தோல்
எலும்பு (திருப்புகழ் - 715)
24,295 views
•Premiered Sep 17, 2020
17.1K subscribers
SUBSCRIBED
மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்
பாண்டிச்சேரி ப.சம்பந்தம் குருக்கள்
யாழிசை -
பண்ணப்பட்டு S.வெங்கடேசன்
முழவிசை -
சென்னை K.மாதேஷ்வரன்
முகர்சிங் -
சிதம்பரம் S.ராஜேந்திரன்
ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் இயக்கம் -
ரோஹித் சுப்பிரமணியனின்
தயாரிப்பு - வள்ளுவர் வள்ளலார் வட்டம்
தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு
சோரி பிண்ட மாயு ருண்டு வடிவான
தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து
சோரு மிந்த நோய கன்று துயராற
ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்ச
னார ணங்க ளாக மங்கள் புகழ்தாளும்
ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளு மங்கை
யாடல் வென்றி வேலு மென்று நினைவேனோ
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பை
வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே
மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து
வாழ்பெ ருஞ்ச ராச ரங்க ளுறைவோனே
வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு
வேடர் மங்கை யோடி யஞ்ச அணைவோனே
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற
மேரு மங்கை யாள வந்த பெருமாளே
------
தோல், எலும்பு, சீழ், நரம்பு, பீளை, அடைத்திருக்கும் கோழை, மேலே பொங்கும் ரத்தம் - இவையாவும் ஒரு பிண்டமாய் உருண்டு ஒரு வடிவம் ஏற்பட்டு, பருத்த, பாவத்துக்கு இடமான, சரீரத்தை வீணாகச் சுமந்து, நான் மெலிவுற்று, தளர்கின்ற இந்த பிறவி நோய் நீங்கி என் துயரம் முடிவுபெற, விஷத்தை உண்ட எம் தலைவன் சிவன், எல்லா உலகங்களையும் உண்ட திருமால், பிரமன், மற்றும் வேதங்கள், ஆகமங்கள் யாவும் புகழ்கின்ற உன் திருவடியும், திருமுகங்கள் ஆறையும், பன்னிரண்டு தோள்களையும், அழகிய கரத்தில் விளங்கும் வெற்றி வேலாயுதத்தையும் என்றைக்கு நான் தியானிப்பேனோ? இளம்பிறையைச் சூடிய சிவனும், வேத மந்திர ஸ்வரூபியுமான அம்பிகை, கலைமகளை ஒரு கூறாகவும், ஐந்து மலர்ப் பாணங்களை உடையவளுமான, பார்வதி தேவியும் தந்தளித்த பால முருகனே, ஐந்து மாயை*1, ஐந்து வேகம்*2, ஐந்து பூதம்*3, ஐந்து நாதம்*4 இவை வாழ்கின்ற அசையும் பொருள்கள், அசையாப் பொருள்கள் யாவிலும் உறைபவனே, வேண்டிய சமயத்தில் அன்பு மிக்கு வந்த ஒற்றைக் கொம்பர் விநாயகமூர்த்தியாம் யானையைக் கண்டு பெண் வள்ளி பயந்தோடியபோது அவளை அணைந்தவனே, வீர லக்ஷ்மி, பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மி, பூமாதேவி இவர்கள் யாவரும் மங்களமாக வீற்றிருக்கிற உத்தர மேரூரில்*5 ஆட்சிபுரியும் பெருமாளே.
-----
Initiative of Ingersol
Grateful thanks to INGERSOL
SELVARAJ and YouTube and all the others who
made this video possible
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக