4 ஜூலை, 2020

இன்றைய தத்துவ மேதை : கௌடபாதர்

[7/2, 08:07] Neyam-Satya: இன்றைய  தத்துவ மேதை 👇🏽
[7/2, 08:09] Neyam-Satya: கௌடபாதர்

கெளடபாதர் ஒரு வேதாந்தி ஆவார். வட நாட்டைச் சேர்ந்தவரான இவர் சுகர் என்னும் இருடிக்கு மாணாக்கர் என்பர். இவரின் மாணாக்கரான கோவிந்த பகவத் பாதாசிரியர் ஆதி சங்கரருக்குக் குரு. இவர் உத்தரகீதை என்னும் வேதாந்த நூலுக்கு உரை செய்துள்ளார். கௌடபாதர் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனக் கருதப்பட்டாலும் இது பற்றித் தெளிவான தகவல்கள் இல்லை.

மகாயான பௌத்த மதத்தின் தத்துவங்கள் பலவற்றை இந்து சமயத் தத்துவங்களுக்குக் கொண்டுவந்து அவை அத்துவைத வேதாந்தமாக வளர்ப்பதில் கௌடபாதருக்குப் பங்கு உண்டு எனச் சொல்லப்படுகின்றது.

மாண்டூக்ய உபநிடதத்துக்கு விளக்கமாக அமையும் உரை நூலாகிய மாண்டூக்ய காரிகை இவரால் எழுதப்பட்டது. ஆன்மாவும் இறைவனும் வேறு என்னும் இருமை இல்லாத நிலைக்கு, அதாவது அத்துவிதத்துக்கு விளக்கம் தரும் இந்நூலில், கண்ணில் தெரியும் உலகம் ஒரு மாயத் தோற்றமே எனவும் கௌடபாதர் விளக்குகிறார்.

நன்றி : திரு நேயம் சத்யா,  தத்துவங்களத் தேடி,  வாட்ஸ்அப் குழு 

கருத்துகள் இல்லை: