8 செப்., 2018

ஆன்மீக சிந்தனை-92: எது மதம்?

எது மதம் - ஓஷோவின் விளக்கம்  :-

ஒருவர் வெறுமனே தானும் சந்தோஷமாக இருந்து கொண்டு ,

அளவு கடந்த இந்த பிரபஞ்சத்தையும் அனுபவித்துக் கொண்டு ,

மரங்களோடு நடனமாடிக் கொண்டு, கடற்கரையில் கடல் அலைகளோடு விளையாடிக் கொண்டு,

வேறு எந்த நோக்கமும் இல்லாமல் வெறுமனே சந்தோஷத்திற்காக கடல் சிப்பிகளை சேகரித்து கொண்டு இருப்பார்.

உப்புக் காற்று, குளிர்ந்த மணல், உதிக்கின்ற சூரியன், நல்ல மெதுவான ஓட்டம், இதைத் தவிர வேறு எதை நீங்கள் விரும்புகிறீர்கள்?

என்னைப் பொருத்த மட்டில் இது தான் மதம்.

காற்றை அனுபவித்தல், கடலை அனுபவித்தல், மணலை அனுபவித்தல், சூரியனை அனுபவித்தல் இது தான் மதம்.

ஏனெனில் இந்த இயற்கையை விடவும் வேறு ஒரு கடவுள் இங்கு இல்லை.

-- ஓஷோ --

கருத்துகள் இல்லை: