நன்றி: அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு
சில கதைகளை எத்தனை தடவை படித்தாலும் உதட்டோரம் உங்களை அறியாமலே ஒரு சிரிப்பு வரும்,
இதோ, இந்த கதையைப் போல !
“ஒரு அதிகாலைப்பொழுது.
கணவன் மனைவியை எழுப்பி கேட்டான்.
"டியர், யோகா பண்ணப்போறேன். நீயும் வர்றியா?"
கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி , "ஓ, அப்படின்னா நான் குண்டா இருக்கேன்! உடம்பை குறைன்னு சொல்றீங்க. அப்படி தானே?"
கணவன்: "அதுக்கில்லைம்மா! யோகா பண்றது ஹெல்த்துக்கு நல்லது!"
மனைவி: "அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?"
கணவன்: "இல்லை இல்லை! நீ வரவேணாம். விடு!"
மனைவி: "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க ?"
கணவன்: "ஐயோ இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"
மனைவி: "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"
கணவன்: "மறுபடி பாரு. நான் அப்படி சொல்லலை!"
மனைவி: "அப்படிதான் சொன்னீங்க! அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"
கணவன்: "தயவு செஞ்சு விடு! காலங்காத்தால ஏன் சண்டை?"
மனைவி: "ஆமாங்க. நான் சண்டைக்காரிதான்!"
கணவன்: "Ok! நானும் போகலை. போதுமா?"
மனைவி: "உங்களுக்கு போக அலுப்பு! அதுக்கு என்னை குத்தம் சொல்றீங்க.”
கணவன்: "சரி, நீ தூங்கு! நான் தனியா போய்க்கிறேன்! சந்தோஷமா?"
மனைவி: "அதானே. உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்! அதுக்குதானே இவ்வளவும் பேசுனீங்க?"
வெறுத்துப்போன கணவன் எவ்வளவு யோசித்தும், தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை. டயர்டாகி படுத்துவிட்டான்."
(திருமணமான ஆண்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்)
எத்தனை முறை இந்தக் கதையைப் படித்து சிரித்திருப்பேன் என்று எனக்கே நினைவில் இல்லை.
இதை scroll செய்து கொண்டு போன அடுத்த கணமே
இந்த சுவாரஸ்ய புகைப் படம் என் கண்ணில் பட்டது.
அட, சுஜாதாவின் கல்யாண ஃபோட்டோ.
சுஜாதாவின் மனைவி சொல்லி இருந்தார் :
“1963 ஜனவரி 28 கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சத்திரத்தில் எங்க கல்யாணம் நடந்தது. கல்யாணக் கோலத்தில் நாங்க இரண்டு பேரும் ! எனக்குப் பிடிச்ச படம் இது.”
சுஜாதா பற்றி அவரது மனைவி மேலும் சொல்லி இருந்தார் இப்படி :
“ஐம்பது வருடம் அவரோடு குடும்பம் நடத்தியிருக்கிறேன். எங்களுக்குள்ளே அடிக்கடி சண்டை வரும். நான் கோபமா கத்தினாலும் அவர் அதிர்ந்து பேசமாட்டார். ஏதாவது புத்தகம் படிக்க ஆரம்பித்துவிடுவார். கொஞ்ச நேரம் கழித்து ‘ஒரு கப் காபி கொடு’ என்பார். அவ்வளவுதான்.
எங்களுக்குள் சண்டை முடிந்துவிடும்."
‘ஒரு கப் காபி கொடு’ -
சண்டையை முடிவுக்கு கொண்டு வர எவ்வளவு சிம்பிளான கிளைமாக்ஸ்.
சுஜாதா தனது ஒவ்வொரு கதையிலும் நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஏதாவது ஒரு வித்தியாசமான கிளைமாக்ஸ் வைத்திருப்பார்.
ஆனால் தன் மனைவியுடன் நடக்கும் சர்ச்சையில் மட்டும் அவரது சமரச கிளைமாக்ஸ் வார்த்தை எப்போதுமே ஒரே மாதிரிதானாம்.
“ஒரு கப் காபி கொடு !”
சுஜாதாவின் கிளைமாக்ஸ்களிலேயே எனக்குப் பிடித்த கிளைமாக்ஸ் இதுதான்.
John Durai Asir Chelliah
(மீள்)
நன்றி: திரு ஆர்.சி.நடராஜன், சுஜாதா கடைசி பக்க ரசிகர் குழு, முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக