இன்றைய எனது வாசிப்பு தி ஜானகிராமன் அவர்கள் எழுதிய "அடி."
அவர் தம் இறுதிக் காலத்தில் எழுதிய குறுநாவல் இது.உடல் உடலை விழைவதும்,உயிர் உயிருக்கு ஏங்குவதும் இறை செயல்கள் . அதை மனித புத்தி தோற்கடிகின்றது, பின்னர் அதுவே நியதி ஆகிறது .இந்த நெறியை புறக்கணிக்கும் போது தான் பலத்த அடி விழுகிறது. அது விழுவது மனித உடலில் மட்டுமல்ல தெய்வ மனதிலும் கூட.
ஆண் பெண் விழைவின் தீரா புதிர்களை மாளா தவிப்பை, அறிவியலா மர்மங்களை இவர் கணிசமாக எழுதியுள்ளார்.நுட்பமாக ஆராய்ந்து எழுதுகிறார் .
மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை வசீகரமான அபாயத்துடன் எழுதுவார்.அநேகமாக மனதை உடல் வெற்றி கொள்வதாகவே பல படைப்புகளில் கதையோட்டமும் அமைந்திருக்கும்.
இந்த மீறலை இயல்பானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் குற்ற உணர்வின் பரவசத்தை உணர்த்துவதாகவும் அவரது பாத்திரங்கள் காணுகின்றன.
இவற்றில் இருந்து வேறுபட்டது தான் தற்போதைய"அடி".
அரை நூற்றாண்டு காலம் பாலுணர்வின் தனித்த சுழற்பாதைகளில் பயணம் செய்த மரபை மீறிய கலைமனம் நடமாட்டம் மிகுந்த பொது வழியை அடைந்ததின் அடையாளமாகவோ, ஆண் பெண் உறவின் ரகசியத்தை கண்டடையும் முயற்சியின் இறுதி புள்ளியாகவோ இந்தக் குறுநாவலை காணலாம்.
"அடி"____
கவித்துவம் நிறைந்த சொல் அடி
காதல் ரசம் சொட்டும் சொல் அடி
தெய்வீகம் கமழும் சொல் அடி
காமத்தை நேயத்தை அகத்தே மிளிரச்செய்யும் சொல் அடி .
அடி முடி ஆழம் காணவும்
விடி வடி அழகு எல்லை காணவும் உதவும் சொல் "அடி".
- கருணாமூர்த்தி
(நன்றி: "வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம்" முகநூல் குழு, 19 - 4 - 2020)
நன்றி: திரு சுந்தர் கோபாலகிருஷ்ணன், தி.ஜானகிராமன் இலக்கிய வட்டம், முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக