நீர் மாசு ஓர் அறிமுகம்
சூலை 10, சனிக்கிழமை
இன்று மாலை 6.00 - 7.00
உரை: திரு. நித்தியானந்த் ஜெயராமன்
சமூக சூழலியல் செயற்பாட்டாளர்
2015யில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) மற்றும் சில தனியார் அமைப்புகள் இணைந்து வெளியிட்ட ஆய்வு அறிக்கையானது இந்தியாவில் தற்போது உள்ள 80 சதவீதமான மேற்பரப்பு நீர் (Surface Water) பயன்படுத்த முடியாதவாறு மாசடைந்து விட்டதாக கூறுகிறது. தற்போது இது 90 சதவீதமாக உயர்ந்து இருக்கலாம் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. அதே அறிக்கை பெரு நகரங்களில் தினமும் 61,948 மில்லியன் லிட்டர் கழிவு நீர் உருவாகுவதாகவும் கூறுகிறது...
தற்போது நம் வாழ்விடத்தைச் சுற்றி பல நீர்நிலைகள் இருந்தாலும் எந்த ஓர் நீர் நிலையிலும் நம்மால் நீரை கையில் எடுத்து அருந்தும் நிலையில் இல்லை என்பதே வருத்தமான உண்மை. கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நமது நீர் ஆதாரங்களை எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தொடர்ந்து மாசாக்கி வருகிறோம்.
ஆக நீர் மாசு என்பது சாதரணமாக கடந்து செல்லும் விடயம் கிடையாது. வரும் தலைமுறைகள் இங்கு நன்கு நாமும் அரசும் நீர் மாசை குறைக்க தீவிரமாக முன்னெடுப்புகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..
வாருங்கள் இந்நிகழ்வில் நீர் மாசின் காரணிகள், சமகால நிலை மற்றும் தீர்வுகள் குறித்து விரிவாக சமூக சூழலியல் பார்வையில் அறிந்து கொண்டு செயலாக்குவோம்...
நிகழ்வில் இணைய:
https://suzhalarivom.my.webex.com/meet/environment
முகநூல் நேரலையில் காண:
https://www.facebook.com/KnowAboutOurEnvironment/?ti=as
அலைப்பேசி வாயிலாக இணைய:
044-6480-3377 India Toll (Chennai)
Access code: 126 245 1512
#சூழல்அறிவோம்
#நீர்மாசு
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக