25 மே, 2020

கருணை உள்ளங்கள்

நேற்று(14/5/2020) இரவு வழக்கமான இரவுப்பணியில் தமிழக ஆந்திர எல்லை சுங்கச்சாவடியில் இருந்தேன்.பணி முடிக்கும் போதே இரவு 9. 30மணி. 
அந்நேரம் செங்குன்றம் காவல் ஆய்வாளர் தொடர்புகொண்டு ஒரு அவசர உதவி வேண்டும், ஜார்கண்ட் ஒரிசா போன்ற இடங்களுக்கு நடந்து சென்று கொண்டிருந்த 16பேரை மீட்டு ரயிலில் அனுப்பனும் அவர்கள் மாநிலத்திற்கு, நாளை விடியற்காலை ரயில் கிளம்ப உள்ள நிலையில் இப்ப அவசரமாக அவர்களுக்கு இந்த சான்றிதழ் தேவை என்றார்.சரிங்க சார் ஆனால் நான் இப்ப தான் ஆந்திர எல்லையில் உள்ள சுங்கச்சாவடியில் இருக்கிறேன், இனி நான் அங்கு வர இரவு 10. 30மணிக்கு மேல் ஆகுமே சார் என்றேன். சரி இந்த சான்றிதழை நாளை காலை பெறக்கூடாதா என்றேன். நாளை விடியற்காலை train மேடம், இப்ப இந்த சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் நாளை ரயிலை பிடிக்க முடியாது, இவர்கள் அடுத்த ரயிலுக்கு காத்திருக்கனும் இல்லையேல் இவர்கள் நடந்தே போறோம் என நடக்க தொடங்குவார்கள் என்றார்.மிகவும் இக்கட்டான ஒரு சூழல்.toll plaza வேலை முடிக்கும் போது என்னை அழைத்து செல்லும் அரசு வாகன ஓட்டுநர் ""madam இட்லி இருக்கு, சூடா இருக்கு சாப்பிடுங்க மேடம், மணி 9.30ஆச்சு ""என்றார்.இல்லை brother வண்டியை செங்குன்றம் விடுங்க அங்கே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காத்துகொண்டு இருக்காங்களாம்,அவர்களை பார்த்தபின் சாப்பிட்டு கொள்கிறேன் என்றேன்.உடனே SP sirகு தொடர்பு கொண்டு இதை சொல்லி அவசரமா இப்பவே நான் பார்க்கணுமா,இன்று இரவே certificate வேணுமா என்றேன்.அவரும் ஆம் என்றார்.சூழலை புரிந்துகொண்டு உடனே செங்குன்றம் வந்து சேரும் போது இரவு 10.30மணி.
10.30 to 11.15pm வரை செங்குன்றத்தில் வைத்து அந்த 16வட இந்திய புலம் பெயர் தொழிலார்களை பார்த்தேன்.ஜார்கண்ட் போறவர்கள் பெயர்களை பார்க்கும் போது அவர்கள் முஸ்லீம் மதத்தினர் என தெரிந்து கொண்டேன்.நோன்பு இருக்கீங்களா இப்ப என்றேன்.ஆம் என்றனர்.இவர்களை எப்படி நடக்க வைக்க முடியும் நாம்?நல்லவேளை கடைசி நிமிடம் ஆவது வந்து இந்த சான்றிதழ் கொடுத்து அவர்களை ரயில் ஏற்றி விட்டோமே என்ற பெருமையுடன் 11.45pm வீடு வந்து சேர்ந்தேன்.அதன்பின் தான் இரவு உணவு.இருப்பினும் ஒரு மனநிறைவு இருந்தது.
பணிமுடித்து கிளம்பும் போது ""எப்படிய்யா என் நம்பரை மட்டும் கரெக்டா அடிச்சுடறீங்க,என் நம்பர் எப்படி என் எல்லையில்(jurisdiction) இல்லாத அதிகாரிகளுக்கும் தெரியுது,அவங்க jurisdictionல நான் இல்லை என்ற போதும் என்னை அழைத்தது எப்படி,என் நம்பர் எப்படி கிடைத்தது"என்றேன்.
எங்க கலெக்டர் மேடம் சொன்ன அதே பதில் தான் இந்த காவல் துறையினரிடமும் இருந்து வந்தது.
""Departmentல ஒரு medical emergency என்றால் உடனே அனுரத்னா தான் நினைவிற்கு வருகிறார்கள்.Entire districtலயுமே அப்படித்தான்"" என்றார்.உங்க போன் நம்பர் இல்லாத அதிகாரிகள் இல்லை என்றார்.
அப்படியா என கேட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.பயங்கர சோர்வு இருந்தது.ஆனால் மனம் ரொம்ப நிம்மதியாக இருந்தது.
இந்த புலம் பெயர் தொழிலார்களுக்கு உதவி புரிந்த செங்குன்றம் காவல் துறைக்கும்,செங்குன்றம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கும் எனது நன்றி.
மருத்துவர்.அனுரத்னா 
15/5/2020

நன்றி: ராஜாராம் அன்னை, புதிய தகவல்கள், முகநூல்.

கருத்துகள் இல்லை: