மண்வாசனைக்கான காரணம் என்ன?
மண் வாசனை, ஆகா, புழுதி வாசனை! புழுதி வாசனை என்று சுத்த தமிழில் சொன்னால் தான் நமக்குப் புரியும். அப்போது தான் அதன் உண்மையான அழகான வாசனை மூக்கைப் பிடுங்கித் தின்கிறது இல்லயா? இந்தப் புழுதி வாசனை எல்லாச் சிறுவர்கள் மத்தியிலும் உலகெங்கும் அறியப்பட்டதொன்று இதனை முன்னாட்களில் கிரேக்கர்கள் ARGILLACEOUS SMELL என்று அறிந்திருந்தார்கள். அதனைக் களிமண் படிமங்களில் இருந்து வரும் வாசனை என்று வரையறுத்தும் இருந்தார்கள். என்று தெரிகிறது,
1964 மார்ச்சில் இசபேல் பெயார். ரிச்சார்ட் தோமஸ் என்று இரு ஆராய்ச்சியாளர்கள் உலகின் முதல் தரமான ஆராய்ச்சிச் சஞ்சிகையான NATURE இல் இது பற்றி ஒரு கட்டுரையை வரைந்திருந்தார்கள். அதிலே அதற்குப் PETROCHOR SMELL என்று புதுப் பெயரும் இட்டிருந்தார்கள். “பெற்றொ” என்றால் “கல்லிலிருந்து” என்று அர்த்தம் கிரேக்கக் கடவுளரின் உடலில் ஓடும் கல்லினாலான திரவம் (கல்லிரத்தம்) என்று வைத்துக் கொள்ளலாம்.
எனெக்கென்றால் இந்த பெற்றொக்கோர் திரவத்துக்கும் கிரேக்கக் கடவுளர்க்கும் சம்பந்தம் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை நம்முடைய விநாயகருக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தமிருக்கலாம். ஏனென்று கேட்கிறீர்களா? அவரைத் தானே நாம் களிமண்ணீல் ஆக்கி அன்போடு கட்டியணைக்கிறோம்? அப்போ, அந்தப் பெட்ரொகோர் இரத்தம் அவருடைய களிமண் உடலிற்தானே பாயும்?
ஒகே, மீதிக்கதை கேட்க ரெடி? இந்த ஆராய்ச்சியிலே இந்தச் சகபாடிகள் இருவரும் இந்தியாவுக்கும் வந்தார்கள். உத்தர் பிரதேஷில் உள்ள கானோஜ் எங்கிற ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்கள். அங்கே தான் “ஒரிஜினல்” புழுதி வாசனை மலிவாகக் கிடைக்கிறதாம்!
விஷயம் இது தான்! இந்த ஆராய்ச்சியாளர்கள் தம்முடைய வேலையைத் தொடங்குதற்குப் பல ஆண்டுகள் முன்னர் தொட்டே கனொஜிலுள்ள ஒரு சிறு வாசனைத் திரவியக்கம்பனி இந்தப் புழுதிவாசனையிலிருந்து “மிற்றிக் கா அத்தார்” என்றொரு வாசனைத் திரவியத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அதனை மேய்ல் ஆர்டரில் விற்றுக்கொண்டும் இருந்தார்கள். இது ₹2000 க்குமேல் போகிறது என்றாலும் நாம் அமெரிக்கன் டாலரில் பார்க்கும் போது அது வெறும் $40.00 டாலர்கள் தான்!
அதென்ன, அப்படி ஒரு வாசனைத்திரவியம்?!?. இந்தக் கம்பனி களிமண்ணிற் தட்டுகளைச் செய்து BAKE செய்து ஏப்பிரல் – மே மாதங்களின் கடும் வெயிலில் வரண்ட காற்றில் அவற்றை நன்கு உலர்த்தி எடுக்கிறார்கல் பின்னர் அவற்றை HYDRO-DISTILLING காய்ச்சி வடித்து அத்தர் ஆக்குகிறார்கள். அதன் விலை அதிகமென்பதனால் 5% ஐ எடுத்டு 95% சந்தனமரஆயிலில் (Sandalwood oil) அதனைக் கலந்து தங்களூடைய வாசனைத் திரவியத்தை உருவாக்குகிறார்கள். இதோ உங்கள் “மண்வாசன” வாசனத் திரவியம் ரெடி! உண்மையில் NATURE சஞ்சிகையில் வந்த ஆராய்ச்சிக்கட்டுரையில் Massachusetts Institute of Technology. Australian National University, மற்றும் பெரிய பெரிய விஞ்ஞானிகளின் பெயர்கள் போல இந்தக் குட்டிக்கம்பனியும் பெயர் குறிப்படப்பட்டிருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளூங்கள்.
அது சரி, ஒன்றைக் கவனித்தீர்களா? நீங்கள் தமிழ் நாட்டிலிருந்து மண்வாசனை பற்றிக்கேட்டால் நான் கனடாவிலிருந்து மண் வாசனை பற்றி எழுதுகிறேன்! உலகெங்கும் மண்ணின் LOOK, TEXTURE எல்லாமே மாறுபடுகின்றன. ஆனால் மண்வாசனை மட்டும் ஒன்று தான்!. ஏன் அப்படி?
பொதுவாக மண்ணீல் அக்டினோமைசெட் (ACTINOMYCETES) என்னும் கிருமிகள் காணப்படுகின்றன. இந்தக்கிருமிகள் தாம் காசநோய் வைத்தியத்தில் பயன்படும் ஸ்ட்ரெப்டோமைசீன் அண்டிபயோட்டிக் மருந்து தயாரிக்கப் பயன்படுபவை, இந்தக்கிருமிகள் உலகெங்கும் ஒன்று தான்! கடும் வெயிலிலும் வெக்கையிலும் இவை செயலிழந்து SPORES என்னும் வித்துக்களாகின்றன. அந்த நேரம் அவை வித்துக்களின் மேல் GEOSMINE என்னும் பாதுகாப்புச் சுரப்பு ஒன்றைச் சுரக்கின்றன. இந்த GEOSMINE தான் அந்த வாசனைத் திரவியம்.. புதிதாகப் பிடுங்கிய பீட் கிழங்கில் மணப்பதும் இந்த GEOSMINE தான்! சேற்றுக்குளத்தில் பிடித்த CATFISH தருவதும் இந்த வாசனை தான்! இதென்ன மணம் அல்பமாக இருக்கிறதே என்கிறீர்களா? அமாம, தொகை அல்பம் தான்! அது ஒரு அருமையான பொருள் தான். ஆனால் அந்தக் கானோஜ் கிராமத்துக் கம்பனி தரும் அத்தரில் ஒரு துளீயை எடுத்து நான்கு ஒலிம்பிக் சைஸ் நீச்சல் தடாகங்களுக்கு வாசனை ஏற்றலாம். அதாவது ஒரு ட்ரில்லியனுக்கு ஐந்து பாகம் என்கிற செறிவில் அது உங்களுக்குப் புதிய வாசனையத் தருகிறது. ஒரு ட்ரில்லியனுக்கு ஐந்து பாகம் என்றால் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் உங்கள் குடிதண்ணீர் விற்கும் போத்தலில் உள்ள அளவுகளை வாசித்துப்பாருங்கள்: அவை எல்லாம் ஒரு மில்லியனுக்கு 100 - 300 பாகங்கள் என்று தான் இருக்கும்.
நீர்த்துளியில் வெடித்துத் தெறிக்கும் GEOSMINE AEROSOL
அது சரி புழுதியில் இருக்கும் GEOSMINE முதல் மழையோடு எப்படிக் காற்றுக்குள் நுழைந்து அந்த மாதிரியாக வாசனை தருகிறது?. இது பற்றிப் பொஸ்டனிலுள்ள MIT பல்கலைக்கழகம் ஒரு ஆராய்ச்சி நடாத்தினார்கள். இறுகியில்லாத வரண்ட நிலத்தில் ஒரு துளி மழை விழும்போது அது ஒரு காற்றுக் குமிழியையும் சேர்த்தே உட் தள்ளுகிறது. .இந்த காற்றுக் குமிழிகள் மேலே விரைந்து வந்து வெடிக்கும் போது AEROSOLS எனப்படும் நுண்ணிய மண் துகள்களை வளீமண்டலத்துள்ளே வீசுகின்றன, இவ்வாறு காற்றிற் புறப்படும் துகள்களே அந்தப் புதுமண்ணின் வாசனயைக் காற்றுக்குத் தருகின்றன
இந்த நறுமணம் வீசும் கதையில் கொஞ்சம் சோகமும் கலந்திருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளின் பின்னர் இசபெல் பெயாரும் ரிஷர்ட் தோமஸும் உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களின் புகழுக்கே அத்திவாரம் ;போட்ட கனோஜ் கிராமத்து வாசனைத் திரவியக்கம்பனி இப்போதும் மூச்சுவிடத் திணறுகிறது.. இதனைக் கேள்விப்படுகிற ஒவ்வொரு இந்தியனும் ஒரு குப்பி “மிற்றிக் கா அத்தார்” அத்தரை வாங்கினால் கிராமம் முழுவதும் பணக்காரர் மயமாகி விடும். ஆனால் இதே கதையை மேற்கத்தியவர்கள் கேள்விப்பட்டால் ஆகா, ஓகோ என்று வாங்கித் தள்ளிவிடுவார்கள்.. அப்போது தான் இந்திய மக்கள் பாய்ந்து வந்து அங்கே வரிசையிற் போய் நிற்பார்கள்! அதெப்படி? இந்தியக்கம்பனி என்றால் நமக்குத் தானே முதலில் விற்கவேண்டும் என்று அரற்றுவார்கள்.
நன்றி: திரு.கிருஷ்பிரசாத் கிருஷ், படித்ததில் ரசித்தது, முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக