[7/4, 07:51] Neyam-Satya: இன்றைய தத்துவம்
Epistemology என்று அழைக்கப்படும்
அறிதலியம்
நம்முடைய அறிவைப் பற்றிய தத்துவம்
[7/4, 08:16] Neyam-Satya: பிளேட்டோவின்படி அறிவு என்பது உண்மையும், நம்பப்படுவனவும் ஆனவற்றின் ஒரு பகுதி ஆகும்.
அறிவாய்வியல், அறிவுத்தோற்றவியல் அல்லது அறிதலியல் (Epistemology) ; என்பது அறிவை ஆய்வு செய்யும் துறை; இது மெய்யியலின் ஒரு கிளைப்பிரிவு ஆகும்.
அறிவாய்வியலில், அறிவின் தன்மை, அதை நிறுவும் முறைகள், நம்பிக்கையைப் பற்றிய ஆதாரங்கள் ஆகியன ஆராயப்படுகின்றன. இந்த ஆய்வை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்:
அறிவின் தன்மை பற்றிய மெய்யியல் ஆய்வு; அறிவுக்கும், உண்மை, நம்பிக்கை, ஆதாரம் ஆகியவற்றுக்கும் உள்ள உறவைப் பற்றிய ஆய்வு ஆகியன.
ஐயுறவு வாதத்தினால் வந்த பல்வேறு சிக்கல்கள்,
அறிவு, ஆதாரமுள்ள நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கான மூலம்.
அறிவு, ஆதாரம் - இவை இரண்டுக்குமான கட்டளை விதிகள் (criteria)
அறிவாய்வியலில் கீழ்க்கண்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன:
ஒரு நம்பிக்கைக்கு ஆதாரம் உண்டென்றால், அந்த ஆதாரத்திற்கு ஆதாரம் எது?
எனக்கு ஒன்றைத் தெரியும் என்று சொன்னால் அதன் பொருள் என்ன?
எனக்கு ஒன்றைத் தெரியும் என்பது எனக்குத் தெரியுமா?
Epistemology எனும் சொல் முதலில் 1854 இல் இசுகாட்டிய மெய்யியலாளராகிய ஜேம்சு பிரெடெரிக் பெரியர் பயன்படுத்தினார்.. என்றாலும், பிரெட் வாரன், இசுகாட்லாந்தின் ஆறாம் யேம்சு ஆகியோர் இந்த மெய்யியல் கருத்துப்படிமத்தை ( Epistemon) எனும் பாத்திரம் வழியாக கி.பி. 1591-இலேயே கையாண்டுள்ளனர்.
ஐயுறுவாதத்தினால் வரும் சிக்கல்கள்
ஐயுறுவாதத்தினால் வரும் சிக்கல்கள் (The Problem of Skepticism) பல. ஐயுறுவாதம் என்பது எந்த ஒரு கருத்தையும் முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல், அனைத்தையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது. அதாவது, அறிவு என்று சொல்வதை எப்படி நம்புவது? ஒன்றை நம்புவதாலேயே அது உண்மை என்றோ பொய் என்றோ ஆகாது. நாம் காண்பவை அனைத்தும் பொய்யாக இருக்கலாம். இந்த உலகத்தின் "உண்மை"யான தோற்றம் நம் கண்களுக்குப் புலப்படாமல் போகலாம். சரியான, ஆழ்ந்த அறிவு அல்லது மேலோட்டமான அறிவு என்பது ஒருவர் கண்ணோட்டத்தையும், அவர் அறிவு என்பதை எவ்வாறு விளக்க வருகிறார் என்பதையும் பொறுத்து இருக்கிறது. எனவே, நாம் உண்மை என முடிவு செய்வதெல்லாம் நம் புலன்கள் நமக்கு உணர்த்துவதை வைத்துத்தான் செய்கிறோம்.
ஐயுறுவாதத்திற்கு விடை அளிக்க, ஒரு சிலர் "அடிப்படைக் கருத்துக்கள் வாதம்" (Foundationalism) என்ற கருத்தை முன் வைக்கின்றனர். இதன்படி, ஒரு சில கருத்துக்கள், ஆதாரம் இல்லாமலேயே உண்மை எனக் கருத முடியும். ஐயுறவாதம் இதை வன்மையாகக் கண்டிக்கிறது. ஏனெனில், ஆதாரம் இல்லாமல் உண்மை என்பது ஒரு வகையான அறியாமையே. இது, சருக்கலான சரிவு (slippery slope) போன்றதாகும். ஆயினும், "அடிப்படைக் கருத்துக்கள் வாதம்" செய்வோர் மன்சாசன் முத்தலைக் கொள்ளி (Münchhausen trilemma) வாதம் என்றொரு வாதத்தினை முன் வைக்கின்றனர். இந்த வாதத்தின் படி, ஒன்றை உண்மை என நிறுவ, மூன்று வழிகள் உள்ளன. இந்த மூன்றில், ஒன்றை நாம் எடுத்தால் தான் எதையும் உண்மை என நிறுவ முடியும் என்கின்றனர். ஆனால், ஐயுறுவாதம் பேசுவோர், உண்மை என்று நிறுவ, மூன்று வழிகளில் நாம் எதையும் எடுக்க இயலாது; அப்படி ஒரு வழியை எடுத்தாலும், ஒரு கருத்தின் மீது நம்பிக்கையை உருவாக்குமே தவிர, உண்மையைக் கொண்டு வராது என்று வாதிடுகின்றனர்.
எது எப்படி இருப்பினும், நடைமுறையில், ஐயுறுவாதம் ஒரு அளவுக்கு மேல் கொண்டு செல்லப்படுவதில்லை. அண்மையில், இந்த வாதத்தில் கீழ்க் கண்ட ஒரு சில மாறுதல்கள் செய்யப் பட்டுள்ளன.[3]
எடுத்துக் காட்டாக, புனைவியம் (Fictionalism) என்ற வாதத்தில், ஒரு கருத்து முழு உண்மை என்று கூறுவதற்குப் பதிலாக, அந்தக் கருத்தினால் வரும் பயன், கலைநயம் ஆகியனவற்றைக் கருதி, அக் கருத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அது போலவே, உள்ளொளிவாதம் (Fideism) என்பதில், நம்பிக்கையும் பகுத்தறிவும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை; ஆயினும், நம்பிக்கையைப் பயன் படுத்தி, உண்மையைச் சென்று அடைய முடியும் என்ற கருத்து முன் வைக்கப் படுகின்றது.
ஐயுறுவாதத்தில், இரண்டு பிரிவுகள் இருக்கின்றன: குறைபடுத்தப் பட்டது (mitigated), குறைபடுத்தப் படாதது (unmitigated). குறைபடுத்தப் பட்ட ஐயுறுவாதத்தில், முழு உண்மை, "வலிமையுள்ள" உண்மை, கண்டிப்பான உண்மை என்பன போன்ற கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. அதற்கு மாறாக, ஒரு கருத்து "வலுவற்ற உண்மை"யாக இருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்கிறது. "வலுவற்ற உண்மை" என்று சொல்லப்படுவதும் கூட ஆதாரத்தோடு முன் வைக்கப் படும் கருத்துக்களாகவே இருக்க வேண்டும். இவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும் அறிவு, "மெய்நிகர் அறிவு" (virtual knowledge) எனப்படும். குறைபடுத்தப் படாத ஐயுறுவாதத்தில், "மெய்நிகர் அறிவு", "வலிமையுள்ள" அல்லது "வலிமை அற்ற" அறிவு போன்ற கருத்துக்கள் கூட ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. மாறாக, இது போன்ற பாகுபாடுகள் ஒருவர் கண்ணோட்டத்தையும், அவர் அறிவு என்பதை எவ்வாறு விளக்க வருகிறார் என்பதையும் பொறுத்து இருக்கிறது என்ற கருத்து வலியுறுத்தப் படுகின்றது.
அறிவாய்வியல் சொல் தோற்றம்
"அறிவாய்வியல்" என்ற சொல்லின் தோற்றம் (etymology) நீண்ட வரலாறு கொண்டது. அறிவாய்வியல் எனப் பொருள்படும் epistemology எனும் சொல் பண்டைய கிரேக்கச் சொல்லாகிய epistēmē எனும் சொல்லில் இருந்து கொணரப்பட்டதாகும். இச்சொல்லின் பொருள் அறிவு என்பதாகும். பின்னொட்டான -logy என்பது பண்டைய கிரேக்கச் சொல்லாகிய logos எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் உரையாடல் என்பதாகும். ஜேம்சு பிரெடெரிக் பெரியர் (James Frederick Ferrier) epistemology எனும் சொல்லை 'உள்ளியம்' (Ontology) எனும் சொல்லின் வடிவத்தில் உருவாக்கி, அறிவின் பொருண்மையைக் கண்டுபிடிக்கும் நோக்குடைய மெய்யியலின் ஆய்வுக்குப் பெயர்சூட்டினார். இவர் இந்த ஆராய்ச்சியின் தொடக்கத்தையே மெய்யியலின் உண்மையான தொடக்கமாகவும் அறிவித்தார். இந்தச் சொல், Wissenschaftslehre எனும் செருமானியக் கருத்துப்படிமத்துக்கு இணையானதாகும்; இச்சொல்லை செருமானிய மெய்யியலாலர்களாகிய யோகான் பிட்சேவும் பெர்னார்டு போல்சானாவும் வெவ்வேறு திட்டங்களில் எட்மண்டு குசரலுக்கு முன்பே பயன்படுத்தினர். பின்னர் பிரான்சு மெய்யியலாளர்கள் épistémologie எனும் சொல்லுக்கு [théorie de la connaissance] என, அதாவது, "அறிவுக் கோட்பாடு" எனும் குறுகிய பொருளைத் தந்தனர். எடுத்துகாட்டாக, எமிலி மேயர்சன் (Émile Meyerson) 1908-இல் எழுதிய Identity and Reality எனும் நூலில், "இச்சொல் இப்போது அறிவியியல் ஆய்வில், மெய்யியல் என்ற பொருளில் பரவலாகப் பயன்படுகிறது," என்ற குறிப்புரையுடன் வெளியிட்டார்.
அறிவு
அறிவு (knowledge) என்பது என்ன? என்னும் கேள்வி பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கணிதத்தில், "2 + 2 = 4" என்பது அறிவு. "இரண்டு எண்களை எப்படிக் கூட்டுவது," என்பதும் அறிவு. அது போல, ஒருவரை அறிவது , ஓர் இடத்தை அறிவது, ஒரு பொருளை அறிவது அல்லது ஒரு செயலை அறிவது அனைத்தும் அறிவே. ஒரு சில மெய்யியலாலர்கள், ஒரு கருத்தைப் பற்றிய அறிவு, ஒரு செயலைப் பற்றிய அறிவு, பட்டறிவு (knowledge through experience) ஆகிய மூன்றும் வெவ்வேறானவை என்றும், அறிவாய்வியல் என்பது கருத்தைப் பற்றிய அறிவை மட்டுமே ஆய்வு செய்வது என்றும் கருதுகின்றனர்.
இந்த பாகுபாடுகள் ஆங்கிலத்தில் வெளிப்படையாக அமையவில்லை எனினும் பிற மொழிகளில் இவை வெளிப்படையாகவே வரையறுக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, போர்த்துகேயம், எசுபானியம், செருமன், டச்சு ஆகிய மொழிகளில் ஒருவரை அறிவது அல்லது ஒன்றை அறிவது என்பது முறையே connaître, conhecer, conocer, kennen ஆகிய சொற்களாலும், ஒன்றை எப்படி செய்வது என்பது savoir, saber and weten ஆகிய சொற்களாலும் மொழிபெயர்க்கப்படுகிறது. புது கிரேக்க மொழியில் இவற்றுக்கு γνωρίζω (gnorízo) , ξέρω (kséro) என்பன முறையே பயன்படுகின்றன. இத்தாலிய மொழியில் இவற்றுக்கு முறையே conoscere, sapere ஆகிய வினைகளும் conoscenza sapienza ஆகிய பெயர்ச்சொற்களும் பயன்படுகின்றன. செருமனி மொழியில் இவற்றுக்கு முறையே wissen, kennen ஆகிய வினைகளும் பயன்படுகின்றன. Wissen என்பது ஓர் உண்மையை அறிவதையும் kennen என்பது அடைதல் அல்லது செய்ய அறிதல் எனும் பொருளையும் குறிக்கின்றன; kennen, என்பதில் இருந்து Erkennen, எனும் பெயர் உருவாகிறது. இது நினைவுபடுத்தல் அல்லது பெற்றதை அறிவித்தல் வடிவத்தில் அமையும் அறிவைக் குறிக்கிறது. இச் சொல்லின் வினை, ஒரு செயலை அல்லது நிகழ்வை, அதாவது, ஒருநிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுதலைக் குறிக்கிறது; இது erkennen அற்ற நிலையில் இருந்து உண்மையான erkennen நிலைக்கு மாறுவதைக் குறிக்கிறது. இந்த வினை, இன்றைய ஐரோப்பிய மொழிகளில் அறிதல் அலகான "episteme" எனும் சொல்லைக் குறிக்க மிகப் பொருத்தமான சொல்லாகும். எனவே, அறிவாய்வியல் செருமனி மொழியில் "Erkenntnistheorie" எனும் சொல்வழி அழைக்கப்படுகிறது. இந்த மொழியியல் சிக்கல்களின் விளக்கமும் தகவும் இன்னமும் தீர்வு எட்டப்படாத விவாதத்திலேயே உள்ளன.
பெர்ட்ரேண்டு இரசல் சுட்டிக் குறித்தல் (On Denoting) எனும் தன் ஆய்வுக் கட்டுரையிலும் மெய்யியலின் சிக்கல்கள் (Problems of Philosophy) என்ற பிந்தைய நூலிலும் விளக்க அறிவுக்கும் (knowledge by description) பட்டறிவுக்கும் (knowledge by acquaintance) இடையிலான பாகுபாட்டை வலியுறுத்திக் கூறியுள்ளார். கில்பெர்ட் இரைல் (Gilbert Ryle) என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிஞரும் (கி.பி 1900 - கி.பி 1976) மனம் எனும் கருத்துப்படிமம் (The Concept of Mind) என்ற தனது நூலில், கருத்து அறிவுக்கும் செயல் அறிவுக்கும் இடையிலான வேறுபாட்டைச் சுட்டிக் காட்டியுள்ளார். மைக்கேல் பொலானியும் சொந்த அறிவு (Personal Knowledge) எனும் தன் நூலில், ஏட்டறிவுக்கும் நடை முறை அறிவுக்கும் உள்ள தொடர்பை மிதிவண்டியினை சமனிலையில் ஓட்டுதல் எனும் எடுத்துகாட்டுவழி விளக்குகிறார். அதாவது, மிதிவண்டியைச் சமனிலையில் ஒட்டுவதற்கான இயற்பியல் (Physics) அறிவு என்பது அதை நடைமுறையில் ஓட்டிப் பழகிப் பெறும் அறிவுக்கு ஈடாகாது எனவும் இரண்டும் எப்படி தனிவகை அறிவாக நிறுவப்படுகின்றன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் வாதிடுகிறார், இந்த நிலைப்பாடு கில்பெர்ட் இரைலினுடையதே (Gilbert Ryle) எனலாம். இரைல் இந்த இருவகை அறிவையும், அதாவது, தகவல் அறிவையும் செயல் அறிவையும் புரிந்துகொள்ள மறுத்தல், முடிவில்லாத பின்னோக்கு வாதப் பிரச்சினையில் (infinite regress) கொண்டு சேர்க்கும் என எச்சரிக்கிறார்.
அண்மையில், எர்னெசுட்டு சோசா, மெய்யியலளர் ஜான் கிரேக்கோ, ஜொனாதன் கிவான்விகு, இலிண்டா திரிக்கவுசு சாகுசெவ்சுகி, டங்கன் பிரிச்சார்டு ஆகியோர் அறிவாய்வியல் என்பது மக்களின் இயல்புகளை ( அதாவது, அறிதிறன் விழுமியங்களை) மதிப்பீடு செய்யவேண்டுமே ஒழிய, அவர்களது கூற்றுகளையோ அக்கூற்றுவழி உளப்பான்மைகளையோ அல்ல என வாதிடுகின்றனர்.
நம்பிக்கை
நாம் சில கருத்துக்களை முழு உண்மை (absolute truth) என்று நம்புகிறோம்; மற்றும் ஒரு சிலவற்றை உண்மை என்று ஏற்றுக் கொண்டுவிடுகிறோம். அறிவாய்வியலில், இவை எல்லாம் நம்பிக்கைகள் (beliefs) என்று அழைக்கப் படுகின்றன.
உண்மை
உண்மை (Truth) என்பது மெய்யான கருத்து அல்லது மெய்யான நடை முறையைக் குறிக்கும் சொல்லாக இருந்து வருகின்றது. ஆராய்ச்சியாளர்கள் உண்மையைப் பற்றி பல்வகை கோட்பாடுகளும், பார்வைகளும் முன் வைத்து உள்ளனர். ஒருவர் ஒன்றை நம்ப அது உண்மையா, இல்லையா என்பது முன் தேவையாக (prerequisite) இருப்பதில்லை. மாறாக, ஒன்றைப் பற்றி உண்மையான அறிவு இருந்திருந்தால், அந்த அறிவு பொய்யாக இருக்க முடியாது. எடுத்துகாட்டாக, தன்னைத் தாங்குமளவுக்கு ஒரு பாலம் பாதுகாப்பனதே என நம்பினால், அவர் அதைத் தாண்ட முயன்று அவரது எடையால் பாலம் உடைந்து விழுந்தால், அப்போது அவர் பாலம் பாதுகாப்பனது என நம்பினார் எனக் கூறலாம். ஆனால், அவரது நம்பிக்கை தவறாகப் போய்விட்டது. எனவே, பாலம் பாதுகாப்பானது என அறிந்திருந்தார் எனக் கூறுவது சரியாகாது; ஏனெனில் அக்கூற்று இயல்பாகவே சரியன்று. இதற்கு மாறாக, பாலம் அவரது எடையைத் தாங்கினால், மேலும் அவர் அதைத் தாண்டி அதை நிறுவினால், அப்போது அவர் பாலம் பாதுகாப்பானதென அறிந்திருந்தார் என்பது சரி.
"நம்பிக்கை" என்பது உண்மையைத் தாங்கி நிற்கும் ஒரு உண்மைத் தாங்கி(truth-bearer) என எடுத்துக் கொள்ளலாமா என வாதிட்டு வருகின்றனர். சிலர் அறிவை நிறுவப்பட்ட உண்மைக் கூற்றுகளின் அமைப்பு என்று கூற, மற்றவர்களோ சொற் றொடர்களின் நிறுவப்பட்ட உண்மை அமைப்பு என்கின்றனர். பிளேட்டோ தனது ஜார்ஜியாசு (Gorgias) உரையாடலில், நம்பிக்கை என்பது மிகப் பொதுவாக ஏற்கும் உண்மைதங்கியாகும் என வாதிடுகிறார்.
ஆதாரம்
ஒரு கருத்தை அறிவாக ஏற்றுக் கொள்ள வேண்டுமாயின், அந்தக் கருத்து உண்மையானது என்பதற்கு ஆதாரம் (Justification) வேண்டும். சாக்கிரட்டீசு (Socrates, கி.மு 470/469 – கி.மு 399) தனது தியேடெட்டசு (Theaetetus) என்ற உரையாடலில், அறிவு என்றால் என்ன என்பது பற்றிய பல கோட்பாடுகளை மேற்கோள் காட்டுகிறார். அதில் அவர் கூறுவது, அறிவு என்பது விளக்கம் அமைந்த உண்மையான நம்பிக்கை என்பதாகும். இங்கு விளக்கம் என்பதன் பொருள் ஏதோ ஒரு வழியில் அறிவு விளக்கவோ வரையறுக்கவோ பட்டிருக்கவேண்டும் என்பதே ஆகும். அறிவு என்பது நிறுவப்பட்ட உண்மையைப் பற்றிய நம்பிக்கை என்ற கோட்பாட்டின்படி, தரப்பட்ட கூற்று உண்மையென அறிய, ஒருவர் பொருத்தமான உண்மைக் கூற்றை நம்பினால் மட்டும் போதாது, அவர் அதை நம்புவதற்கான தகுந்த அறிவார்ந்த விளக்கத்தையும் தரவேண்டும். இதன் உட்பொருள், ஒருவர் உண்மையாக நிகழும் நிகழ்ச்சி ஒன்றை நம்பினால் மட்டும் அது பற்றிய அறிவை ஈட்ட முடியாது என்பதே. எடுத்துகாட்டாக, மருத்துவப் பயிற்சியற்ற ஒரு நோயாளி, பொதுவாக நல்லதே நடக்கும் என்ற மனப்பன்மையுள்ளவர்; தான் தனது நோயில் இருந்து விரைவாக நலமடைவோம் என்று நம்பலாம். ஒருவேளை இவரது இந்த நம்பிக்கை மெய்யாகலாம்; இருந்தாலும் தான் நலமுறுவோம் என அறிதிருந்தார் எனக் கூறமுடியாது; எனெனில் இவரது நம்பிக்கைக்கு முன்பு அவரிடம் ஆதாரம் ஏதும் இல்லை என்பதால் எனலாம்.
1960 வரை அனைவராலும் அறிவு என்பது நிறுவப்பட்ட உண்மையான நம்பிக்கை எனும் வரையறை ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், அப்போது அமெரிக்க மெய்யியலாளராகிய எட்மண்டு கெட்டியர் (Edmund Gettier) வெளியிட்ட ஓர் ஆய்வு பரவலாக பல்வேறு விவாதங்களை எழுப்பியது.
கெட்டியர் சிக்கல்
[7/4, 08:17] Neyam-Satya:
எட்மண்டு கெட்டியர் 'நிறுவப்பட்ட உண்மையான நம்பிக்கை அறிவா?' எனும் சிறு ஆய்வை 1953 இல் வெளியிட்டு பெரும்புகழ்பெற்றார்; இது நெடுங்காலமாக மெய்யியலாளர்கள் கொண்டிருந்த அறிவுக் கோட்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியது. இவர் குறிப்பிட்ட எளிய எதிர்மாறான எடுத்துகாட்டை, ஆயிரம் ஆண்டுகளாக விளங்கிய ஒரு முதன்மையான கோட்பாட்டுக்கு முன் வைக்க முடிந்தால், மெய்யியலின் உண்மையான மதிப்புதான் என்ன எனும் கேள்வியை எழுப்பியது. ஒரு சில பக்கங்களிலேயே கெட்டியர், ஒருவர் நம்பிக்கை நிறுவப்பட்ட நம்பிக்கையாக இருந்த போதும், பல சூழல்களில், அது அறிவு என்று கருதப் படாமல் போகலாம் என வாதிட்டார். அதாவது, ஓர் உண்மையான கூற்றின் நிறுவப்பட்ட நம்பிக்கை என்பது கட்டாயத் தேவை என்றாலும், அது அக்கூற்றை அறிய போதுமானதல்ல எனக் கெட்டியர் கருதினார். விளக்கப்படத்தில் உள்ளபடி, ஒருவர் உண்மைக் கூற்று ஒன்றை நம்பினாலும் (ஊதாப் பகுதி), அது "அறிவு" எனும் கருத்தினத்தில் அடங்காது (மஞ்சள் பகுதி).
அறிவு என்பது மூன்று உட்கூறுகளைக் கொண்டது: 1) உண்மையான தன்மை(Truth); 2)உண்மையென நம்புகின்ற மன நிலை(Belief); மற்றும் 3) உண்மையென நம்புவதற்கான ஆதாரங்கள்(Justification). ஒன்றைப் பற்றிய அறிவு ஒருவருக்கு உள்ளது என்று சொல்லுவதற்கு இந்த மூன்றும் தேவை. இந்த JTB - அறிவுக் கோட்பாடு என்பது பிளேட்டோ என்ற கிரேக்க அறிஞரால் முதலில் கூறப் பட்டது எனக் கருதப் படுகின்றது. நெடுங்காலமாக சரி எனக் கருதப்பட்ட இக் கோட்பாட்டில் பிழை இருக்கிறது எனக் கெட்டியர் சுட்டிக் காட்டினார். அதாவது, J, T, மற்றும் B எனும் மூன்று கூறுகளும் சரியாக இருந்தாலும், ஒரு சில நேரங்களில், அறிவு சரியாக இல்லாமல் போக வாய்ப்புண்டு. கெட்டியர் இதை இரண்டு சிறு எடுத்துக் காட்டுகளைக் கொண்டு நிறுவினார்.
கெட்டியருக்கு எதிர் வாதங்கள்
கெட்டியர் கருத்துக்களை மறுத்து ஒரு சில எதிர் வாதங்கள் முன் வைக்கப் பட்டன. இந்த எதிர் வாதங்கள் "அறிவு" என்றால் என்ன என்பதை வேறு வகையாக வரையறை செய்தன.
பொய்ப்பிக்கவியலாமை, பயனிலாமை வாதங்கள்
கெட்டியர் கருத்திற்கு எதிர் கருத்தாக, ரிச்சர்டு கிர்க்கம் (Richard Kirkham) என்னும் அமெரிக்க மெய்யியலாளர் (philosopher) காரணங்கள், பொய்ப்பிக்கவியலாமை தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
பொய்ப்பிக்கவியலாமை(Infallibilism) என்பது, ஒரு கருத்து உண்மை என நம்புவதற்கான ஆதாரங்கள் (Justification) எக் காரணம் கொண்டும் பொய்யாகும் வாய்ப்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதாவது, ஆதாரங்கள் சரியாக இருக்குமாயின், அவற்றை ஆதாரமாகக் கொண்ட கருத்தும் உண்மையாகவே இருக்க வேண்டும்.
கெட்டியர் கருத்திற்கு எதிர் வாதமாக பயனிலாமை(indefeasibility) என்ற வாதமும் முன் வைக்கப் பட்டது. இதன் படி, ஒரு கருத்து நம்புவதற்கான ஆதாரங்களுக்காக (J1) மட்டும் உண்மை என்று இருப்பதில்லை; மாறாக, அக் கருத்து வேறு ஒரு சில ஆதாரங்களுக்காகவும்(J2) உண்மையாக ஆகலாம். இவ்வாறு ஆகுமாயின், முதல் ஆதாரம் (அதாவது, J1) பயனற்ற ஆதாரங்களாக ஆகி விடும். அதனால், J2 போன்ற ஆதாரங்கள் இருக்கக் கூடாது.
நம்பகத்தன்மை வாதம்
நம்பகத்தன்மை வாதம் (Reliabilism) கீழ்க்கண்டவாறு வைக்கப்படுகின்றது. ஒரு கருத்து(Q): 1)உண்மையாக இருக்க வேண்டும்; 2)அதை ஒருவர்(P) ,உண்மை என நம்ப வேண்டும்; 3) அவர் அதை உண்மைதான் என நம்ப, ஒரு நம்பகத்தன்மை கொண்ட முறையைப் பின்பற்றி இருக்க வேண்டும். இந்த மூன்று நிபந்தனைகளும் நிறைவேற்றப் பட்டு இருந்தால், P-என்பவர் Q-என்ற கருத்தை அறிந்தவராகக் கருதப் படுவார். அதாவது, Q-எனும் கருத்து, P-என்பவரின் அறிவாக மாறும். இந்த வாதத்தை ஆல்வின் கோல்டுமேன்(Alvin Goldman), மார்சல் சுவைன்(Marshall Swain), கென்ட் பாக் (Kent Bach), ஆல்வின் பிளான்டின்கா (Alvin Plantinga) ஆகியோர் முன் வைத்தனர்.
ஏனைய எதிர்வாதங்கள்
இராபெர்ட்டு நாஸ்விக்(Robert Nozick), டிமதி வில்லியம்சன் (Timothy Williamson) ஆகியோர் இன்னும் சில எதிர் வாதங்களை முன் வைத்தனர். நாஸ்விக் கீழ்க் கண்டவாறு வாதிட்டார்: ஒரு கருத்து(Q): 1)உண்மையாக இருக்க வேண்டும்; 2)அதை ஒருவர்(P) ,உண்மை என நம்ப வேண்டும்; 3) அந்தக் கருத்து பொய்யாக இருக்குமாயின், P அதை உண்மை என நம்ப மாட்டார்; 4) அந்தக் கருத்து உண்மையாக இருப்பின், P அதை உண்மை என நம்புவார்.
இதில் வரும் மூன்றாவது நிபந்தனை கெட்டியர் சுட்டிக் காட்டும் சிக்கலுக்குத் தீர்வாக இருக்கும் என நாஸ்விக் வாதிட்டார்.
டிமதி வில்லியம்சன் அவர்களின் வாதத்தின் படி, Q-என்ற ஒரு கருத்தை, P-என்ற நபர் ஒருவர் அறிந்து (அதாவது, தன்னுடைய அறிவாகப் பெற்று) இருக்கிறார் என்று கூற, உண்மை, நம்பிக்கை, நம்புவதற்கான ஆதாரங்கள் ஆகியன தேவையான (necessary) கட்டியங்கள் (conditions) மட்டுமே; அவை போதுமான கட்டியங்கள் (sufficient conditions) எனக் கூற இயலாது.
புறநிலைவாதமும் அகநிலைவாதமும்
ஒரு கருத்து Q அறிவார்ந்தது என்று P என்ற ஒருவரால் ஏற்றுக்கொள்ள J என்ற ஆதாரம் பயன்படுத்தப் படும். இந்தக் காரணம் புற உலகில் (சூழ் நிலையில்) இருந்து வரலாம், அல்லது அக நிலையில் (மன நிலை) இருந்து வரலாம். அதைப் பின் பற்றிய வாதங்கள் முறையே புறநிலை வாதம்(Externalism) என்றும் அகநிலை வாதம்(Internalism) என்றும் அறியப்படும்.
அறிவின் முக்கியத்துவம்
ஒரு கருத்து (அறிவுக் கூற்று Q) உண்மையானது என்பதை விட, நடை முறையில் அது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தான் இன்றியமையாதது. அறிவின் முக்கியத்துவம் முதன் முதலில் பிளேட்டோவின் மெனோ (Meno) என்ற உரையாடலில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஓர் அறிவான கருத்து, வெறும் உண்மையான கருத்தை விட சிறப்பு வாய்ந்தது என்று சாக்ரடீசு கூறுகிறார். அறிவு என்பது நம்பகத்தன்மை (Reliabilism) கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதப் படுகின்றது. ஆனால் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பின், அதன் நம்பகத்தன்மையைப் பற்றி கவலைப் படத் தேவை இல்லை. ஒரு குவளை தேநீரின் சுவை தானே இன்றியமையாதது தவிர, அதைப் போட பயன் படுத்தப் படும் கருவிகள் எவ்வளவு நம்பகத்தன்மையை வாய்ந்தவை என்பது அன்று. எனவே, சகசெபுசுகி (Linda Trinkaus Zagzebski) என்ற அமெரிக்க மெய்யியல் அறிஞரின் கூற்றுப் படி, ஒரு அறிவுக் கூற்றின் நம்பகத்தன்மையைவிட அது எந்த அளவுக்கு உண்மையானது என்பதே முக்கியம். (ஆனால் இதைக் கோல்டுமேன்(Alvin Goldman), ஆல்சன் (E.J. Olsson) ஆகியோர் மறுக்கிறார்கள்.)
இனி, கவான்விக் (Jonathan Kvanvig) போன்றோர், அறிவின் முக்கியத்துவத்தை விடுத்து, அந்த அறிவைப் பெற்றிருக்கும் ஒருவர் எவ்வாறு அதைப் புரிந்து(understand) கொள்கிறார் என்பதே முக்கியம் என்கின்றனர். (நாளை தொடரும்).
நன்றி : திரு நேயம் சத்யா, தத்துவங்களத் தேடி, வாட்ஸ்அப் குழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக