நான்கு_செயல்களை மனிதன் தினமும் தவறாமல் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
• 1. துயிலெழும்போது ஹரி ஹரி என்று எழுந்திருக்கவேண்டும் ('உத்திஷ்ட சிந்தய ஹரிம்').
• 2. குளிக்கும்போது கேசவனின் நாமம் சொல்லி குளிக்க வேண்டும் ('வ்ரஜன் சிந்தய கேசவம்').
• 3. உண்ணும்போது கோவிந்தனை மனதில் நினைத்து உண்ண வேண்டும் ('புஞ்சன் சிந்தய கோவிந்தம்').
• 4. தூங்க போகும் முன் மாதவனை நினைக்க வேண்டும் ('ஸ்வபன் சிந்தய மாதவம்') .
இந்த நான்கு செயல்களையும் செய்வதால் எவருக்கும் எந்தவிதமான கஷ்டமோ நஷ்டமோ கிடையாது. மாறாக அமைதியான வாழ்க்கை நிச்சயமாக கிட்டும்.
இந்த நான்கு செயல்களையும் மக்கள் முந்தைய காலத்தில் தவறாமல் செய்து வந்தனர் என்பதை விளக்குமாப்போல ஆண்டாள் நாச்சியார் கோதையின் கீதை (திருப்பாவை பாசுரங்கள்) திகழ்கிறது.
1. துயில் எழும்போது ஹரி ஹரி என்பது புள்ளும் சிலம்பின்காண் என்கிற பாசுரத்தில் உள்ளத்துக்கொண்டு ''முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து ஹரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ'' (பாசுரம் - 6) என்கிறார்.
2. பெண்கள் எல்லாம் வந்து நாட்காலே நீராடி வந்து விட்டார்கள். தற்சமயம் தயிர் கடைந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கேசவனைப் பாடுதல் உன்காதில் விழவில்லையா?
"கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?" (பாசுரம் - 7).
3. பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து உண்பவர்கள் கூடாரை வெல்பவராகிய கோவிந்தனைப் பாடுகிறார்கள் (பாசுரம் - 27).
4. நன்கு தூங்க வேண்டுமானால் மாதவன் பெயரைச் சொல்லி இருப்பாள் போல் இருக்கிறது இந்தப் பெண். ஏமப் பெரும் துயில் மந்திரப் பட்டாளோ, மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ (பாசுரம் - 9).
மனிதன் தினசரி தவறாமல் செய்ய வேண்டிய செயல்களை, கோதை நாச்சியார் தனது திருப்பாவை பாசுரங்களில், மேற்கண்டவாறு பாடியுள்ளாா்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக