8 செப்., 2020

கட்டுரை நேரம் : மாமேதை ஐன்ஸ்டீனின் கடவுள் !

மாமேதை.ஐன்ஸ்டீனின் கடவுள்...

அமெரிக்காவின் பல பல்கலைக்கழகங்களில் ஐன்ஸ்டீன் சில மாநாடுகளில் கலந்து கொண்டபோது, மாணவர்கள் அவரிடம் கேட்ட
தொடர்ச்சியான கேள்வி:-
உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை உண்டா?
அவர் எப்போதும் அதற்கு இப்படித்தான்  பதிலளித்தார்: 
"நான் ஸ்பினோசாவின் கடவுளை நம்புகிறேன்" என்று.
ஸ்பினோசாவைப் தெரியாதவர்களுக்கு,  இந்த அற்புதமான விஷயங்கள் என்னை எந்த விதத்தில் மேம்படுத்தியதோ அதே வகையில் உங்களையும் மேம்படுத்தும் என்று நம்புகிறேன். 
பருச் டி ஸ்பினோசா ஒரு டச்சு தத்துவஞானி
போர்த்துகீசிய யூத வம்சாவளியைச் சேர்ந்தவர். பிரெஞ்சு தத்துவஞானி ரெனே
டெகார்ட்டுடன் அவரது காலத்தின் சிறந்த
பகுத்தறிவாளர்களில் ஒருவராகக்
கருதப்பட்டார். 
ஸ்பினோசா  ஆம்ஸ்டர்டாமில் பிறந்தார். இவரின் காலக்கட்டம் :  24 நவம்பர் 1632 - 22 பிப்ரவரி 1677 வரை.
அவரின் வைர வரிகளில் சில:-
இதுவே ஸ்பினோசாவின் கடவுளின் அல்லது இயற்கையின் இயல்பு: 
கடவுள் நம்மோடு பேசினால் இவ்வாறு தான் சொல்லியிருப்பார்:
* ஜெபிப்பதை நிறுத்துங்கள், உங்கள் மார்பில் அடித்துக்கொள்வதை நிறுத்துங்கள். 
நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றால், உலகில் வெளியே சென்று உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுறுங்கள்.
நான் உங்களுக்காகச் செய்த அனைத்தையும் நீங்கள் அனுபவிக்கவும், பாடவும், வேடிக்கையாக
ரசிக்கவும் விரும்புகிறேன்.
* நீங்களே கட்டிய இருண்ட, குளிர்ந்த கோயில்களுக்கு செல்வதை
நிறுத்துங்கள், அவைகளை  நீங்களே கட்டிவிட்டு  எனது வீடென்று அழைக்கிறீர்கள்.
எனது வீடு மலைகள், காடுகள், ஆறுகள்
ஏரிகள், கடற்கரைகளில் உள்ளது. அங்குதான் நான் வாழ்கிறேன், நான் உங்களுக்காக என்னிடம் உள்ள எல்லா
அன்பையும் அங்கே வெளிப்படுத்துகிறேன். 
*உங்கள் பரிதாபகரமான வாழ்க்கைக்காக
என்னைக் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள். உங்களிடம்  எதாவது தவறு இருப்பதாகவோ, நீங்கள் ஒரு பாவிகள் என்றோ, உங்களின் பாலியல் சார்ந்த பண்புகள் கெட்ட விஷயம்  என்றோ  நான் ஒருபோதும் சொல்லவில்லை.
பாலியல் உணர்வு , நான் உங்களுக்கு கொடுத்த பரிசு. அதை கொண்டு நீங்கள் உங்களின் காதலை, உங்களின் பரவசத்தை, உங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம். ஆகையால் அவர்கள் உங்களை நம்ப வைத்த அனைத்திற்கும் என்னை நிந்தனை செய்யாதீர்கள்.
*என்னால் சொல்லப்பட்டதாக புனிதமானதாக கருதப்படுகின்ற வேதங்களை படிப்பதை நிறுத்துங்கள். அவைகளுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
சூரியனின் உதயத்தில், பூமியின் இயற்கை காட்சிகளில், உங்களின் நண்பர்களின் பார்வையில், உங்கள் குழந்தைகளின் கண்களில்... நீங்கள் என்னை படிக்க முடியவில்லை என்றால், எந்தவொரு புத்தகத்தில் நீங்கள் என்னை கண்டறிய முடியாது.
இந்த விஷயத்தில் என் மீது நம்பிக்கை கொண்டு தொடர்ந்து கேள்வி கேட்பதை நிறுத்துங்கள். என் பணியை எவ்வாறு செய்யவேண்டும் என்று உங்களால் சொல்ல முடியுமா?
*என்னை கண்டு பயப்படுவதை நிறுத்துங்கள். நான்
உங்களை நியாயம் தீர்க்கமாட்டேன், உங்களை
விமர்சிக்கமாட்டேன், உங்களிடம் நான்
ஒருபோதும் கோபப்படுவதோ அல்லது உங்களை சங்கடப்படுத்துவதோ அல்லது உங்களுக்கு தண்டனை அளிப்பதோ இல்லை. நான் எப்போதும் தூய அன்பின் வடிவம்.
* என்னிடம் மன்னிப்பு கேட்பதை நிறுத்துங்கள். மன்னிக்க எதுவும் இல்லை. 
நான் உங்களை உண்டாக்கினேன் என்றால்... நான் உங்களை
உணர்ச்சிகள், இன்பங்கள், உணர்வுகள்
தேவைகள், வரம்புகள், முரண்பாடுகள்,
சுதந்திர விருப்பம் ஆகியவற்றால் நிரப்பி இருக்கிறேன், அப்படியானால் நான் எப்படி உங்கள் மீது குற்றம் சாட்ட முடியும்?
...
நான் உங்களுக்குள் எதை விதைத்தேனோ அதன் காரணமாக நீங்கள் எதிர்வினையாற்றும் போது , நீங்கள் இந்த வழியில் இருக்கிறீர்கள் என்பதற்காக நான் எப்படி உங்களை தண்டிக்க முடியும்?

நான் உங்களை உருவாக்கியவன் என்றால், தவறாக நடந்து கொள்ளும் என்
குழந்தைகள் அனைவரையும் நித்திய
காலத்திற்கு எரிக்க ஒரு இடத்தை உருவாக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
எந்த வகையான கடவுளால் அதைச் செய்ய முடியும்?
*எந்தவொரு கட்டளைகளையும், எந்த
வகையான சட்டங்களையும் மறந்துவிடுங்கள்;
அவை உங்களை கையாளுவதற்கும்,
உங்களை கட்டுப்படுத்துவதற்கும், உங்களிடம் குற்ற உணர்வை ஏற்படுத்துவதற்கும் மட்டுமே ஏய்க்கப்பட்டவை ஆகும்.
உங்கள் சகாக்களுக்கு மதிப்பளிக்கவும், எவைகளை மற்றவர்கள் உங்களுக்கு செய்யக்கூடாது என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அவைகளையே நீங்கள் மற்றவர்களுக்கு செய்ய
வேண்டாம். நான் கேட்கும் ஒரே விஷயம்
என்னவென்றால், உங்கள் வாழ்க்கையில்
நீங்கள் கவனம் செலுத்த வேண்டும், உங்கள் விழிப்புணர்வு நிலையே உங்கள் வழிகாட்டியாகும்.
* என் அன்பானவர்களே!
நீங்கள் வாழும் இந்த வாழ்க்கை என்பது ஒரு தேர்வு அல்ல, படிநிலையும் அல்ல, ஒப்புவித்தலும் அல்ல, சொர்க்கம் செல்வதற்கான முன்னுரையும் அல்ல,
இங்கு இப்போது இருப்பது இந்த வாழ்க்கை மட்டுமே, அதில் நீங்கள் வாழ்வது மட்டுமே உங்களின் கடமை.
நான் உங்களை முற்றிலும் சுதந்திரம் உள்ளவர்களாக ஆக்கியுள்ளேன், வெகுமதிகள் இல்லை. தண்டனைகள் எதுவும் இல்லை, பாவங்களும் இல்லை, 
புண்ணியங்களும் இல்லை. 
உங்கள் பிறப்பை யாரும் இங்கே
குறிப்பெடுத்து கொள்வதும் இல்லை, நீங்கள் வாழ்வதை யாரும் இங்கே
பதிவு செய்து கொண்டிருப்பதும் இல்லை. நீங்கள் வாழும் இந்த வாழ்க்கையை சொர்க்கமாக்கவோ, நரகமாக்கவோ உங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.
*இந்த வாழ்க்கைக்குப் பிறகு ஏதாவது
இருக்கிறதா என்று என்னால் சொல்ல
வேண்டுமானால், ஆனால் அதற்கு நான் உங்களுக்கு ஒரு குறிப்பை (tip) கொடுக்க முடியும். 
"அப்படி ஒரு வாழ்க்கை இல்லாதது போல் வாழுங்கள்"
"இந்த வாழ்க்கை நீங்கள் அனுபவிக்க, நேசிக்க, இருப்பதற்கான ஒரே வாய்ப்பு போல வாழுங்கள்"
* எனவே, அப்படிப்பட்ட ஒன்று எதுவும் இல்லை என்றால், கவலை விடுங்கள், ஏனெனில் நான் உங்களுக்கு வழங்கிய வாய்ப்பை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள். 
ஒருவேளை அப்படிப்பட்ட ஒன்று  அங்கே இருந்தால், நீங்கள் நன்றாக நடந்து கொண்டீர்களா? இல்லையா? என்று நான் உங்களிடம் கேட்க மாட்டேன் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 
இப்போது கேட்பதை போல் அப்போதும் நான் உங்களிடம் கேட்பேன், 
இங்கே உங்களுக்கு பிடித்திருக்கிறதா?... உங்களுக்கு வேடிக்கையாக இருக்கிறதா? .. நீங்கள் எதை மிகவும் ரசிக்கீறீர்கள்? நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? .... 
*என்னை நம்புவதை நிறுத்துங்கள்; நம்புவது என்பது அனுமானிப்பது, யூகிப்பது, கற்பனை செய்வது. 
நீங்கள் என்னை நம்புவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை, நீங்கள் உங்கள் காதலியை முத்தமிடும்போது, உங்கள் சிறுமியுடன் விளையாடும்போது, உங்கள் நாயை நேசிக்கும்போது, கடலில் குளிக்கும் போது நீங்கள் என்னை உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
என்னைப் புகழ்வதை நிறுத்துங்கள். 
நான் என்ன வகையான அகங்கார கடவுள் என்று நினைக்கிறீர்கள்?
* உங்கள் புகழ்ச்சிகளில் நான் சலித்துவிட்டேன், உங்களின் நன்றிகளின் தெரிவிப்பில் சோர்ந்து விட்டேன்.
நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளவராக  நீங்கள் உணர்கிறீர்களா? அப்போது ஒன்றை செய்யுங்கள்..
உங்களை, உங்கள் உடல்நலத்தை, உங்கள் உறவுகளை, உங்களைச் சுற்றியுள்ள உலகம் ஆகியவற்றைக்
கவனித்துக்கொள்வதன் மூலம் அதை
நிரூபிக்கவும். 
நீங்கள் அவைகளை பார்த்ததும் அதிர்ச்சி கொள்கிறீர்களா?... அப்போதும் உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்! அதுவே என்னைப் புகழ்வதற்கான வழி.
*விஷயங்களை சிக்கலாக்கி கொள்வதை நிறுத்துங்கள்.
என்னை பற்றி உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கப்பட்டதோ அதைவே கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லி கொண்டு இருக்காதீர்கள்...
ஒரு விஷயம் தெளிவாக இருக்கிறது அது என்னவென்றால், நீங்கள் இங்கே இருக்கிறீர்கள், நீங்கள் உயிருடன்
இருக்கிறீர்கள், இந்த உலகம் அதிசயங்கள்
நிறைந்தது.
இவைகளை விட உங்களுக்கு இன்னும் அற்புதங்கள் என்ன தேவை? ஏன் பல விளக்கங்கள்? 
"என்னை வெளியே தேடாதீர்கள், நீங்கள்
என்னைக் கண்டடைய மாட்டீர்கள். என்னை உங்களுக்குள் தேடுங்கள் ... நான் உங்களின் இதய துடிப்பாக 
இருக்கிறேன் ".

--- பருக் டி ஸ்பினோசா

நன்றி : திரு நேயம் சத்யா,  தத்துவங்களத் தேடி,  வாட்ஸ்அப் குழு மற்றும் 
இதற்கான ஆங்கில கட்டுரையை தந்து இதை தமிழாக்கம் செய்ய உதவிய திரு.சௌந்தர் ஐயா அவர்களுக்கும். 


கருத்துகள் இல்லை: