பழையன புகுதலும்!..
சிங்கப்பூரில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கிழமையில் நடைபெற்ற உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் பழையன புகுதலும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை படித்தேன்.
அக்கட்டுரையுள் ”மாந்த வாழ்க்கை சக்கரச் சுழற்சியினைக் கொண்டுள்ளது. மாந்தன் ஒரு காலத்தில் உயர்வென உயர்த்திப் பிடித்தவற்றை ஒதுக்குவதும், ஒதுக்கித் தள்ளியதை உயர்த்திப் பிடிப்பதுமாக உள்ளான். தேவைக்கு ஏற்ப, புதியன புகுதல்போலப் பழையன புகுதலும் நிகழ்ந்து வருகின்றன. சமூகத்தில் வேண்டா என்று ஒதுக்கியதை மீண்டும் அவனே வேண்டும் என்று கட்டித் தழுவுகிறான். உணவு, உடை, உறையுள் என்ற மூன்று நிலைகளிலும் இம்மாற்றத்தைக் காணமுடிகின்றது…..” என்று கட்டுரை நீளும்.
நாகரிகத்தின் பெயரில் புதுவகை உணவு, பருகுநீர், கொறிப்புத் தீனிகள், மருந்துகள் வந்தாலும் இன்றையச் சூழலில் நம் உயிர்காப்பன நம் முன்னோர் கண்ட உணவுமுறைகளே என்பது தொடர்ந்து உறுதிப்பட்டுவருகின்றன.
இன்றைய ’கரோனா’ நோய்த் தொற்றுக் காலத்தில் நம் பழைய உணவுமுறைகளும், மருந்து முறைகளும்தான் நம்மைக் காப்பாற்றுகின்றன என்பதை இன்றைய இந்து நாளிதழ்ச் செய்தி உறுதிப்படுத்துகின்றது. நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய மூலிகைச் சாறுகளையும், சித்தர் மருந்துகளையும், மூச்சுப் பயிற்சிகளையும் கைக்கொண்டு உயிர்பிழைப்போம்!
நன்றி: திரு.மு.இளங்கோவன், பழையன புகுதலும், முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக