22 ஆக., 2020

கருத்து மேடை : உணவு என்பது ஒரு அனுபவம் : சரவண பரமானந்தம்


உணவு என்பது வெறும் உண்ணுவதில் மட்டும் முடிவதல்ல. அது ஒரு அனுபவம். விதைகளை சேகரித்து, அவற்றை மண்ணில் விதைத்து, அது முளைத்து வருவதை பார்த்து மகிழ்ந்து, அதற்கு நீர் ஊற்றி, வீட்டில் பயன்படுத்திய காய்கறியில் தேவை இல்லாதவற்றை மக்கவிட்டு அதை  மண்ணில் உரமாக இட்டு, அது தினமும் கண்முன்னே வளர்வதை பார்த்து மகிழ்ந்து, பூச்சி தாக்காமல் இருக்க வீட்டிலேயே இயற்கை பூச்சி கொல்லிகளை உருவாக்கி மற்றும் பயன்படுத்தி,  இறுதியாக அந்த செடி ஒரு பூ பூத்து காய் காய்கின்றது பாருங்க... அது ஒரு பிள்ளை பிறந்ததை பார்ப்பது போல் ஒரு அருமையான இன்பம் தெரியுமா. அதனாலேயே உணவு என்பது ஒரு அனுபவம்.

இன்று வீட்டில் வளர்ந்த முருங்கை கீரை மற்றும் வெண்டை சமையல், எங்கள் வீட்டில். கோடிக்கணக்கில் பணம் இருந்தும், யாரோ விளைவித்த காய்கறிகளை,  இரசாயனங்கள் கலந்து இருக்குமா என்ற ஒரு சிறிய கவலையுடன் உண்ணுவதை விட இதுவே சிறப்பான அனுபவம்.

குறுக்கு சந்து போல் ஒரு வீட்டில் தங்கியிருக்கும் என்னாலேயே 25 வகையான காய்களையும் கீரைகளையும் வீட்டில் உற்பத்தி செய்யமுடிகிறது என்றால், பெரிய இடத்தில் இருப்பவர்களால் எவ்வளவு செய்யமுடியும். அழகு சார்ந்த செடிகளை நீக்கிவிட்டு பயன் உள்ள காய்கறி கீரை செடிகளை வையுங்கள். ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு செடிகளில் ஆரம்பியுங்கள், பின்னர் நீங்களே அதற்கு அடிமையாகி பல செடிகளை வளர்க்க தொடங்கிவிடுவீர்கள். நன்றி!


நன்றி : திரு சரவண பரமானந்தம் மற்றும் முகநூல்.

கருத்துகள் இல்லை: