ஹோமியோபதியில் நோய்த்தடுப்பு மருந்து :
மரு.K.S.சீனிவாசன்
தடுப்பு மருந்து பொதுவாக புரிந்துகொள்ளப்பட்ட விதம், குறிப்பாக குழந்தைகளுக்கு ‘தொற்று நோய்களைத் தடுப்பது’. தொற்றுநோய்களுக்கு அஞ்சும் போதெல்லாம் நோய்த்தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ள பாதுகாப்பற்ற நிலையில் இருப்பவர்களுக்கும், இன்னும் பாதிப்படையாதவர்களுக்கும் நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்த மருந்துகள் குழந்தைப்பருவத்தின் பொதுவான தொற்று நோய்களுக்கு எதிராக தற்காப்புத்தன்மையை வழங்குவதற்காக, இன்று வழக்கத்தில் உள்ள மருத்துவ முறையில் வழங்கப்படுவது நிலையான தடுப்பூசிகள் ஆகும்.
ஹோமியோபதியில் நம்மிடம் ‘தடுப்பு மருந்துகள்’ உள்ளன. உண்மையில், தொற்றுநோய்களுக்கான தடுப்பு மருந்துகளைப் பற்றி பேசியது மட்டுமல்லாமல், உண்மையில் அவற்றை பரிந்துரைத்த மருத்துவர்களின் வரிசையில் முன்னணியில் இருப்பவர் நம்முடைய ஆசான் மரு.ஹானிமன் ஆவார். காலராவைத் தடுப்பது பற்றிய அவரது புகழ்பெற்ற கட்டுரைகள் மற்றும் அந்த பயங்கரமான நோயின் வெவ்வேறு கட்டங்களுக்கு ஹோமியோபதி மருந்துகளான காம்பர், குப்ரம் மற்றும் வெராட்ரம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் ஸ்கார்லெட் காய்ச்சலுக்கான அவரது நோய்த்தடுப்பு மருந்து பரிந்துரை ஆகியவை நோய்த்தடுப்பு முறைக்கான இரண்டு எடுத்துக்காட்டுகள்.
ரேபிஸிற்கான தடுப்பு மருந்து பற்றிய அவரது சிறிய கட்டுரையும் இங்கு குறிப்பிட பொருத்தமானது. துரதிர்ஷ்டவசமாக, ஹோமியோபதியால் உலகெங்கிலும் சிகிச்சையளிக்கப்பட்ட ரேபிஸ் வழக்குகளை சேகரித்து மற்றும் அதன் முடிவுகளிலிருந்து, அதனால் சாத்தியமான நோய்த்தடுப்பு மருந்திற்கு வந்தடைவதற்கு பல ஆண்டுகளாக (இன்று வரை!) யாரும் முயற்சி எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. அரசாங்கம் அதன் பல்வேறு நோய்த்தடுப்புத் திட்டங்களில் ஹோமியோபதிக்கு உரிய இடத்தை வழங்கவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஹோமியோபதி பயிற்சியாளர்களும், குறிப்பாக ‘தலைவர்கள்’ இந்த விஷயத்தில் அதிகாரிகள் மீது போதுமான அழுத்தம் கொடுக்க ஒன்றிணைவதில்லை. (அவர்கள் எத்தகைய சொந்த விஞ்ஞானத்தை கொண்டு வாழ்வாதாரம் கொண்டிருக்கிறார்களோ அத்தகையதை பற்றியே சந்தேகம் கொள்கிறார்கள் = KSS ). மனித இனம் தொற்றுநோய்களைக் கொண்டிருக்காமல் செய்வதற்கு ஹானிமன் மருத்துவர்களை பொறுப்பேற்க செய்தார்.
இப்போது: ‘தடுப்பு’ நோய்களின் கீழ் இங்கு விவாதிக்க முன்மொழியப்பட்டவை மேற்கண்ட தொற்றுநோய்களிலிருந்து வேறுபட்டவை. இது முறையற்ற முறையில் சிகிச்சையளிக்கப்பட்ட குறுகிய கால கடுநோய்களின் விளைவாக உருவாக்கப்பட்ட தீவிர நோய்க்குறியியல் நோய்களை அல்லது முதலில் அற்பமான நோய்களாகத் தோன்றி பிறகு கடுமையானதாக மாறக்கூடியவைகளை பற்றியது. குழந்தை பருவத்தில் அடிக்கடி தொண்டைப்புண் ஏற்பட்டால் அது இதயத்தை சேதப்படுத்தும் என்பதை நாம் அறிவோம். “வாத காய்ச்சல் (Rheumatic fever) மீண்டும் மீண்டும் நிகழ்கிற போது இது மூன்று வாரங்களுக்குள் ஸ்ட்ரெப்டோகாக்கால் தொற்றுக்களாக பெரிய மூட்டுகளில் வலி, கடுமையான காய்ச்சல் மற்றும் இதய அயற்சி ஆகியவற்றின் வழியாக விரைவான கடும்-கீல்வாதம் (poly arthritis) எனக் காட்டுகிறது. இதய அயற்சி (carditis) கடுமையானதாக மாறி பிறகு நிரந்தர இருதய பாதிப்பு ஏற்படலாம். ”
உலகளாவிய ரீதியில் ருமேடிக் இதய நோய் என்பது குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே வேறொரு நோய் விளைவாக ஏற்பட்ட இருதய நோய்களின் பொதுவான வடிவமாகவும் மற்றும் பெரியவர்களுக்கு மிகவும் பொதுவான இருதய-ரத்த நாளங்களின் (cardio-vascular) கோளாறுகளில் ஒன்றாகும் உள்ளது என்றும் லான்செட் கூறுகிறது. இந்தியாவில், வெப்பமண்டல பகுதி, துணை வெப்பமண்டல ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், மத்திய அமெரிக்கா, இந்தோனேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த ருமேடிக் இதய நோய்கள் அதிகரித்தது.
இன்று ஹோமியோபதி நிரூபித்துள்ளது - திறந்த மனதுள்ள எவராலும் இது சரிபார்க்கக்கூடியது - இது தொண்டை புண்ணை குணப்படுத்தியது மட்டுமின்றி பாலி ஆர்த்ரிடிஸ், காய்ச்சல், பலவீனம் போன்ற நோய்களிலும் வேலை செய்கிறது. அதுமட்டுமின்றி மீண்டும் அந்த நோய் ஏற்படாத வகையில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. ஹோமியோபதி இதனால் இதயத்திற்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது. வாத காய்ச்சலால் இதயத்தை சேதப்படுத்துவதை தடுக்கும் தடுப்பு மருத்துவம் ஹோமியோபதி என்று உரிமை கொண்டாடலாம்.
பாஸ்பரஸைப் பற்றி ‘லம்போ-சாக்ரல் (lumbo-sacral) பகுதியில் நரம்புத்தளர்வு’ என்ற கட்டுரையில் விவாதிக்கும் போது, டாக்டர்.இ.ஏ. பாரிங்டன் : “இடப்பெயர்ச்சி இயலாமை(locomotor ataxia)யின் முன்னோடியாக தன்னிச்சையாக சிறுநீர் கழிப்பதை டாக்டர். ஹம்மண்ட் கவனித்துள்ளார், எந்தவொரு நரம்புத்தளர்ச்சி (ataxia) அறிகுறிகள் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இந்த தன்மையை வெளிப்படுத்துகிறது" என்று கூறுகிறார்.
இந்த மருத்துவ உண்மையை நினைவில் வைத்துக் கொண்டு அனைத்து சுருக்குதசை தளர்வுகளையும் (sphincter relaxations) குணப்படுத்த நம்பிக்கையுடன் முயற்சிக்கவும் இது நமக்கு உதவும். இதன் விளைவாக குணப்படுத்த முடியாத வகையில் உடலில் ஏற்படும் புண்களை (organic lesions) நாம் தடுக்கலாம். இந்த தன்னிச்சையான சிறுநீர் கழித்தல், கழித்தப் பிறகு சொட்டு சொட்டாக சிறுநீர் வருதல், சிறுநீர் மற்றும் மலவாய் பகுதிகளில் உள்ள சுருக்கு தசைகளின் (sphincters) பலவீனம், ஆகியவற்றை ஹோமியோபதி மருந்துகளைக் கொண்டு குணப்படுத்துவதன் மூலம், பிற்கால வயதில் முடக்கமான நிலையை தரக்கூடிய லோகோமோட்டர் அட்டாக்ஸியாவைத் தடுக்கலாம்.
இந்த நேரத்தில் காலி-கார்போனிகம் பற்றி டாக்டர்.கெண்ட் கூறியதை நினைவு கூர்வோம்: “இதயத்தின் பலவீனம், இதயம் சார்ந்து மூச்சு விடுவதில் இடர்பாடு; குறுகிய மூச்சினால் துயரர் நடக்க முடியாது அல்லது மிக மெதுவாக நகர வேண்டும். இவை கொழுப்பு நிறைந்த இதயத்தின் காரணமாக ஏற்படக்கூடியவை . "
வரவிருக்கும் ஆபத்து பற்றிய நல்ல சரியான நேரத்தில் எச்சரிக்கை. “இதில்,(காலி-கார்ப்) உடலில் முழுவதும் நீர் கோர்த்து இருக்கும் . கால்கள் வீங்கியும் விரல்கள் ஊதியமும் இருக்கும்; கைகளின் பின்புறம் மீது அழுத்தத்தினால் குழி விழும், முகம் ஊதியும் மெழுகு போல் தெரியும். இதயம் பலவீனமாக இருக்கும். கொழுப்பின் காரணமாக இதய தொந்தரவு (fatty degeneration of heart) தொடர்பான பல நிகழ்வுகளை நான் திரும்பிப் பார்க்க முடிகிறது, அதில் காளி கார்ப் உடனான அனைத்து சிக்கல்களையும் நான் தடுத்திருக்கிறேன், ஆனால் ஆரம்பத்திலேயே இந்த வழக்கை நான் நன்கு அறிந்திருந்தால் ”. எனவே, இதயத்தின் கொழுப்பு காரணமான தொந்தரவுகளை தடுப்பதற்கான ஹோமியோபதி மருந்தை குறித்த பரிந்துரை இங்கே மீண்டும் உள்ளது.
வாழ்க்கையில்
வரவிருக்கும் நிகழ்வுகள் அவற்றின் வெள்ளோட்டத்தை முன்பே காட்டுகின்றன. அதாவது உணர்ச்சித் தொந்தரவுகள், வாழ்க்கை சிரமங்கள் மற்றும் அவைகளை தாண்டிச் செல்லவோ அல்லது முறியடிக்கவோ இயலாமை ஆகியவை அதற்கெல்லாம் காரணமான நம்முடைய மனதின் தாக்கங்களினால் வெளிப்படுகின்றன.
வெற்றி கொள்ள முடியாத
உள சிக்கல்கள் வெளிப்படுத்தாமல் உள்ளமுக்கப்பட்டு சரியான நேரத்தில் இதய நோய்கள், மூட்டு வாதங்கள், புற்றுநோய் ஆகியவைகளாக உடல்ரீதியாக வெளிப்படுகின்றன. வலி நிவாரண மருந்துகள், இரத்த அழுத்த குறைப்பு மருந்துகள் போன்றவற்றின் அதிக அளவு பயன்படுத்தியது மற்றும் மறுபக்கம் அதிகரித்து வரும் புற்றுநோய், இதய நோய்கள், வாத நோய் போன்றவற்றை நாம் ஒப்பிட்டு பார்த்தால், மேற்கண்ட இந்த ஆய்வியலை நாம் புறம் தளள முடியாது.
மனநல மருந்துகளின் பயன்பாடு என்பது உணர்ச்சி மோதல்களையும் வாழ்க்கை நிலைமை சிக்கல்களையும் சமாளிக்க முடியாத சூழலில் அதை எடுத்துக்கொள்கிற அந்த துயரர்களின் மன நிலைமைகளை சுட்டிக்காட்டுகிறது.
இவைகளுக்கு தீர்வாக, கவலை, பயம், பிரமைகள், விரக்தி, சோகம் போன்ற குறிமொழிகளை நமது மருந்து காண் ஏட்டில் பார்க்கலாம். கவலை, பயம் எதற்காக ? இதற்கான விடையை துயரருடனான தனித்துவமான விசாரணை மூலம் கண்டறிந்து, அதற்கு பொருத்தமான ஹோமியோபதி மருந்தை பரிந்துரைக்க வேண்டும். இது துயர் தன் சிக்கல்களை எதிர் கொள்ளவும், வாழ்க்கை மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை சீரமைத்து கொள்ளவும் உதவும் வகையில் அந்த மருந்துகள் அமையும்.
மார்பக புற்றுநோய் தோன்றிய ஒரு துயரர் எழுதும் போது, "அவர் மற்ற பல மார்பக புற்றுநோய் துயர்களை போலவே இருந்ததாக குறிப்பிடுகிறார்-அவரது வீட்டிலுள்ள சிரமங்கள் மற்றும் சச்சரவுகள் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்ட வாழ்க்கை சூழலால் சோர்வாக இருந்தார், குடும்பம் ஒரு சுமையாக இருந்தது." இனி ஹானிமன் கூறுவதை கேட்போம்: “உணர்ச்சி ரீதியான எழுச்சிகள் (emotional upsets) குறிப்பாக ஆரம்பகால மன அமைதியை கெடுக்கிற விஷயங்கள் மறைந்திருக்கும் சோராவை வெளிப்படுத்துகின்றன, மேலும் பலவீனங்களையும் இன்னும் பலவற்றையும் ஏற்படுத்துகின்றன, இதனால் நோய்வாய்ப்பட்ட நபர் தனது சொந்த சக்தியால் மீள முடியாது. துயரருக்கு பொறுமையுடனும் அமைதியுடனும் தனது நிலையை தாங்கிக்கொள்ளும் அல்லது எதிர்கொள்ளும் அளவுக்கு தத்துவம், சிந்தனை மற்றும் தேர்ச்சி இல்லை என்றால், நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ நிர்வாகத்தால் கூட வெறுப்பு மற்றும் வருத்தங்களின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு ஆளான ஒரு நாள்பட்ட துயரரை அவரின் துயரத்திலிருந்து மீட்டெடுப்பதில் வெற்றி பெற முடியாது" என்கிறார்.
வாழ்க்கையை வெறுப்பது, மனச்சோர்வு, விரக்தி, மன உளைச்சல், கவலைகள், இவைகளினால் ஒரு நபர் பாதிக்கப்பட்டால், அல்லது அந்த நபர் இந்த வகையான உணர்ச்சிகரமான நிலைமைகளைத் தாண்ட முடியாவிட்டால், உட்புற சோரா வெளிப்பட்டு உடல்ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது; மேலும் சைகோசிஸ் மற்றும் சிபிலிஸ் மியாசங்களுடனான தொடர்புகள் அனைத்தும் சரியான நேரத்தில் நோயியல் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. டாக்டர் வான் அன்ஜெர்ன்-ஸ்டென்பெர்க் (Dr.Von ungern sternberg) உணர்ச்சி ரீதியான தொந்தரவுகள் நீங்கவில்லை என்றால், அதன் விளைவாக இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்க்களை ஏற்படுத்தக்கூடிய நோய்களை உருவாக்கக் கூடும் என்பதை நிரூபிக்க பல நிகழ்வுகள் அதற்கான மேற்கோள் காட்டுகின்றன என்று கூறுகிறார். எனவே நமது மருந்து காண் ஏட்டில் உள்ள ‘மனம் சார்ந்த குறிமொழிகள்’ முக்கியத்துவம் வாய்ந்தவை. பொருத்தமான ஹோமியோபதி மருந்து இந்த நபர்களுக்கு உதவும். மேலும் பின்னர் வரக்கூடிய தீவிர நோயியலையும் தடுக்கும்.
உண்மையான ஹோமியோபதி பயன்படுத்தப்பட்டால், புற்றுநோய், நாள்பட்ட மூட்டு வாத நோய், இதய சுற்றோட்ட நோய்கள் ஆகிய மூன்று பெரிய நவீன சிக்கல்கள் தடுக்கக்கூடியவையே.
இறுதியாக நாம் ஹானிமனின் மரபுக்கு தகுதியானவர்களாக இருப்போம், மேற்கண்ட விஷயங்களுக்காக பாடுப்படுவோம்.
தமிழாக்கம் :
நேயம் சத்யா
(குறிப்பு : மரு.K.S.சீனிவாசன் ஐயா அவர்களின் , "HOMŒOPATHY THE PREVENTIVE MEDICINE",
என்ற ஆங்கில உரையை , அவரின் இணைய தள பதிவிலிருந்து எடுத்து தமிழாக்கம் செய்துள்ளேன்.
நண்பர்களே, இந்த மொழிப்பெயர்ப்பிலோ அல்லது அதன் உள்ளடக்கத்திலோ ஏதாவது பிழைகள் இருப்பின் தயவுசெய்து சுட்டி காட்டவும்.
நான் திருத்திக் கொள்கிறேன்.
மற்றப்படி , ஐயா அவர்களின் உரையை உங்களுக்குள் உள்வாங்கி அதை தங்களின் ஹோமியோபதி சேவையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி !)
Grateful thanks to Neyam-Satya, Hahnemannian Warriors and Facebook.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக