28 மே, 2020

கருத்தைக் கவர்ந்தது : படிப்பறிவில்லை, பண்பு இருக்கிறது!


 [இன்று நான் மனம் நெகிழ்ந்த நிகழ்வு.‌.]

பலாப்பழம் நம்ம ஊரில் புகழ்பெற்றது என்பதால் எச்சில் ஊறியது...பக்கத்து ஊரில் நண்பனின் தோப்பில் பலா எடுக்க சென்றேன்...

செல்லும் வழியில் முந்திரிப்பழம் பறித்துக்கொண்டு இருந்தனர் வயதான தொழிலாளிகள்.. வாங்கலாம் என்று இறங்கிச் சென்று பழம் வேண்டும் என்று கேட்டேன் 4 பழம் பறித்து கையில் கொடுத்தார்கள்..இன்னும் வேணும்னா ஒரு பை எடுத்துட்டு வாப்பா என்றனர்...ஒரு பத்து பழம் எடுத்து பையில் போட்டனர்..

கிழிந்த உடை பிய்ந்து போன செருப்பு..முகத்தில் வறுமை அவர்களுக்கு...எவ்வளவு பாட்டி என்றேன் "அதெல்லாம் வேண்டாம் சாமி நல்லா சாப்டுங்க பாத்து பத்திரமா வீட்டுக்கு போங்க" என்றார் பாட்டி...எவ்வளவு கேட்டும் பணம் வாங்கவில்லை..திரும்பவும் பத்திரமா போ சாமி என்றனர்...அவர்களின் தோற்றத்தையும் அவர்கள் காட்டிய அன்பாலும் மனம் கலங்கியது..

யோசித்து பாருங்கள்!

நாம் அனைவரும் வெவ்வேறு துறையில் இருக்கிறோம்..
இதில் எத்தனை பேர் இவர்கள் போன்றவரை மரியாதையாக நடத்துகின்றோம்..
இவர்களிடத்து படிப்பறிவு இல்லை ஆனால் பண்பு இருக்கிறது நாம் ஏன் படித்து விட்டு இப்படி நடக்கின்றோம்..பல இடங்களில் இவர்களைப் போன்றவர்கள் இழிவுப்படுத்த படுகின்றனர்...என் கண்களால் கண்டுள்ளேன்..
அதுவும் அரசு ஆஸ்பத்திரியில் கொடுமையோ கொடுமை...

இவர்களைப் போல் உள்ளவர்கள் உங்களிடம் வந்தால் அன்பாக பேசுங்கள்..
புரிந்துக்கொள்ள நேரம் ஆனாலும் பொறுமையாக சொல்லுங்கள்...பாவம் படிக்காதவர்கள்..

இவர்களைப் போன்றவர்கள் ரோட்டு ஓரத்தில் ஏதேனும் விற்றால் பேரம் பேசாமல் வாங்குங்கள்..அவர்கள் சேமிப்பிற்காக விற்பனை செய்யவில்லை ஒரு வேலை சோற்றுக்குத்தான்..

காரியத்திற்காக பணக்காரனுக்கு செய்யும் அன்பான சேவையை இவர்களுக்கு செய்யுங்கள் கடவுளாக நீங்கள் அவர்களுக்கு காட்சி அளிப்பீர்கள்..

இந்த பதிவை பார்த்து எவரேனும் ஒரு ஏழை உங்களால் அன்பாக நடத்தப்பட்டால் அது எனக்கு கிடைத்த வெற்றி!

மனிதம் காப்போம்!

நன்றி: திரு அஜித் ராஜ், புதிய தகவல், முகநூல்.

கருத்துகள் இல்லை: