய்
9. ஆனையூர்க் கண்மாய்
10. தத்தனேரி கண்மாய்
11. வில்லாபுரம் கண்மாய்
12. ஆ.கோசாக்குளம் கண்மாய்
(மேற் கூறிய 8--12 ஐந்து கண்மாய்களும் குடியிருப்புப் பகுதிகளாக மாறிவிட்டன .)
.
13. வண்டியூர் கண்மாய் (மாட்டுத்தாவணி, பூ மார்க்கெட் போக, மற்ற எஞ்சிய பகுதி, குற்றுயிரும் குலையுயிருமாக நீர் சேமிப்பு ஆதாரமாக உள்ளது.)
.
14. செல்லூர் கண்மாய் (தென்னக இரயில்வே மற்றும் ஒரு பகுதி குடிசைகளும் உள்ளன. எஞ்சியுள்ள பகுதி நீர் சேமிப்பு ஆதாரமாக உள்ளது.)
15. பீ.பி குளம் கண்மாய் (வருமான வரி அலுவலகம், சுங்கத்துறை மற்றும் அஞ்சல் அலுவலகமாக உள்ளன. எஞ்சியுள்ள இடத்தில் கழிவு நீர் தேங்கியுள்ளது.)
.
16. சொக்கிகுளம் கண்மாய் (வானொலி நிலையம் மற்றும் அலுவலர் குடியிருப்பு, அரசு அலுவலர் குடியிருப்பு, வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஆகியவை உள்ளன.)
17. தல்லாக்குளம் கண்மாய் (மதுரை மாநகராட்சி அலுவலகம், சட்டக்கல்லூரி, வணிகவரி அலுவலகம். எஞ்சியுள்ள இடத்தில் தமிழ் சங்கம் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.)
18. மானகிரிக் கண்மாய் (வக்பு வாரிய கல்லூரி மற்றும் அதன் விடுதி கட்டிடம்.)
19. செங்குளம் கண்மாய் ( மாவட்ட நீதிமன்றம்.)
20. உலகனேரி கண்மாய் ( உயர் நீதிமன்றம்.)
21. புதுக்குளம் கண்மாய் (செய்தியாளர் நகர், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் மற்றும் அரசு போக்குவரத்து அலுவலகம் ஆகியவைகள் உள்ளன.)
22. கோச்சடை கண்மாய் (வீடுகட்டவும், செங்கலுக்காவும் மண் தோண்டப்பட்டு ஆழமாக உள்ளது. அறிவிக்கப் படாத குப்பைக் கிடங்காகவும் உள்ளது)
23. புதூர் கண்மாய் (மாவட்ட வருவாய் அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.)
24. நாராயணபுரம் கண்மாய்
25. முடக்கத்தான் கண்மாய் (குடியிருப்புகளின் கழிவு நீர் இக்கண்மாய்களில் கலக்கிறது.)
26. ஆத்திக்குளம் கண்மாய் ( கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது.)
27. அனுப்பானடி பெரிய கண்மாய்
28. விரகனூர் கண்மாய்
29. ஐராவதநல்லூர் கண்மாய் ( இவைகளின் பெரும் பகுதி குடியிருப்புகளாகும், எஞ்சியுள்ள பகுதிகள் கழிவு நீர் தேக்கமாகவும் உள்ளது.)
30. சம்பக்குளம் கண்மாய் (வடிவேலு நகைச்சுவை போல், இந்த கண்மாயையே காணவில்லை)
.
31. மாடக்குளம் கண்மாய் (விவசாய ஆக்கிரமிப்பு மற்றும் குடியிருப்பு ஆக்கிரமிப்புகள்.)
32. திருப்பரங்குன்றம் கண்மாய் (விவசாய ஆக்கிரமிப்பு மற்றும் குடியிருப்பு ஆக்கிரமிப்புகள்.)
*
இவற்றில் பெரும்பாலான் கண்மாய்கள் 1980கள் வரை ஒன்றோடொன்று தொடர்பு கொண்ட, வடிகால்கள் நிறைந்த கண்மாய்களாகவும் என் பள்ளிப் பிராயத்தில் பார்த்திருக்கிறேன்.
*
இந்த காலத்துப் பிள்ளைகளுக்கு கண்மாய்கள் என்றால் காட்டுவதற்கு வண்டியூர் கண்மாய் மட்டுமே, (மாட்டுதாவனி பேருந்து நிலையம், பூ சந்தை என உள்ளாட்சி நிர்வாகமே ஆக்கிரமித்தது போக குற்றுயிருக் குலை உயிருமாக உள்ளது!
*
இதுவல்லாமல் என் கவனத்திற்கு வராமல் போன கண்மாய்கள் எத்தனையோ? என் தந்தை இன்றிருந்தால் கேட்டிருக்கலாம்!!
*
இதுபோக, எனக்குத் தெரிய காணாமல் போன தெப்பக் குளங்களும் உள்ளன!
.
1. கிருஷ்ணராயர் தெப்பக்குளம் (ஞாயிற்று கிழமை சந்தையாக மாறியிருக்கிறது. தெப்பகுளம் இருந்ததற்கு அறிகுறியாக தற்போது அந்த தெருவுக்கு பெயர் கிருஷ்ணராயர் தெப்பகுளம் தெரு என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது)
2. எழுகடல் தெப்பக்குளம் (இங்கு தெப்பக்குளம் இருந்தது யாருக்குமே தெரியாது. எழுகடல் தெரு மட்டுமே உள்ளது!)
3. கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பக்குளம்.
4.  இன்மையிலும் நன்மை தருவார் கோவில் தெப்பக்குளம்
5. பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் தெப்பக்குளம்
6. வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் (தற்போதைய மதுரையின் பிரதான கிரிக்கெட் மைதானம்!)
7. பொற்றாமரைக்குளம் (இதில், காண்கிரீட் தரை போட்டதால், கோயில் தூண்கள்,மேல்விதானம் விரிசல் விட்டது)
*
அப்புறம் கிருதுமால் நதி.
இப்படி ஒரு நதி இருப்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இதை நதியென்று கூறினாலும் உலகமே சிரிக்கும். இதுதான் தற்போதைய மதுரையின் பிரதான கழிவுநீர் கால்வாய்!!
*
இவ்வலவு நீர்நிலைகள் மதுரையில் இருப்பதோ அல்லது இருந்ததோ கூட அடுத்த தலைமுறை என்ன, நம் தலைமுறைக்கே தெரியாமல் இருக்கலாம்.
*
இவ்வளவு நீர்நிலைகளை கட்டி, அவற்றை பராமரித்து வந்த நம் முன்னோர்கள், கண்டிப்பாக்
நீர் மேலாண்மையில் கில்லாடிகள்தான்!
*
ஆனால்,நாம் அப்படி இல்லை. முட்டாள்களாக இருக்கிறோம். நிலத்தடி நீரை இழந்துவிட்டோம்.
That is why we do not have any bore well water.
*
எவ்வளவு நீர் செல்வங்களை நாம் இழந்து வருகிறோம், இழந்திருக் கிறோம் என்பதை, இதை பார்த்த பிறகாவது நாம் உணர்வோமா?
*
இப்பொழுது சுதாரித்தால் கூட பத்து, இருபது கண்மாய்களைக் காப்பாற்றலாம்.
*

கருத்துகள் இல்லை: