கேள்வி :
."சுவாமிஜி, கருமையம், மனம், உள்ளம், நெஞ்சம், அகம், ஆன்மா இவற்றின் வேறுபாட்டை விளக்க வேண்டுகிறேன்."
.
மகரிஷியின் பதில் :-
."(1) தூல உடலுக்கு (Physical body) மையமான விந்து நாதம், (2) சூக்கும உடலுக்கு (Astral Body) மூலமான உயிர்த்துகள்கள் (3) (Causal Body) மூலமான சீவகாந்தம் இவை மூன்றும் இணைந்தது தான் கருமையம் (Genetic Center) உயிரினத்தின் பெருமையும், சிறப்பும் இந்தக் கருமையத்தில் தான் அமைந்துள்ளது.
உயிர்மையத்துள் அமைந்துள்ள அறிவானது உயிரின் சுழற்சியால் எழும் விரிவலையான காந்த அலை மூலம் புலன்கள் வழியாகப் பொருளோடு தொடர்பு கொள்ளும் போது அந்த அறிவையே மனம் என்கிறோம்.
அகம் என்பதும், நெஞ்சம் என்பதும், உள்ளம் என்பதும், ஆன்மா (Soul) என்பதும் கருமையத்தையே குறிக்கும். மனிதன் உடலாலும், மனத்தாலும் செய்யும் செயல்கள் அனைத்தும் பதிவாகி, வித்தில் மரம் போல் இருப்பு வைக்கப்படும் இடம் கருமையம்."
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
**************************
கருதவம் :
"கருவறிந்து கருத்தொடுங்கித் தவமிருக்க
கற்பதற்கு வயது பதினாறு வேண்டும்,
கருமுதிற்ச்சியடையா முன் இதைப் பழக்கக்
கனல் மீறும் வேகத்தை உடல் தாங்காது;
கருதவத்திற்கரு கதையாம் அந்நாள் மட்டும்
கருத்தை விரித்தொன்றல் ஜெபம் உருவத் தியானம்,
கருமுதிர்ந்தும் கருத்தை விரித்தே வணங்கல்
கனியிருக்கக் காய் உண்ணும் வகை போல் ஆகும்."
.
"இரு விழிகள் மூக்கு முனை குறிப்பாய்நிற்க
எண்ணத்தைப் புருவங்களிடை நிறுத்தி,
ஒருமையுடன் குருநெறியில் பழகும் போது,
உள்ளொளியே பூரித்து மூலமான
கருவுக்கு மேனோக்கு வேக மூட்டும்;
கருத்துக்கு இந் நிகழ்ச்சி உணர்வாய்த் தோன்றும்;
அருவ நிலையாம் ஆதி உருவாய் வந்த
அத்துவித ரகசியமும் விளக்கமாகும்."
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
For contacts :
https://vethathiri.edu.in/centers/loc/india/
https://vethathiri.edu.in/centers/
https://vethathiri.edu.in/contact/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக