இன்றைய தத்துவம் :
ஐயவாதம் என்று அழைக்கப்படும்
Skepticism
எல்லா அறிவியல்களைனதும், அதுபோல இறையியலினதும் தொடக்கப் புள்ளியும், முக்கியமான கொள்கையும் வழிமுறைப்பட்ட ஐயம் மட்டுமன்றி நேர் ஐயமும் ஆகும் என்பது சார்ச் ஏர்மெசு (Georg Hermes) என்பவரது கருத்து. ஒருவர் நியாயமான அடிப்படைகளில் உண்மை என்று உணர்பவற்றை மட்டுமே நம்பமுடியும் என்றும், அத்தோடு திருப்திப்படக்கூடிய நியாயங்களுக்கான அடிப்படைகளைக் காணும்வரை தொடர்ச்சியாக ஐயப்படுவதற்குரிய துணிச்சல் ஒருவருக்கு இருக்கவேண்டும் என்றும் அவர் மேலும் கூறுகிறார்.
சான்றுகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் சிந்தனையில், ஐயப்படுவது அறிவுசாந்த ஒரு பகுதி என்பதும், அவ்வாறு இல்லாவிடில் நம்பிக்கைக்கு உண்மையான பொருள் இருக்காது என்பதும் இவர்களுடைய கருத்து.
ரெனே டேக்காட்- என்றுமே எல்லாருக்கும் பிடித்திருந்தார். அதேவேளை எரிச்சலூட்டுபவராயும் இருந்தார் அக்காலத்தில். அவர் உறுதியான அறிவைத் தேடினார். நவீன மெய்யியலின் தந்தை என அழைக்கப்பட்டார். அவர் அறிவின்பாற் சந்தேகப்பட்டார். உறுதியான அறிவென்று ஏதுமுளதா எனக் கேட்டார்.
1) அறிவின் உறுதி என்பது 2ம்2ம் 4 என்பதுபோல உறுதியாய் இருக்கவேணும். அரக்கக்கூடாது. தளம்பக்கூடாது.
2) அறிவிற்கான வரையறை என்பது ஒரு பொழுதும் ஐயப்படலாகாது.
ஐயப்படக் கூடிய அறிவு அறிவில்லை என்றார். ஐயவாதத்தின் தந்தை எனவும் அவரை அழைத்தார்கள். ஐயவாதம் அல்லது சந்தேகவாதம் என்பது மிகவும் சுவாரசியமானது.
டேக்காட் சொல்லும் சந்தேகவாதம் இதுதான். நான் எல்லாவற்றையும் ஐயுறுகிறேன். ஐயப்படாமல் என்னால் இருக்க முடியவில்லை. எல்லா அறிவுமே ஐயுறக்கூடியது. அப்போ என்னதான் ஐயுறமுடியா அறிவு?
இறுதியில் அவர் ஒரு முடிபுக்கு வந்தார். அது என்ன தெரியுமா… -நான் எல்லாவற்றிலும் ஐயுறுகிறேன். இப்போதைக்கு இதுவே ஐயுறா என் அறிவு- என்றார்.
அத்துடன் அவர் நிற்கவில்லை. சந்தேகப்படுதல் என்பது அறிவின் செயற்பாடு. சந்தேகப்படப்முடியா அறிவென்பது சாத்தியமில்லை.
இந்த அறிவுச் செயற்பாட்டுக்கு ஒரு –இடம்- வேண்டும் இந்தச் செயற்பாட்டை நீங்கள் உள்ளுதல் (சிந்தனை) எனக் கொள்வீர்களானால்..அது இருக்க வேண்டும். இல்லாத ஒன்று, ஒன்றையுமே செய்யமுடியாது ஆதலால் அது இருக்க வேணும். என்று சொல்லிவிட்டு… - சிந்திகிறேன் ஆதலால் உள்ளேன் – என்றார்.
ஐயம் என்பது நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடைப்பட்ட ஒரு நிலை. உண்மை எனச் சொல்லப்படும் ஒரு விடயம், ஒரு செயற்பாடு, ஒரு நோக்கம், அல்லது ஒரு முடிவு போன்றவற்றின் மீது நிச்சயமின்மை, நம்பிக்கைக் குறைவு அல்லது உறுதிப்பாடில்லாத தன்மையை இது குறிக்கிறது. ஒரு கருத்தமைவு அல்லது உண்மைநிலை எனக் கருத்தப்படும் ஒன்றை ஐயம் கேள்விக்கு உள்ளாக்குகிறது. இதனால், குறித்த செயற்பாடோ, விடயமோ பிழையாக அல்லது குற்றமாக அல்லது பொருத்தமற்றதாக இருக்கக்கூடும் என்ற எண்ணம் காரணமாகக் குறித்த விடயத்தை அல்லது செயற்பாட்டைத் தாமதமாக்கும் நிலை அல்லது முற்றாகவே மறுத்தொதுக்கும் நிலை ஏற்படுகிறது. "ஐயம்" என்பதற்கான வரைவிலக்கணங்கள் சில, மனம் இரண்டு முரண்பட்ட கருத்துக்களிடையே தத்தளித்துக் கொண்டு எந்தவொரு பக்கத்துக்கும் செல்ல முடியாத ஒரு நிலையைக் குறித்துக் காட்டுகின்றன. ஐயம் என்னும் கருத்துரு பல தோற்றப்பாடுகளை உள்ளடக்குவதாக அமைகின்றது. ஐயம் என்பதை, ஒரு விடயத்தின் நம்பகத்தன்மை குறித்துத் திட்டமிட்ட கேள்வி எழுப்புதலாகவும், ஒரு உணர்வு சார்ந்த, முடிவு எடுக்க முடியாத ஒரு நிலையாகவும் கொள்ள முடியும்.
ஐயம், செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்போ அல்லது ஏதாவது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்போ தாமதிப்பதற்கு ஊக்குவிக்கிறது. ஐயம், நம்பிக்கையின்மைக்கும், எற்றுக்கொள்ளாமல் விடும் தன்மைக்கும் இட்டுச் செல்வதால் அது முக்கியத்துவம் பெறுகிறது. அரசியல், ஒழுக்கம், சட்டம் போன்றவை, தனிப்பட்டவர்களைப் பாதிக்கக்கூடிய முடிவுகளை எடுப்பதில் ஐயத்துக்கு பெருமளவு முக்கியத்துவத்தை அளிக்கின்றன. இதனால், சான்றுகளைக் கவனமாக ஆராய்வதற்காக விரிவான எதிர்வாத வழிமுறைகளை அவை கையாளுகின்றன. சமூக மட்டத்தில் ஐயம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. இது இன்னொருவர் அல்லது குழுவினர் மீது குற்றஞ்சாட்டும் இயல்பு கொண்டது. அறிவொளிக் காலத்தில் இருந்து மேற்கத்திய சமூகங்களில், மரபுக்கும், அதிகாரத்துக்கும் எதிராக இவ்வகையான நிலைப்பாடு வளர்ந்து வந்துள்ளது.
ஐயத்துக்கான காரணிகளை எதிர்கொள்ளுவதற்காக அறிதிறன் சார்ந்தனவும், ஆன்மீகம் சார்ந்தனவுமான பல்வேறுபட்ட அணுகுமுறைகள் உள்ளன.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து ஒருவர் முடிவு செய்ய முடியாது என்று கூறும் அறியொணாவியம் (Agnosticism) அல்லது அறியொணாவாதத்திற்கு, இறைவன் இருக்கிறாரா என்ற ஐயமே அடைப்படையாக இருக்கிறது.
சில இறையியல் கொள்கைகளின் மீதான ஐயம் அந்த இறையியல் பிரிவின் முழு நம்பிக்கைகளையுமே கேள்விக்கு உள்ளாக்குவது உண்டு. அதே வேளை, அப்பிரிவின் சில கொள்கைகளில் மட்டும் ஐயப்பாடு இருக்கும் போது முரண்பாடுகள் ஏற்பட்டுப் புதிய பிரிவுகளும் தோன்றுவதைக் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக