15 செப்., 2018

அதிர்ச்சித் தகவல்கள்-4: பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு ஏன்?

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த நான்கரை ஆண்டுகளாக பெட்ரோலியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் வகையில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை தாறுமாறாக உயர்த்தியதுதான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதை மறைக்க முயற்சிக்கிறது.

2014 மே மாதம் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி ரூ.9.20 காசுகள், டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.3.46 காசுகள். தற்போது 2018 செப்டம்பரில் பெட்ரோல் மீது உற்பத்தி வரி ரூ.19.48 காசுகள், டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.15.33 காசுகள் அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கின்றது.

2014-ல் மோடி அரசு பதவி ஏற்றபின்னர், பெட்ரோல், டீசல் மீதான வரிகளின் மூலம் மட்டுமே சுமார் பதினொரு லட்சம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி இருக்கின்றது. இது வரலாறு காணாத பகல் கொள்ளை அல்லவா?

தமிழக அரசும் தனது பங்குக்கு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை பெட்ரோலுக்கு ரூ.34, டீசலுக்கு ரூ.25 என்று உயர்த்திவிட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைக்கிறது.

( Excerpt from Maalai Malar Tamil daily's News report quoting Vaiko dated Sep.8, 2018)

நன்றி: திரு வைகோ மற்றும்  மாலைமலர் தமிழ் நாளிதழ்

கருத்துகள் இல்லை: