தி.ஜானகிராமனின்
சிறுகதை : பஞ்சத்துஆண்டி
ஒரு ஊர்ல நன்னையன் என்ற ஒரு நெசவாளி வாழ்ந்து வந்தார்.
அவர் நெசவுக்கு நூல் கிடைக்காததால் ஊரில் வாழ முடியவில்லை.
ஒருபுறம், கடன் தொல்லை அவரும் அவர் மனைவி மூன்று பிள்ளைகள் பிழைப்புக்காக எப்படி வாழ்வது என்று தெரியாமல் தங்களது கிராமத்தை விட்டு வெளியேறினார்கள்.
பசியின் கொடுமை தாங்கமுடியாமல் பிச்சை எடுக்க முடிவு செய்தார்கள்.
ஒருபுறம் சுயகெளரவம் தடுத்தது. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம்.
அவர் பிச்சை எடுக்க புறப்பட்டார்.
ஒவ்வொரு வீட்டின் கதவுகளையும் தட்டி
"தான் ஒரு நெசவாளி ஊர்ல பஞ்சம் வந்தது சாப்பிட ஏதாவது கொடுங்க"எனக்கேட்டார். சல்லிக்காசு கூட யாசகம் செய்பவர் இல்லை.
எல்லா உழைக்கக்கூடிய மனிதர்களுக்கும் எழும் கேள்வி அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்யப்போகிறோம்.?
என்ற கேள்விகளை சுமந்துகொண்டு பிச்சைப் பாத்திரத்துடன் ஒவ்வொரு வீதியிலும் அலைந்து திரிந்தார் அந்த நெசவாளி.
ஒரு வீட்டில் பல அவமானங்களுக்கு மத்தியில் ஒரு தர்ம பிரபு அவருக்கு சாப்பிட உணவு தருகிறார்.
அந்த உணவை பெற்றுக்கொண்டு
ஓடோடி தன் குடும்பத்துடன் வந்து சேருகிறார். அருகாமையில் இருக்கும் ஒரு குரங்காட்டி இவரைப்பற்றிய கேட்கிறார் அவரும் தனது கதையை சொல்லி முடிக்கிறார்.
அதற்கு அந்த குரங்காட்டி
இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை பிச்சை எடுப்பது தான் ஓடிட்டே இருக்கனும், பிச்சை எடுப்பதற்கும் 'முதலீடு' தேவை.
என ஆலோசனைகளை கூறி ஒரு பெண்மணியிடம் கூட்டிச்சென்று அவருக்கு ஒரு ஐந்து வயதே உள்ள குரங்கை(வைத்தியலிங்கம்) கொடுக்கிறார்.
இந்தக் குரங்கை வைத்துக்கொண்டு பிழைத்துக் கொள்ளுங்கள்.
நெசவாளிக்கு தான் வாழ்ந்த வாழ்க்கை நினைவிற்கு வந்து மனம் தடுக்கிறது. வேற வழியில்லை குரங்கை வாங்கிக் கொள்கிறார்.
அதற்கு அந்த குரங்காட்டி நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் 'ஆடுறா ராமா ஆடு, தாண்டுரா ராமா தாண்டு' என சொன்னால் போதும் குரங்கிற்கு.
அந்தக் குட்டி குரங்குடன் தன் இருப்பிடத்திற்கு (யாரோ ஒருவருடைய திண்ணைக்கு) வருகிறார்.
நெசவாளியுடைய மனைவி கேட்கிறாள்.. "நாம சாப்பிடுவதற்கே ஒருவேளை சோறு இலல இதுல குரங்கு வேற வா".
கைத்தறி தொழில் செய்து பழகிய அந்த நெசவாளியின் மனதும் கைகளும் பழக்கமில்லாத இந்தத் தொழிலில் செய்ய மறுக்கிறது. கடைசியாக பிச்சைப் பாத்திரத்துடன் வெளியே கிளம்புகிறார். குரங்கு தப்பித்து மின்சாரம் தாக்கி இறந்து விடுகிறது. அங்கே மக்கள் கூடிவிடுகின்றனர்.
கதையிலிருந்து ஒரு சில வரிகள்...
ஏண்டா, உன் குரங்கா இது?” என்று கேட்டார் ஒரு வயசானவர்.
”ஆமாங்க.”
“எப்படிச் செத்துப்போச்சு?”
நன்னையன் கதையைச் சொன்னான்.
“ஏண்டா, அநுமார் அவதாரம்டா அது. சாக விட்டுட்டியே. இதை வச்சுக் காப்பாத்த முடியலியாடா. பாவிப்பயலே!” என்று அவன் முதுகில் இரண்டு குத்துவிட்டார் அவர். ஊருக்குப் பெரியவர்களில் ஒருவர் போல் இருக்கிறது. ஒருவரும் அவரைத் தடுக்கவில்லை. ஊரெல்லாம் இதை வந்து பார்த்தது.
காளியும் புருஷனும் ஓடிவந்தார்கள். காளி வைத்திலிங்கத்தைத் தொட்டுத் தொட்டு அழுதாள்.
“குரங்கின் கையிலே பூமாலை கொடுத்தாப்பலே பண்ணிட்டீங்களே சாமி!” என்று நன்னையனைப் பார்த்து வெதும்பினாள்.
பரபரப்பு அதிகமாகிவிட்டது. தெருவில் உள்ளவர்கள் மும்முரமாக அங்கும் இங்கும் ஓடினார்கள்.
ஒரு மணி நேரத்திற்குள் ஒரு சின்னச் சிங்காரச் சப்பரம் தயாராகிவிட்டது. சிறிய வாழைக்குலை, ஓலை நறுக்கு, இரண்டு மெழுகுவர்த்தி – சப்பரம் வெகு அழகாக இருந்தது. வைத்திலிங்கத்தைக் காலைத் தொங்கவிட்டு, கையை அஞ்சலி பந்தம் செய்து உட்காரவைத்து ஜோடித்தார்கள். உட்கார வைக்குமுன் குளிப்பாட்டியாகிவிட்டது. நெற்றியில் நாம, திருச்சூர்ன்ணம். மேலெல்லாம் குங்குமம். ஒரு ரோஜாப்பூ ஹாரம்.
பஜனை கோஷ்டி, ஜாலர் ஒலிக்க, ‘ரகுபதி ராகவ ராஜா ராம்’ பாடிக் கொண்டு முன்னால் சென்றது. நல்ல கூட்டம். நன்னையன் கைதியைப் போல், பஜனை கோஷ்டியில் நடுவில் மாட்டிக் கொண்டுவிட்டான்.
ஒரு சந்துபொந்து விடாமல் ஊர் முழுதும் சுற்றி, ஆற்றங்கரைப் பாதையில் வாய்க்காலுக்குப் பக்கத்தில் நின்றது ஊர்வலம். பஜனை கோஷ்டியின் திவ்ய நாமம் ஆற்றங்கரை வெளியெல்லாம் எதிரொலித்தது. அரை மணி நேரம் ஆஞ்சனேயரின் நாமம் கடலலைபோல் முழங்கிற்று.
அழகாக இரண்டு முழம் உயரத்துக்குச் சிமிண்டு போட்டுச் சமாதி எழுப்பி விட்டார்கள். பின்னால் அரசங்கன்றும் நட்டு நீர் ஊற்றினார்கள்.
திவ்ய நாமம் முடிந்தது. எல்லோரும் விழுந்து வணங்கினார்கள்.
“என்னடா, சும்மா நிக்கிறியே, கொலைகாரப் பயலெ, விழுந்து கும்பிடுடா!” என்று ஊருக்குப் பெரியவர் ஓர் இரைச்சல் போட்டார். பரபரவென்று இடுப்பில் சோமனைக் கட்டி நெடுஞ்சாண்கிடையாக நாலுமுறை எழுந்து எழுந்து விழுந்தான் நன்னையன்.
மனிதர்கள் விசித்திரமானவர்கள்.
மனிதர்கள் மீது தவிர எல்லாவற்றின்
மீதும் பரிவு உள்ளம் கொண்டவர்கள்.
பசியால் வாடும் மனிதனுக்கு உணவு அளிக்க மறுப்பவர்கள் தான் கோடிகோடியாக பொன்னையும் பொருளையும்
தானமாக வழங்குகின்றனர்.
வேலை இழந்த எண்ணற்ற தொழிலாளிகள் புலம்பெயர்ந்து ஏதோ ஒரு வேலையில் தன்னைப் பிணைத்துக் கொண்டு
ஒரு ஜான் வயிற்றிற்காகவும், உடம்பை மறைப்பதற்காகவும் தங்களின் சுயத்தை இழந்து பிழைப்பிற்காக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
சேலத்தில் நூல் கிடைக்காத பஞ்சம் வந்தது, நெசவாளர்கள் எல்லாம் கைத்தறித் தொழில் செய்து வந்த காலத்தில்....
அதை நம்பி வாழும் ஒரு குடும்பத்தின் கதை
'பஞ்சத்து ஆண்டி' ஒருமுறையேனும் வாசித்து விடுங்கள்.
–அக்டோபர் 1951
நன்றி: திரு அமுதன் தேவேந்திரன், தி.ஜானகிராமன் இலக்கிய வட்டம், முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக