8 ஜூலை, 2020

இன்றைய தத்துவம் : Agnosticism என்று அழைக்கப்படும்அறியவொணாமை கொள்கை

[7/2, 08:16] Neyam-Satya: இன்றைய தத்துவம் :
Agnosticism என்று அழைக்கப்படும்
அறியவொணாமை கொள்கை

அறியவொணாமைக் கொள்கை என்றால் என்ன?

இறைவன் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்வது அல்லது நிரூபிப்பது என்பது சாத்தியமே இல்லை என்பதுதான் அறியவொணாமைக் கொள்கையின் கருத்து ஆகும். “அறியவொணாமை” என்கிற வார்த்தை “அறிவு இல்லாமை” என்னும் அர்த்தமுள்ளதாயிருக்கிறது.  நாத்திகவாதம் இறைவன் இல்லை என்றும் அவர் இருப்பதை நிரூபிக்க முடியாது என்றும் கூறுகிறது. அறியவொணாமைக் கொள்கை தேவன் இருக்கிறார் என்பதை நிரூபிக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது எனவே இறைவன் இருக்கிறாரா இல்லையா என்பதை அறிந்து கொள்வது சாத்தியமில்லாதது என்று வாதாடுகிறது.
[7/2, 08:21] Neyam-Satya: Atheism மற்றும் Agnosticism என்ற இரு ஆங்கிலச் சொற்களும், பல்வேறு கோணங்களில், பல்வேறு பொருட்களில் உள்வாங்கப்பட்ட மந்திரச் சொற்கள் போல குழப்பங்களுக்கு இடம்தரும் சொற்களாக மாறிவிட்டன.
இறைவனின் இருப்பைக் குறித்த கேள்விகளைப் பொருத்தவகையில், இச்சொற்கள் மிகவும் கவனமாகக் கையாளப்படவேண்டியவை.
இரண்டு ஆங்கிலச் சொற்களையும் சரியாகப் புரிந்துகொள்வது மட்டுமே இவ்விரு சொற்களுக்குமான சரியான தமிழ் மொழியாக்கம் செய்ய உதவும்.

Atheism என்பது நம்பிக்கை சார்ந்தது; அல்லது, குறிப்பாக, நீங்கள் எதைக் குறித்து நம்பவில்லை என்பதைச் சொல்வது.

Atheist என்பவர் எந்தக் கடவுளர்களின் மீதும் நம்பிக்கை கொள்ளாதவர்.

Agnosticism என்பது 'அறிதல்' குறித்தது; அல்லது, குறிப்பாக, உங்களுக்கு எதைக் குறித்துத் தெரியவில்லை என்பதைச் சொல்வது.

Agnostic நபருக்கு கடவுளர்களின் இருப்பைக் குறித்தோ, அல்லது, இல்லாமையைக் குறித்தோ எதுவும் தெரியாது.

மனிதர்களில் பலர் Agnostics ஆகவும், Atheists ஆகவும் இருப்பர்; மனிதர்களில் பலர் Agnostics ஆகவும், Theists ஆகவும் இருப்பர்;
மேற்குறித்த இரண்டுவகை மனிதர்களும் உலகில் பேரளவில் உள்ளனர்.
நீங்கள் Atheism and Agnosticism குறித்த கேள்விகளை எப்படி, எந்தக் காரணங்களுக்காக அணுகினாலும், அடிப்படையில், Agnostics மனிதர்களும், Atheists மனிதர்களும் வேறுபட்டவர்கள் என்றாலும், ஒருவர் Atheist ஆகவும், Agnostic ஆகவும் இருக்க வாய்ப்புண்டு. (அதேபோல், ஒருவர் Theist ஆகவும், Agnostic ஆகவும் இருக்கவும் வாய்ப்புண்டு.)
நாம் பல நேரங்களில், Agnostic என்ற முத்திரை குத்தப்பட்டவர், Atheist ஆக இருக்க இயலாது என்று தவறுதலாக நிராகரிக்கிறோம்.
'Atheism' என்பது முரட்டுப் பிடிவாதமான கொள்கை என்றும், 'Agnosticism' என்பது ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்ளக் கூடிய கொள்கை என்றும் நம்மிடையே தவறான பார்வைகள் இருக்கின்றன. இதன் அடுத்த நிலை, 'Agnosticism' என்பது கடவுளைப்பற்றி முழுமையாகத் தெரியாத 'Theism' என்ற அளவில் சுருக்கிவிடுவது ஆகும்.
ஏரணமுறையில் (Logic - தர்க்கம்) மேற்குறித்தவை சரியான விவாதமாக இருக்காது; ஏனென்றால், இந்த அணுகுமுறை, Atheism, Theism, Agnosticism குறித்த தவறான கண்ணோட்டத்தையும், தவறான புரிதல்களையுமே உருவாக்கும்; தவறான புரிதல்கள் இறை நம்பிக்கை குறித்த இயல்பான கொள்கைகளையே திசைதிருப்பும் வல்லமை கொண்டவை.
முதலில் Atheist என்றால் இறைமறுப்பாளர் என்றும் Theist என்றால் இறைஏற்பாளர் என்றும் புரிந்து வைத்திருக்கிறோம்.
இறைமறுப்பாளர்களிலேயே இரண்டு வகை உண்டு.

முதலாம் வகை இறைமறுப்பாளர், கடவுளை ஏற்காதவர்; கடவுள் இல்லை என்று தமக்கு உறுதியாகத் தெரியும் என்பதால், கடவுளை நம்பவில்லை என்று சொல்வார்.

இரண்டாம் வகை இறைமறுப்பாளர், இவரும் கடவுளை ஏற்காதவர்; கடவுள் இல்லை என்று தமக்கு உறுதியாகத் தெரியும் என்று இவர் கோருவதில்லை, ஆனால், கடவுளை நம்பவில்லை என்று சொல்வார்.


அதேபோல்,
இறைஏற்பாளர்கள் எனப்படும் Theist-களும் இருவகைப்படுவர்.

முதலாம் வகை இறைஏற்பாளர், கடவுளை ஏற்பவர்; கடவுள் இருக்கிறார் என்று தமக்கு உறுதியாகத் தெரியும் என்பதால், கடவுளை ஏற்பதாகச் சொல்வார்.

இரண்டாம் வகை இறைஏற்பாளர், இவரும் கடவுளை ஏற்பவர்; ஆனால், இவர் கடவுள் இருக்கிறார் என்று தமக்கு உறுதியாகத் தெரியும் என்று கோருவதில்லை, ஆனால், கடவுளை நம்புகிறேன் என்று பொதுமையாகச் சொல்வார்.

குழப்பங்களுக்கு காரணம்!
Atheism என்பதை "கடவுளின்மேல் நம்பிக்கைக் குறைபாடு" என்றும், "கடவுள் நம்பிக்கை காணப்படாமல் இருத்தல்" என்றும், "வெளிப்படையாக 'கடவுள் இல்லை' என்று மறுத்தல்" என்று பலவகைகளில் காண்பதே நமது ஐயங்களுக்குக் காரணம்.
இப்படியெல்லாம் குழப்பாமல்,
யார் Atheist?
"குறைந்த அளவு, ஒரு கடவுளாவது இருக்கிறார்" என்ற கொள்கையை எவர் ஒப்புக் கொள்ளவில்லையோ, அவரை Atheist எனலாம்.
யார் Agnostic?
இதேபோல், Agnostic என்பவர் "கடவுள்கள் இருக்கிறார்களா அல்லது இல்லையா என்பதது தமக்குத் தெரியாது" என்பதை ஒப்புக்கொள்பவர் எனலாம்.
யார் Atheist? யார் Agnostic? என்று அறிய 

ஒரு எளிய பரிசோதனை!

ஒருவர் Agnostic-கா இல்லையா என்பதை அறிந்துகொள்ள ஒரு எளிய பரிசோதனை இருக்கிறது.

"கடவுள்கள் இருக்கிறார்களா என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேளுங்கள்.

"ஆம், தெரியும்" என்று சொன்னால் அந்த நபர் Agnostic இல்லை, Theist என முடிவு செய்யலாம்.

"கடவுள்கள் இல்லை அல்லது கடவுள்கள் இருக்கவே முடியாது என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேளுங்கள்.

"ஆம், தெரியும்" என்று பதில் சொன்னால் அந்த நபர் Atheist என முடிவு செய்யலாம்.

மேற்கண்ட இரண்டு கேள்விகளுக்கும், "ஆம், தெரியும்" என்று ஒருவர் பதில் சொல்லவில்லை என்றால், அந்த நபர் கடவுள்மறுப்பாளர் ஆகவோ, கடவுள்ஏற்பாளர் ஆகவோ இருக்கலாம்.
ஆனால், அந் நபர்கள் அவற்றைக் குறித்து 'உறுதியாகத் தெரியவில்லை' என்று சொல்வதால், அவர்கள் Agnostic என்று உறுதியாகக் கூறலாம்.
எனவே,
"Atheism" என்ற சொல்லுக்கு "இறைமறுப்புக்கொள்கை" என்பதும் "Atheist" என்ற சொல்லுக்கு "இறைமறுப்பாளர்" என்பதும் சரியான மொழிமாற்றமாகப் பரிந்துரைக்கிறேன்.
"Agnosticism" என்ற சொல்லுக்கு "இறைநிலைஅறியாமை" என்றும் "Agnostic" என்ற சொல்லுக்கு "இறைஅறியாதவர்" என்பதும் சரியான மொழிமாற்றமாகப் பரிந்துரைக்கிறேன்.
இறுதியாக,
ஏனோ தெரியவில்லை,
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின்
"கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கதைக்கு உதவாத வெறும் பேச்சு!"
என்ற பாடல் வரி மனதில் மின்னி மறைந்தது!
எவ்வளவு பெரிய மனிதம் நேசிக்கும் Agnostic Atheist - இறைஅறியா இறைமறுப்பாளர் கவிஞர்!
 
நன்றி : திரு நேயம் சத்யா,  தத்துவங்களத் தேடி,  வாட்ஸ்அப் குழு

கருத்துகள் இல்லை: