தயாரிக்க நினைத்தது
மரணமில்லா மருந்து....
ஆனால் கிடைத்தது....?
ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டய சீன தேசத்தை தனது புஜபல பராக்கிரம தனத்தால் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தவர் தான் சின் ஷி ஹுவாங் (Qin Shi Huang).
இவரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இவர் ஆட்சியில் கடுமையான சட்டங்களும், கடுமையான தண்டனைகள் போன்ற பல செயல்பாட்டால் சீன மக்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இவர் மிகுந்த கோபக்காரர் மற்றும் கொடுங்கோல் ஆட்சியாளரும் கூட.
இவ்வாறு ஆட்சி புரிந்து வரும் போது சின் ஷி ஹூவாங் அவருடய மனதில் மரணபயம் துரத்த ஆரம்பித்தது..... தன் எதிரிகளால் தன் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற பயம்...ஒரு தேசத்தையே ஆண்ட மன்னனுக்கு தன் உயிர் மேல் ஆசை...,இல்லை இல்லை பேராசை என்றே சொல்லலாம்..
இதன் விளைவாக மரணமில்லாத மருந்தை கண்டறிந்து தரும்படி தன் நாட்டு மருத்துவர்களிடமும், ஆராய்சியாளரிடமும் கட்டளை பிறப்பித்தான்..
இவருடைய இந்த முட்டாள் தனமான கட்டளைக்கு எதிர் கருத்து தெரிவிப்பவர்களுக்கு மரண தண்டனை அளித்து கட்டளையிட்டான்.
இம்சை அரசன் சின் ஷி ஹூவாங் இடம் வசமாக மாட்டிக்கொண்ட அந்த நாட்டு வைத்தியர்கள் மற்றும் ஆராய்சியாளர்கள் மரணமில்லா மருந்தை கண்டுபிடிக்க அயராது உழைத்து முழி பிதுங்கியதுதான் மிச்சம்.
மன்னரின் மரணத்தை வெல்ல மணிக்கணக்காக பாடுபட்டு பல மூலிகைகள் மற்றும் பல இரசாயனங்கள் கலந்து காய்ச்சி பல மருந்துகள் கண்டு பிடித்தும் எதும் பலன் அளிக்கவில்லை.
இவர்களது முயற்சி ஒவ்வொரு முறையையும் தோல்வியையே தழுவியது. அவ்வப்போது மன்னர் வந்து இவர்களது ஆராய்சியை மேற்பார்வை இட்டு செல்வதால் ஆராய்ச்சி முழு வீச்சில் தொடர்ந்த வண்ணம் இருந்தது.
இவ்வாறு பரப்பரப்பாக நடந்துகொண்டிருந்த இவர்களது மரணமில்லா மருந்துக்கான ஆராய்ச்சியின் போது ஒரு திருப்பு முனை ஏற்பட்டது......
என்னவென்றால் மரணமில்லா மருந்து ஆராய்சியின் காரணமாக மருத்துவர் ஒருவர் அங்கு அருகில் உள்ள மலைகளின் மீது மூலிகைகளை சேகரிக்கச் சென்றிருந்தார். அங்கே வித்தியாசமாக கிடைத்த இரண்டு பொருட்களை மன்னரின் ஆராய்சி கூடத்திற்கு கொண்டு வந்தார். இதனை பார்த்த மற்ற மருத்துவர்களின் சிறிய கண்கள் பெரிதாய் விரிந்தன. அடுத்து நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் ஆராய்சியாளர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்.
வழக்கம் போல கொண்டு வந்த பொருட்களை மரணமில்லா மருந்து தயாரிக்கும் பொருட்டு அடுப்பில் போட்டார் தலைமை மருத்துவர் . அவ்வளவுதான், பெரிய சத்தத்துடன் அடுப்பு வெடித்துச் சிதறியது. கந்தகத்தையும், சல்பரையும் தீயினில் போட்டால் வெடித்து சிதறாமல் மழையா வரும்.
தீயில் கருகிய முகத்துடன் மன்னரிடம் சென்ற மருத்துவர்கள் நடந்ததை கூறினார்கள்.
மன்னர் சின் ஷி ஹூவாங் புத்தியில் ஒரு யோசனை வந்தது......என்னவென்றால் மருந்து மீண்டும் தயாரித்து அதனை மூங்கில் குழாயில் அடைத்து மீண்டும் வெடிக்கிறதா என பார்க்கச் சொன்னார்.. அவ்வாறே செய்தனர்.....டமார் என்ற பெறும் சத்தத்துடன் மூங்கில் குழாய் சுக்குநூறானது. இதுவே உலகின் முதல் பட்டாசு என்கின்ற வெடிபொருள் ஆகும்..
அதன் பின்னால் வெடிமருந்துகள் பற்றிய ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டன.
10 – ஆம் நூற்றாண்டு வாக்கில் சீனர்கள் வெடிகுண்டு தயாரிக்கத் தொடங்கினார்கள்.
1295 ஆம் ஆண்டு சீனாவிற்குச் சென்ற மார்க்கோ போலோ திரும்பி வரும்போது மூட்டை மூட்டையாய் பட்டாசுகளைக் கொண்டு வந்து ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினார். இவ்வாறு வெடிப்பொருட்கள் உலகமெங்கும் பரவ தொடங்கியது.
இந்த சீன வெடி மருந்தை மூலமாக வைத்து ஐரோப்பியர்கள் வெடி குண்டு தயாரிக்க கற்றுக் கொண்டனர்.பட்டாசை ஆசையோடு பார்த்தவர்கள் அதனைப் பக்கத்து வீட்டின் மேல் போட்டுப் பார்த்தார்கள். அடுத்த தெரு, அடுத்த ஊர், இப்போது அடுத்த நாடு.
பண்டைய சீன அரசர் சின் ஷி ஹூவாங் அவர்கள் மரணமில்லா வாழ்விற்காக கண்டுபிடிக்க முயற்சி செய்து இன்று பல உயிர்கள் மரணிக்க ஏதுவாய் அமைந்த அணுகுண்டு போன்ற பயங்கர வெடிப்பொருட்களின் அறிவியல் கண்டுபிடிப்புக்கு இம்மருந்து ஏதுவாய் அமைந்து விட்டது என்பது விதியின் விளையாட்டு.....
எது எப்படியோ சின் ஷி ஹூவாங் அவரின் மரணமில்லா மருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்தமையின் விளைவால் விழாக்காலங்களில் நாம் வெடித்து மகிழ பட்டாசு கிடைச்சதே! அதுவரைக்கும் மகிழ்ச்சியே!
நன்றி : திரு நேயம் சத்யா, தத்துவங்களத் தேடி, வாட்ஸ்அப் குழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக