5 செப்., 2020

கருத்து மேடை : கொரானா பூச்சாண்டியைவிரட்டி அடித்த வசந்த் & கோ ஓனர் வசந்தகுமார் M. P.

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

கொரானா பூச்சாண்டியை
விரட்டி அடித்த வசந்த் & கோ ஓனர்
C
🔰

வாழும் போது மட்டுமல்ல, தன் இறப்பின் எதிர்வினையிலும் சாதனையை நிகழ்த்தி சென்றுள்ளார் வசந்தகுமார்!

கொரோனா மாயை அவர் விசயத்தில் மட்டும் எப்படி விலகி வழிவிட்டது பாருங்கள்!

# கொரோனாவில் அட்மிட்டாகி சிகிச்சை பெற்று பலனளிக்காமல் இறந்த ஒருவருக்கு மீண்டும் டெஸ்ட் செய்து கொரோனா இல்லை என சர்டிபிகேட் கொடுக்க முடியும் என்பதை முதன்முதலில் அப்பல்லோ நிருபித்துள்ளது! ( அதிலும் நாளைக்கு இது கோர்ட்டு,வழக்கு என்று போனால் பிரச்சினை வராதபடிக்கு ஒரு மழுப்பலான விளக்கம் வேறு)

# கொரோனாவில் இறந்தவரை வீட்டாரிடம் ஒப்படைக்க மாட்டோம், நாங்களே தூக்கிச் சென்று தகனம் செய்வோம் என்பதும்,மனைவி, குழந்தைகள், தாய், தந்தை கூட பார்க்கமுடியாது என்பதும் முதன்முதலாக முறியடிக்கப்பட்டுள்ளது.

# கொரானாவில் இறந்த ஒருவரின் இறுதி சடங்கில் பெருந்திரளான கட்சியினர்,தலைவர்கள், மக்கள் கலந்து கொள்ளமுடியாது என்பது தகர்க்கப்பட்டுள்ளது.

# கொரானாவில் இறந்தவருக்கும் குடும்பத்தின் பாரம்பரிய வழக்கப்படி சடங்குகள் செய்து முறைப்படி அடக்கம் செய்யமுடியும் என்ற அரிதிலும்,அரிதான முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது அவரது இறப்பு!

# கடும் ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமையிலும் இறுதி ஊர்வலம் மக்கள் நடந்துவர செய்ய வழக்கமான வகையில் செய்யமுடியும் என்பதற்கும் அவரது இறப்பு வழிசமைத்துக் கொடுத்துள்ளது!

ஓவராக கொரானா மாயை காட்டி இவ்வளவு நாள் மறுக்கப்பட்டதை யெல்லாம் தன் இறப்பில் சாதித்துள்ள அவரது இறப்பை ஒரு புரட்சிகரமான நிகழ்வாக – ஒரு அதிசயமாக - தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்!

இதை ஒரு தொடக்கமாக, முன்மாதிரியாக கொண்டு உங்கள் கொரானா அடக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவாருங்கள் ஆட்சியாளர்களே!

எவ்வளவு மூர்க்கமாகவும், முட்டாள்தனமாகவும் இத்தனை நாள் கொரானா பெயரில் அடக்குமுறை செய்தீர்கள்!

மதுபானக்கடைகள் திறப்பிலேயே கொரானா மாயை தவிடு பொடியானது! ’’தொட்டால் வரும், கைப் பட்டால் வரும் என்பதெல்லாம், கொட்டோகொட்டென்று கொட்டும் துட்டால் துடைக்கப்பட்டுவிடும்’’ என்று அம்பலப்பட்டுவிட்டதா? இல்லையா? இன்னும் கொரானாவைக் காட்டி அச்சுறுத்தி சாதாரண மக்கள் வாழ்க்கைக்கு சமாதி கட்டலாமா?

மறுக்கவில்லை.கொரானா என்பதும் ஒரு நோய். காசநோய் போன்ற எத்தனையோ நோய்களைப் போல அதுவும் ஒன்று! சும்மா அதைக் கொண்டு பிலிம் காட்டாதீர்கள் மக்களை வாழ்விடுங்கள். 

உங்கள் முட்டாள் தனத்திற்கு தவணை முறையில் தளர்வு தராமல் முழுமையாக தாருங்கள் என்பதை தான் வசந்தகுமார் அண்ணாச்சியின் இறப்பில் நடந்த சம்பவங்களும், மக்கள் கூட்டமும் உணர்த்தியுள்ளது என்பதை எளிய மக்களின் சார்பாகச் சொல்லவே இதனை எழுதினேன்.

நன்றி :

*சாவித்திரி கண்ணன்*
*பத்திரிகையாளர்*

மற்றும் 



கருத்துகள் இல்லை: